Thirukolur Penpillai Rahasyam-53







*காட்டுக்குப் போனேனோ பெருமாளைப்
போலேகைகேயி, கேகய நாட்டு மன்னர் அஸவபதியின் மகளும், தசரத மன்னனின் மூன்று
மனைவிகளுள் இளையவர் ஆவார். அழகும், வீரமும், விவேகமும் ஒரு சேர உருவான
பெண். பரதன்

இவருடைய மகன்ஆவார். ஸ்ரீராமனிடம் அதிக அளவு அன்பும் பாசமும்
கொண்டவர்.தசரதச் சக்ரவர்த்தி, இராமனுக்கு முடிசூட்ட எண்ணம் கொண்டு,
மந்திரி
களுடனான ஆலோசனை முடிந்து இராமனுக்கு முடிசூட்ட நாளும் குறிக்கப்
பட்டது. இராமனுக்கு முடிசூட்டு விழா என்று முரசுமுழங்கியது.
நாடே விழாக்கோலம் கொண்டு மக்கள் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். எல்லோரையும் விட இச்
செய்தியால் அதிகம் மகிழ்ந்தவர் கைகேயி. பெருமிதம் கொண்டார்.ஆனால்,
சிலந்தி வலையில் சிக்கிய சிறு பூச்சியைப் போல், மந்தரை என்றொரு கூனி
வீசிய வலையில்
சிக்கிய கைகேயியின் மனமும் குணமும் முற்றிலுமாக மாறியது.  இராமனுக்கு
நாளை முடிசூட்டப் போகும் கனவில் மகிழ்ந்திருந்த அரசன் தசரதன் இரவு
கைகேயியைக் காணவந்தார். அலங்கோலமாய் அமர்ந்
திருந்த கைகேயியின் நிலை கண்டு பதறினான். “என்ன ஆயிற்று?”- என்று கேட்ட மன்னனிடம்,
“எனக்குத் தாங்கள் இரு வரம் தருவதாய் முன்பு வாக்களித்தீர். இன்று அதை
நான் கேட்கின்றேன். ஒன்று,
இராமனுக்குப் பதிலாக என் மகன் பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும்.
இரண்டு, 14 வருடங்கள் இராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும்.”- என்றும்
தசரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்டாள் கைகேயி. *












*கைகேயி தன் முடிவில் உறுதியாய் நின்றாள். தசரதன் கொடுத்த
 வாக்கை மீற முடியாமல் தவித்தான்.
இரவெல்லாம் மன்றாடியும், தசரதனால் கைகேயியின் மனதை மாற்ற இயலவில்லை. வேறு
வழியின்றி
வரத்தை வழங்கினார். தாயிடம் ஆசீர்வாதம் வாங்க வந்த ஸ்ரீஇராமன், தன் தந்தை
மற்றும் தாயின் நிலை கண்டு பதறி, நடந்ததை வினவ, கைகேயியும் நடந்தவற்றைக்
கூறினாள்.ஆழ்ந்த மௌனத்திற்கு பின், சற்றும் பதறாமல், ஸ்ரீ இராமன்
“சரியம்மா!தம்பி பரதன் நாடாளட்டும். நான் கானகம் புறப்படுகிறேன்.”-என்று
கூறி, தாயிடமும்  தந்தையிடமும் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு தன் அறைக்குச்
சென்றார்.திருக்கோளூர் அம்மாள்,“தந்தையின் வார்த்தைக்கு மதிப்புக்
கொடுத்து, மறுப்பேதும் கூறாமல், வார்த்தையில், செயலில், இதயத்தில்தெளிவு
காட்டி, ஸ்ரீ இராமன் காட்டிற்குச் சென்றாரே, அதுபோல் ஒரு
தெளிவைப்பெருமாளிடம் நான் கொண்டுள்ளேனா?”
–என்று 
வினவுகிறார்.========********========********========********=======kAttukkup
pOnEnO perumALaip pOlEKing Dasaratha of Ayodhya decided to coronate Rama as
the king and he informed everyone in the court and the news spread all over
the kingdom and people started to celebrate the occasion they were waiting
for. With the approval of the sages and ministers of the court, he sets the
date to crown Sri Rama.When the message of Rama’s coronation was passed to
Kaikeyi, Kaikeyi was delighted and as happy as she would have been if it
was her own son, Bharata's coronation. But due to the ill advice of
Mantara, Kaikeyi had a change of heart and demanded two boons from
Dasaratha. Fuelled with envy and jealousy as a result of Mantara’s words,
she asked that her son Bharatha be crowned as the king instead of Rama and
that Rama be sent to the forest for 14 years. Hearing this, Dasharatha fell
into a swoon and passed the night in a pitiable condition in Kaikeyi's
palace.The night before the coronation ceremony, Rama performed a vratam
along with Sita and prayed to Lord Ranganatha. When Rama came to the palace
of Kaikeyi to seek her blessings, he saw his father and mother Kaikeyi
sitting devastated. When Rama asked for the reason, she told Him about the
two boons and that it was a royal decree that He goes to the forest. King
Dasaratha’s promise has to be kept and he has to grant the boons Kaikeyi
asked! Rama immediately accepted it and with great pleasure prepared to go
to the forest.Thirukkolur Ammal is asking "Did I show steadiness in my
heart and mind like Rama showed, in following His father's word and gave up
the kingdom and go to the forest?"*

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
* Audio Link:*

*http://www.radhekrishnasatsangam.com/audio2015/drops/2016Feb/penpillai-m4a/tpr53.m4a
<http://www.radhekrishnasatsangam.com/audio2015/drops/2016Feb/penpillai-m4a/tpr53.m4a>
 *

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! *

*வாழிய பாரதமணித் திருநாடு!   *

*வணக்கம்* *சுப்பு*

*[image: வெல௠ல௠ம௠அளவில௠விட௠மினà¯
வெக௠ளியை..................... Brasil00_1]  *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BrQV7X321xdbF8759wuj4LhnZciv7rNDoL26CCWRC73MA%40mail.gmail.com.

Reply via email to