<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


*திரு அன்பில் திருவடிவழகிய நம்பி பெருமாள் கோயில்*

*பகவான் கருணையே வடிவானவன்.  பக்தர்களுடைய வேண்டுகோளைப் பிரார்த்தனையால்
நிறைவேற்றுபவன். தன்னையார் சரணடைகிறார்களோ  அவர்களைக் கடைசிவரை ரட்சித்துக்
காப்பாற்றக் காத்திருப்பவன்.  பெருமாளுக்கு ஜாதி பேதம் என்பது கிடையாது.
ஆத்மார்த்தம் முக்கியம்.  இப்படிப்பட்ட பெருமாள்,  அன்பின் திருவுருவமாக
வடிவழ**கிய
நம்பியாகி  திருக்கோலம் பூண்டு நம்மையெல்லாம் காத்து வருகிறார்.  இந்தத்
திருக்கோயில் திருச்சி கல்லணை கும்பகோணம் பஸ் மார்க்கத்தில் இருக்கிறது.
லால்குடிக்கு கிழக்கே எட்டு கிலோமீட்டர் தூரத்தில் நடராஜபுரம் வழியாகவும்
சென்று பெருமாளைத் தரிசிக்கலாம்.*

*திருமலையான் துறை மண்டகபுரி, பிரம்மபுரி  என்ற இந்த கோவிலுக்கு வேறு
பெயர்களும் உண்டு.  கொள்ளிட நதியின் வடக்கு பக்கம் சுமார் ஒன்றரை ஏக்கர்
பரப்பளவில் கட்டப்பெற்றுள்ள இந்தக் கோவில் 3 நிலை இராஜகோபுரம் உடையது.
எல்லாமே கிழக்குப் பக்கம் தான்.  இந்தப் பிரகாரத்தின் கருவறையில் மூலவர்
திருவடிவழகிய நம்பி பெருமான் புஜங்க சயனத்தில் பள்ளி கொண்டு
அருள்பாலிக்கிறார்.  உற்சவர் ஸ்ரீசுந்தரராஜன் தாயார் அழகியவல்லி நாச்சியார்
என்ற திருப்பெயர் கொண்டவர்.  இந்தக் கோவிலின் தீர்த்தம் மண்டுக
புஷ்கரணியாகும் விமானம் கொள்ளிடக் கரைக்கேயுரிய விசேஷ தாரக  விமானம்.*

*பிரபல மண்டுக முனிவர் ஒரு சமயம் தண்ணீருக்குள் மூழ்கி நீண்ட கால தவம் செய்து
கொண்டிருந்தார்.  அப்பொழுது அவரைத் தேடி துர்வாச முனிவர் வந்தார்.  தவத்தில்
மூழ்கியிருந்த  மண்டுக முனிவர்,  துர்வாச முனிவர் வந்ததைக் கவனிக்கவில்லை.
வெகு நேரம் காத்திருந்தும் மண்டுக முனிவர் தன்னைக் காண வரவில்லை என்ற
கோபத்தால் துர்வாசர், மண்டுக முனிவரைத் தவளையாக  மாறும்படி சாபமிட்டு
விட்டார்.  இதற்கு பிறகு மண்டுக முனிவர்,  தன் தவற்றை உணர்ந்து துர்வாச
முனிவரிடம் சாபவிமோசனம் கேட்க துர்வாச முனிவர் " இந்தத் திருத்தலத்தில் உள்ள
பெருமாளை நோக்கி பிரார்த்தனை செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும்.  மறுபடியும்
மனிதனாக மாறலாம் என்று வழிகாட்டினார்.  அதன்படியே மண்டுக முனிவர் அன்பில் உள்ள
திரு வடிவழகிய நம்பி பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக வரலாறு.*

*அன்பில் நாட்டை ஆண்ட சுந்தரச் சோழன் மன்னனுக்கு போரில் பல வெற்றிகளை
தந்ததால்  இந்தக் கோவிலுக்கு அரசன் ஏராளமான மானியத்தை வழங்கி இருக்கிறான்.
பிரம்மாவுக்கும் வால்மீகிக்கும் பகவான் நேரிடையாக தரிசனம் தந்த ஸ்தலம்.
இந்தக் கோவிலில் திருமங்கையாழ்வார்,  பூதத்தாழ்வார் நம்மாழ்வார் மங்களாசாஸனம்
செய்து இருக்கிறார்கள்.*
*பரிகாரம்*

*முற்பிறவியில் செய்த பாவங்களைப் போக்க வேண்டுமானால் அன்பில் கோவிலுக்கு வந்து
மண்டுக புஷ்கரணியில் நீராடிப் பெருமாளை நோக்கிப் பிரார்த்தனை செய்தால்
போதும்.  எதிரிகளை வெற்றி பெறவும் போட்டிகளில் வியாபாரத்தில் வெற்றி பெறவும்
பொதுவாழ்வில் முன்னுக்கு வரவும் இந்த அழகிய வடிவாகிய நம்பி பெருமாளுக்குப்
பால் அபிஷேகம் செய்து வந்தால் போதும்.  அத்தனை சிறப்பு இந்த அன்பில்
பெருமாளுக்கு உண்டு.  *



*  திரு அன்பில்   *

*திருவன்பில்*
*போற்றிசெய வோர்குடைக்கீழ்ப் பொன்னாடு மிந்நாடு*
*நாற்றிசையு மாண்டாலு நன்கில்லை - தோற்றமிலா*
*எந்தையன்பி லாதி யிணைத்தா மாரையடிக்கே*
*சிந்தையன்பி லாதார் சிலர். (4) *
*- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி *






*திருச்சியிலிருந்து  சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலும், லால்குடியிலிருந்து
சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருஅன்பில்
திவ்யதேசம். திருச்சியிலிருந்து பஸ் மூலம் வரலாம். கும்பகோணத்திலிருந்து
கல்லணை செல்லும் பஸ்களும் அன்பில் வழியே செல்லும். கொள்ளிடத்தின்
வடக்குக் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் சோழ மன்னர்களால் 8ஆம்
நூற்றாண்டில் கட்டப்பெற்று, பின்பு வந்த  சோழ மன்னர்கள், விஜயநகர மன்னர்கள்,
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆகியோரால்   பராமரிக்கப்பெற்று வந்துள்ளது. *


*இராஜ இராஜ சோழனின் தந்தையான சுந்தரச் சோழர் இந்தப் பெருமாளிடம் அதிக ஈடுபாடு
கொண்டவர். போருக்குப் போகும் முன் இந்தப் பெருமாள் சந்நிதியில் தன்  வாளை
வைத்து ஆசி பெறுவது அவர் வழக்கம் என்று கோவிலில் உள்ள கல்வெட்டுகளில்
குறிப்பிடப்பெற்றுள்ளது.*

*கல்கியின் அமர காவியமான பொன்னியின் செல்வனைப்  படித்தவர்களுக்கு சுந்தர
சோழரை நினைவிருக்கும். அவருடைய அமைச்சரான அநிருத்த பிரம்மராயர் இந்த ஊரைச்
சேர்ந்தவர். அவரும் பொன்னியின் செல்வனில் ஒரு முக்கிய பாத்திரமாக வருகிறார்.
கல்கி இவரை ஒரு வைணவர் என்றே சித்தரித்திருக்கிறார்.*

*ஒருமுறை பிரம்மா தான்தான் மிகவும் அழகானவர் என்று கர்வப்பட்டபோது மகாவிஷ்ணு
பேரழகு படைத்த ஒரு வாலிபனாக அவர் முன் தோன்றினார். பிரம்மா தன் தவறை
உணர்ந்தார். அழகு முக்கியமல்ல, அன்பு நிறைந்த  உள்ளம்தான் முக்கியம் என்று
பிரம்மாவுக்கு மகாவிஷ்ணு உணர்த்தினார். அதனால் இந்தத் திருத்தலம் அன்பில்
என்று பெயர் பெற்றது.*

*அழகான தோற்றத்துடன் பிரம்மாவுக்குக் காட்சி அளித்ததால் இங்கே
எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கு சுந்தரராஜன் என்று பெயர். தமிழில் வடிவழகிய
நம்பி என்று அழைக்கப்பெறுகிறார். *

*தாயார் சுந்தரவல்லி என்று அழைக்கப்பெறுகிறார் *


*சுதபா  என்ற முனிவர் இங்கு தண்ணீருக்குள்  அமிழ்ந்த நிலையில் தவம் செய்து
கொண்டிருந்ததால் இங்கே வந்த துர்வாசரைக் கவனிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசர்
'தண்ணீருக்குள் இருந்து கொண்டு என்னைக் கவனிக்கத் தவறியதால், நீ தண்ணீருக்குள்
வாழும் தவளையாகப் போ'  என்று சபித்தார். தவளையாக மாறிய பிறகும் இங்கு அவர்
தொடர்ந்து தவம் செய்து வந்தார். பெருமாள் இவருக்குக்  காட்சி அளித்து
சாபத்திலிருந்து விடுவித்தார். தவளையாக இருந்ததால் இவருக்கு மண்டூக ரிஷி என்ற
பெயர் ஏற்பட்டது.  (சம்ஸ்கிருதத்தில் மண்டூகம் என்றால் தவளை).*


*கிழக்கு நோக்கிய மூன்று அடுக்கு ராஜகோபுரத்துடனும், வலுவான மதில்
சுவர்களுடனும்  கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது வடிவழகிய நம்பி ஆலயம். *

*மூலவர் - சுந்தரராஜப் பெருமாள். கிடந்த திருக்கோலம். புஜங்க சயனம். கிழக்கு
நோக்கிய திருமுக மண்டலம். நாபிக் கமலத்தில் பிரும்மா. *

*உற்சவர்- வடிவழகியநம்பி *

*தாயார் - சுந்தரவல்லி, அழகிய வல்லி  நாச்சியார். பிரகாரத்தில் பெருமாள்
சந்நிதிக்கு வலப்புறத்தில் தாயார் சந்நிதி உள்ளது.*

*விமானம் - தாரக விமானம்.*

*புஷ்கரணி-- கொள்ளிடம், மண்டூக புஷ்கராணி. (மண்டூக புஷ்கரணி  கோவிலுக்கு
சற்றுத் தொலைவில் அமைந்துள்ளதாக அர்ச்சகர் தெரிவித்தார்.)*

*பெருமாள் சந்நிதிக்கு வெளியே, மண்டபத்தில் சுவற்றை ஒட்டி   யோக நரசிம்மர்,
லட்சுமி நாராயணன், வேணுகோபாலன், ஆஞ்சநேயர்  விக்கிரகங்கள் உள்ளன. பன்னிரு
ஆழ்வார்கள், இராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் விக்கிரகங்களும் உள்ளன.*

*மண்டபத்தில் நுழைந்ததும் நமக்கு வலப்புறம் (பெருமாள் சந்நிதிக்கு இடப்புறம்)
ஆண்டாள் சந்நிதி உள்ளது. *


*பிரகாரத்தின் இறுதியில், கோவில் வாயிலுக்கு அருகே, நமக்கு வலப்புறமாக
விஷ்வக்சேனர் சந்நிதி உள்ளது. *

*திருமால் பாம்பணை மேல் பள்ளி கொண்டிருக்கும் ஏழு தலங்களில் அன்பிலும் ஒன்று
என்று திருமழிசை ஆழ்வார், நான்முகன் திருவந்தாதியில் குறிப்பிடுகிறார். *

*மற்றவை திருவரங்கம், திருக்குடந்தை (சாரங்கபாணிப் பெருமாள் கோவில்),
திருப்பேர் நகர் (கோவிலடி), திருவெஃகா (யதோத்காரிப் பெருமாள்
கோவில், காஞ்சிபுரம்), திரு எவ்வுள் (திருவள்ளூர்), திருப்பாற்கடல். *







*கோவிலின் அமைப்பையும், மேலும் பல விவரங்களையும்  இந்த வீடியோவில் கண்டு
மகிழலாம். *



*இந்த திவ்ய தேசம் திருமழிசை ஆழ்வாரால் ஒரு பாசுரத்தில் மங்களாசாசனம்
செய்யப்பட்டுள்ளது.*

*நாலாயிர திவ்ய பிரபந்தம்*
*மூன்றாம் ஆயிரம் *
*இயற்பா **திருமழிசை ஆழ்வார் **நான்முகன் திருவந்தாதி**. *

*நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள் *
*               நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து *
*               அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால் *
*               அணைப்பார் கருத்தன் ஆவான்     (2416)*

*ஓம் நமோ நாராயணாய !*

*you tube link:*

*https://www.youtube.com/watch?v=5EAtE1iqBXM*
<https://www.youtube.com/watch?v=5EAtE1iqBXM>


*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! *

*வாழிய பாரதமணித் திருநாடு!   *

*வணக்கம்* *சுப்பு*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BrX3LhFrKzufCJO_7LXMJUbRf_74przP0w2SkrzFR6GGA%40mail.gmail.com.

Reply via email to