‘கிருமிநாசினி’ப் புரட்சி! Ignaz Semmelweis *[image: An engraved portrait of Semmelweis: a mustachioed, balding man in formal attire, pictured from the chest up.]*
*பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் லண்டன் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெரும்பாலானவர்கள் இறந்தனர். அதற்குக் காரணம், கிருமித் தொற்றுதான் (செப்டிக்). அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கைகள், சரியாகச் சுத்தம் செய்யப்படாத உபகரணங்கள், ‘பாண் டேஜ்கள்’, மருத்துவமனையில் நிலவிய பொதுவான சுகாதாரக் கேடு ஆகியவற்றின் காரணமாக கிருமித் தொற்று ஏற்பட்டது.* *கர்ப்பிணிகளும் கூட பெரும்பாலும் மருத்துவமனையை விட வீட்டிலேயே குழந்தை பெற விரும்பினர். காரணம் அதிகமான குழந்தைகள் ‘பியூர்பெரல் பீவர்’ என்ற காய்ச்சலால் இறந்ததுதான். மகப்பேறு மருத்துவமனைகளில் சிசுக்களின் இறப்புக்கு அது ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.* *அடுத்து 1850ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. வியன்னா பொது மருத்துவமனையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான இக்னாஸ் செம்மல்வீஸ், ஒரு சுத்திகரிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். நோயாளிகளைத் தொடுவதற்கு முன் அனைத்து மருத்துவ மாணவர்களும், அறுவை சிகிச்சை நிபுணர்களும் தங்கள் கைகளை கல்சியம் குளோரைட் திரவத்தில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும் என்று இக்னாஸ் கூறினார். அதன் மூலம், இரண்டே ஆண்டுகளில் மருத்துவ மனைகளில் கிருமித் தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் அளவு 90 சதவீதம் குறைந்தது.* *இக்னாஸின் முறை நல்ல பலனைக் கொடுத்த போதிலும், மருத்துவர்கள் அவரது முறையை ஏற்க அதிக ஆர்வம் காட்டவில்லை. அவரைக் கிண்டலடிக்கவும் செய்தனர்.* *கிருமிநாசினி முறையை முயற்சி செய்த அடுத்த நபர், கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறுவை சிகிச்சை பேராசிரியரான ஜோசப் லிஸ்டர். உயிருள்ள திசுக்களை நுண்ணுயிர்கள் பாதிக்கின்றன என்ற லூயி பாஸ்டியனரி கொள்கையை அவர் ஏற்றார். அந்த மாதிரியான கிருமிகளைக் கொல்வதற்கான ஒரே வழி, குறிப்பிட்ட உடல் பகுதி முழுவதும் கிருமிநாசினி இடுவதுதான் என்று லிஸ்டர் கருதினார்.* *காயப் பகுதிகளில் அவர் ‘கார்ப்பாலிக்’ அமிலத்தை இட்டார். கொதிக்கும் நீரில் இடப்பட்ட அறுவை சிகிச்சை உபகரணங்கள், துணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார். அறுவைச் சிகிச்சை மேடைக்கு மேலே காற்றில் ‘கார்பாலிக்’ அமிலத்தை நுண்திவலைகளாகத் தெளிப்பதற்கான ஒரு தெளிப்பானையும் லிஸ்டர் உருவாக்கினார்.* *கிருமிநாசினிகளின் உதவியால் லிஸ்டரால் பல பெரிய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடிந்தது. அதற்கு முன் அந்த நிலை இருந்ததில்லை. பின்னர், உலகெங்கும் கிருமிநாசினிகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, எண்ணற்ற உயிர்கள் காக்கப்பட்டன.* https://www.youtube.com/watch?time_continue=5&v=h8OX0FNWANM&feature=emb_logo <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* [image: வெல௠ல௠ம௠அளவில௠விட௠மின௠வெக௠ளியை..................... Brasil00_1] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BoBkvG%3D5D444Ab80oDXzJZCSERv8d0UacxTXPqz-t3HQw%40mail.gmail.com.
