*19. கங்கா விசர்ஜன மூர்த்தி* *சகரன் எனும் அரசன் அயோத்தி நகரை ஆண்டுவந்தான். அவன் அஸ்வமேத யாகம் செய்ய ஒரு குதிரையைக் கொணர்ந்தான். அக்குதிரை இருந்தால் தானே யாகம் நடைபெறும் அதைத் தடுக்க வேண்டிக் குதிரையை பாதாளத்தில் கபில முனிவர் அருகே கட்டி வைத்தான். அயோத்தி மன்னன் குதிரையைத் தேடிக் கொண்டுவரும் படி தமது அறுபதினாயிரம் மக்களையும் பணிந்தார். *
*பாதாளத்தில் முனிவர் அருகே குதிரையைக் கண்ட அவர்கள் முனிவரே கள்வன் என முடிவு கட்டினர். உடன் முனிவர் கண்விழிக்க, அனைவரும் சாம்பலானாா்கள். இச் செய்தி கேள்விப்பட்ட மன்னன் தன் மகன் அஞ்சுமானை அனுப்பினார். அஞ்சுமானும் கபிலரிடம் சென்று உண்மையைக் கூறிக் குதிரையை மீட்டுத் தன் தந்தையின் யாகம் நிறைவேற உதவினான். அவனது வம்சாவளியில் வந்தவனே பகிரதன் ஆவான். அவன் தனது முன்னோர்க்கு ஏற்பட்ட நிலையை எண்ணி நான்முகனை நோக்கித் தவமிருந்தான். நான்முகன் தோன்றி, கங்கையால் உன் முன்னோர்கள் மோட்சமடைவர் எனவே சிவனை நோக்கித் தவமிருக்கச் சொல்லி மறைந்தார். சிவனை நோக்கித் தவமிருந்தான் பகிரதன்.சிவபெருமான் கேட்ட வரம் கொடுத்தார். பின் கங்கையை நோக்கித் தவமிருந்தான். கங்கையோ தன்னை அடக்கச் சிவபெருமானால் மட்டுமே முடியும் எனவே மறுபடியும் சிவனை நோக்கித் தவமியற்றும் படி கூறினார். மறுபடியும் சிவன் கேட்ட வரம் கொடுத்தார், உடன் கங்கை வந்தார். சிவபெருமான் அவரை அடக்கும் பொருட்டுத் தனது தலை முடியில் அணிந்தார். இதனையறியாப் பகிரதன் பதறினார். பின் சிவபெருமான் தன் தலை முடியில் இருந்த கங்கையில் இருந்து சிலதுளிகள் பகிரதன் கைகளில் விட்டார். அந்தச் சில துளிகளும் வேகத்துடன் வந்து ஐந்து முனிவர்கள் இயற்றிய யாகத்தை அழித்தது, அதனால் அம்முனிவர்கள் கங்கையைத் தம் உள்ளங்கையில் வாங்கி உட்கொண்டனர். பகிரதன் கங்கையைக் காணாது திகைத்தான். பின் முனிவர்களை வணங்கி நடந்ததைச் சொல்லி, கங்கையைத் திருப்பித் தர வேண்டினான். அம்முனிவர்களும் இசைந்து தம் செவி வழியாக விட்டனர். அதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் ஏற்பட்டது. பகிரதன் கங்கையைத் தம் முன்னோர்களின் சாம்பல் மீது தெளிக்க அவர்கள் சொர்க்கம் அடைந்தனர்.பகிரதன் கொண்டு வந்ததால் கங்கைக்குப் பகீரதி என்ற பெயர் ஏற்பட்டது. கங்கையைத் தனது சடையில் ஏற்று வழிபாட்டிற்குச் சிறு துளி கொடுத்து வழி காட்டியதால் சிவபெருமானுக்குக் கங்கா விசர்ஜன மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. அவரைத் தரிசிக்க கேதார் நாத் செல்ல வேண்டும். ஆறு மாத காலம் கோவிலில் வழிபாடுகள் நடைபெறும். பனிமழையால் ஆறுமாதம் மூடப்பட்டிருக்கும். உமை சிவனிடம் இடப்பாகம் பெற்ற தலமே கேதார்நாத் ஆகும். இங்கு கோயில் கொண்டுள்ள கேதாரேஸ்வரரை வணங்கி அங்குள்ள புனித நீரை வீட்டில் நடைபெறும் சுபகாரியங்களுக்குப் பயன்படுத்தினால் சுபமாகும். வெண்தாமரை அர்ச்சனையும், எள்ளோதரை நைவேத்தியமும் அமாவாசை, திங்கள் கிழமைகளில் செய்தோமானால் பிதுர் தோஷம் சரியாகும். அவர்கள் சொர்க்கம் செல்வர். மேலும் இங்கிருந்து கொண்டு செல்லும் நீரை வெள்ளிக்கலசத்தில் வைத்து பூஜிக்கக் குபேர சம்பத்து கிட்டும் என்பது ஐதீகம். **ஆகாய கங்கையைச் செஞ்சடையில் தாங்கி அதனைப் பூமியில் விடுவித்த கோலம் கங்கா விசர்ச்சன மூர்த்தி வடிவம். சடை, கொன்றை, கூவிளமாலை, மதியம் சூடிக் கங்கையை ஏற்று அருள் குறிப்புடன் விளங்கும் வடிவம். காட்சி, மயிலாடுதுறை, திருக்கடவூர், திருப்பனந்தாள், திருமீயச்சூர் ஆகிய ஆலய தேவகோட்டத்தில். கேதாரம். வைத்திச்சுவரன் கோவில். * *கங்காதேவியானவள் கடுமையான வேகத்துடன் உலகை அழிப்பதுபோல் பாய்ந்து வந்தபோது, புவனாதிபதியான சிவபெருமான் , அவளது சீற்றத்தைத் தடுத்துத் தனது திருச்சடையில் ஏற்றதால் கங்காதரன் எனப்பட்டார். கங்கை வந்த வேகம் என்ன! அவளை அநாயாசமாகத் தடுத்த இலாவகம் தான் என்னே! திருஞான சம்பந்தர் சொல்வதைக் கேளுங்கள்.* *" கடுத்து வரும் கங்கை தன்னைக் கமழ் சடை ஒன்று ஆடாமே தடுத்தவர்"என்கிறார். அதாவது, கங்கையைத் தடுத்தபோது அவரது சடைமுடி ஒன்று கூட அசையவில்லையாம்.* *கங்கையைச் சிரத்தில் ஏற்றத்தைக் கண்டு உமாதேவி, சுவாமியிடம் ஊடல்கொண்டாளாம். அவளது கோபத்தைத் தீர்க்கவேண்டி, சடையில் இருப்பது கங்கை நதி என்றும், உலகைப் பேரழிவிலிருந்து காப்பதற்கே தாம் அவ்வாறு அதனை ஏற்றதாகவும் சொல்லி அவளை சமாதானம் செய்ய முயல்கிறார் பரமன்.* *அப்பர் பெருமானோ இன்னும் ஒரு படி மேலே சென்று, இக்காட்சியினைவிவரிக்கிறார். சுவாமியின் விளக்கத்தால் அம்பிகை சமாதானம் அடைந்தவளாகக் காணப்படவில்லை. இவர்தான் ஆடல்,பாடல் எல்லாவற்றிலும் வல்லவர் ஆயிற்றே. கான ந்ருத்த சங்கரர் என்று ஒரு பெயரும் உண்டு அல்லவா? கானத்தால் உமையைச் சமாதானப் படுத்த முயலுகிறார். அதுவும் சாம கானம பாடி அவளது ஊடலைத் தீர்க்க விழைகிறார். உடனே அந்த கானத்திற்கேற்ப ஆடவும் செய்கிறாராம். இப்படிப்பட்ட அருமையான வருணனை, அப்பர்பெருமானின் திருவதிகை வீரட்டானத் திருப்பதிகத்தில் ஒரு பாடல் மூலம் நமது சிந்தையை மகிழ்விக்கிறது. இதோ அப்பாடல்:* *சூடினார் கங்கையாளைச் சூடிய துழனி கேட்டு அங்குஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்கவேண்டிப்பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலேஆடினார் கெடிலவேலி அதிகை வீரட்டனாரே.* *இந்த ஆதி தம்பதிகளின் ஊடல் காட்சி, பல சோழர்கால ஆலயங்களில் கருவறைச் சுவற்றில் சிற்ப வடிவில் காணப் படுகிறது. இதனை, கங்கா விசர்ஜன மூர்த்தி எனப் பெயரிட்டு அழைப்பர். பேரளத்திற்கு அருகில் உள்ள திருமீயச்சூர் ஸ்ரீ மேகநாத சுவாமி ஆலயத்தில் அற்புத வடிவில் அமைக்கப்பட்டுள்ள சிற்பத்தின் வடிவழகையே மேற்கண்ட படத்தில் காண்கிறீர்கள். பெருமான், கோபம் கொண்ட அம்பிகையின் முகவாயைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்ப முயல்கிறார். இச்சிற்பத்தை ஒருபுறம நின்று பார்த்தால், அம்பிகையின் முகத்தில் ஊடலால் வந்த கோபமும், மறுபுறம்நின்று பார்த்தால், ஊடல் தீர்ந்தவளாகவும் காணப்படுகிறாள். இத்தெய்வீகக் காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.நேரில் சென்று தரிசித்துக் கண் பெற்ற பயனைப் பெற வேண்டும்.* <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> செயப்படு பொருளும் நீயே போற்றி! சொந்தாமரைப் பூம்பாதம் போற்றி! அற்புதக் கற்பகக் களிறே போற்றி! முப்பழம் நுகரும் அப்பனே போற்றி! இப்பொழுது என்னை ஆட்கொள் போற்றி! தாயாய் எனக்கும் எழுந்தருள் போற்றி! ஓம்நமசிவய! *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! * *வாழிய பாரதமணித் திருநாடு! * *வணக்கம்* *சுப்பு* [image: image.png] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2Bq-qFgyc9vpJv-mapb3-bbPnrVmkVGH63X7J5VPO45XEg%40mail.gmail.com.
