Thirukolur Penpillai Rahasyam-54
*கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலேஇங்கு “திருவடி” என்று திருக்கோளூர்
அம்மாள் அழைப்பது “சிறிய திருவடி”யான ஹனுமனை.இந்தியாவின் பழம்பெரும் இதிகாசமான
இராமாயணத்தில், ஸ்ரீ இராமனும் இலட்சுமணனும், இராவணனால் கடத்திச் செல்லப்பட்ட
சீதையைத் தேடி காடு முழுதும் அலைந்தனர். சீதையைத் தேடி அலைந்த
இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் கிஷ்கிந்தையின்
அரசனும், வானரர்களின் அரசனுமான சுக்கிரீவனின் நட்பு கிடைத்தது. இராமனுக்கு
உதவி புரிய விரும்பிய சுக்ரீவன், நான்கு திசைகளிலும் வானரக் கூட்டங்களை
அனுப்பி, சிதையின் இருப்பிடம் குறித்து அறிய அனுப்பினான்.தெற்குத் திசையில்
தேடிச் செல்ல, ஹனுமான், ஜாம்பவான், நிலா மற்றும் சில வானரங்களை, அங்கதனின்
தலைமையில் அனுப்பினான். ஒரு மாதத்திற்குள் அவர்கள் சீதையின் இருப்பிடம்
குறித்து அறிந்து வர ஆணையிட்டான். கடல் தாண்டிச் சென்ற ஹனுமான், இலங்கை
அடைந்து, அசோகவனத்தில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள சீதையைக் கண்டார். இராமன்
தன்னிடம் கொடுத்த கணையாழியை சீதையிடம் வழங்கி, தான் இராமனின் தூதுவன் என்று
அறிமுகப்படுத்திக் கொண்டார். சீதைக்கு நம்பிக்கையும், ஆறுதலும் கூறிய பின்,
சீதை கொடுத்த சூளாமணியை எடுத்துக் கொண்டு ஸ்ரீ இராமனிடம் வந்தார்.ஹனுமானின்
வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஸ்ரீ இராமனிடம், “"கண்டனன், கற்பினுக்
கணியைக் கண்களால்" என்கிறார் ஹனுமான். “சீதையை” என்று தொடங்கி விட்டால் இராமன்
சீதைக்கு என்ன நேர்ந்து விட்டதோ என்று பதை பதைத்து
விடுவாரோ என்று எண்ணி, இராமனுக்கு மணித்துளி மன வருத்தத்தையும் தான்
அளிக்கக் கூடாதெனக் கருதியும், தன்சொல்லில் ஐயம் எழக்
கூடாதெனக் கருதியும் ஹனுமான் “கண்டேன்” என ஆரம்பித்தார்.ஹனுமானின்
வார்த்தைகளைக் கேட்டு மன மகிழ்ந்த ஸ்ரீ இராமன், அவனை ஆரத் தழுவிக்
கொண்டான்.திருக்கோளூர் அம்மாள், “ஹனுமனைப் போல் பெருமானுக்குத் தான் சேவை
செய்து அவரை மனம் மகிழச் செய்தேனா?” – என்று
வினவுகிறார்.
=========********========********========********========********=====
*
*kaNdu vandhEn enREnO thiruvadiyaip pOlEHere, “Thiruvadi” refers to
“Hanuman”.In the great Indian Epic, Ramayana, when Rama and Lakshmana went
in search of the abducted Sita, made friendship with King Sugriva and with
the help of the monkey clan, they searched for Sita. Sugriva sent the
monkeys in the four directions to find the place where Sita had been
kept.Knowing that Ravana is the one who abducted Sita, and guessing that
there is a greater possibility for Sita to be taken across the ocean, to
Sri Lanka, King Sugriva sent Hanuman, Jambavan and Nila towards South,
under Angadha as their leader and gave them one month time to know the
whereabouts of Sita. Knowing that Hanuman would be able to find Sita, Rama
gave him a ring so that Sita would understand that Hanuman is a messenger
from her Lord Rama.Learning from Sambhati that Sita is imprisoned in Sri
Lanka; Hanuman was selected by the monkey clan to leap across the ocean to
meet with her. Meeting Sita in Lanka, Hanuman showed her the ring from Rama
and delivered the message which Lord Rama wanted Hanuman to be delivered to
Sita when he sees her, in order to make her feel better and stay
confident.Returning to Rama, he told Him that he had seen Sita ("drushTA
maya sItA"). The phrase “Drushta Maya Sita” means “Saw I, Seetha”.
Realizing that starting a sentence with “Sita…”, the ensuing gap of even
those few seconds will be filled with anxiety for Rama. So, instead, he
mitigated the anxiety by saying “Saw I, Sita”. By doing this, beloved
Hanuman relieved Lord Rama from the moments filled with only distraught and
anxiety. He also gave Rama the head ornament from Sita that She had given
him. Seeing the ornament and hearing the message, Rama became very pleased
and embraced Hanuman tightly.Thirukkolur Ammal is asking "Did I do service
to the Lord like Hanuman did?"*
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
* Audio Link:*
http://www.radhekrishnasatsangam.com/audio2015/drops/2016Feb/penpillai-m4a/tpr54.m4a
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! *
*வாழிய பாரதமணித் திருநாடு! *
*வணக்கம்* *சுப்பு*
*[image: வெல௠ல௠ம௠அளவில௠விட௠மினà¯
வெக௠ளியை..................... Brasil00_1] *
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BpFrkU7J3EPwB1eF5WQwxHaVy9bE9DNBwBhnCdko%3D0fMw%40mail.gmail.com.