*49. சலந்தரவத மூர்த்தி*

*சலந்தராகரர் அல்லது சலந்தரவத மூர்த்தி சிவபெருமான் அரக்கனான சலந்தரனை அழிக்க
எடுத்த உருவமாகும்.  *



*பெயர்: சலந்தரவத மூர்த்திவாகனம்: நந்தி தேவர்.மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்*


** விளக்கம்:*

*சலந்திரன் என்பவரை அழிக்கச் சிவபெருமான் முதியவர் வேடமிட்டுச் சந்தித்தார்.
சலந்திரனுடன் பேசித் தந்திரமாகப் புதியதாக உருவாக்கிய சக்கரத்தை அவன் தலையில்
வைக்கச் செய்தார். அந்தச் சக்கரம் சலந்திரனை இரண்டாகப் பிளந்தது, சலந்திரன்
அழிந்தான். ஆக சலந்திரனை அழிக்க சிவபெருமான் எடுத்த வடிவமே சலந்தரவத
மூர்த்தியாகும்.*


** உருவக் காரணம்:*

*இறை அருள் இருந்தால்தான் இன்பமாக வாழலாம். அகந்தை தலை தூக்கினால் அல்லல்கள்
ஏற்படும். இறையருளால்தான் இடர் நீங்கப் பெறும். இந்திரன் தானே பெரியவன் என்ற
ஆணவத்தோடு கயிலை சென்றான். இந்திரன் ஆணவத்துடன் வருவதை அறிந்த சிவன் தானே
வயிற்காப்போனாய் நின்றார். இந்திரன் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் அளிக்காமல்
இருக்க, கோபங்கொண்டு தன் வஜ்ராயுதத்தால் அக்காவலனை  அடித்தான்.   வஜ்ராயுதம்
பொடிப் பொடியானது, உண்மை அறிந்த இந்திரன் பயந்து போய் சிவபெருமானிடம் மன்னிக்க
வேண்டினார், அவனை மன்னித்துத் தன்னிடம் தோன்றிய கோபக் கனலைக் கடலில்
எறிந்தார்.   *



*கடலில் விழுந்த கோபக் கனல் ஒரு குழந்தையாக மாறி நீரால் வளர்க்கப் பட்டமையால்
அதற்கு சலந்திரன் என பிரம்மன் பெயரிட்டார். வாலிபப் பருவம் அடைந்தபின் அசுர
குரு சுக்கிராச்சாரியாரிடம் அனைத்துப் பயிற்சியும் பெற்றான் சலந்திரன்.
 மேலும் அசுரர்களுடன் சேர்ந்து பலவகையான ஆற்றல்களைப் பெற்றான். அசுரத் தச்சன்
மாயனால் சாலந்தரம் என்ற நகரை உருவாக்கி காலநேமி என்பவரின் மகள் பிருந்தையை
மணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தான். தேவர்கள் அனைவரையும் போரிட்டு வென்றான்.
திருமால் பல காலம் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் அவனைப் பாராட்டியதைக் கண்ட
இந்திரன் மிகவும் பயந்து கயிலையில் தங்கியிருந்தான். இதை அறிந்த சலந்திரன்
கயிலைக்குப் புறப்பட்டான்.  *



*இதற்கிடையே இந்திரனின் பயத்தைப் போக்கிய சிவபெருமான் சலந்தரனை அழிப்பதாக
வாக்குறுதி கொடுத்தார். அதன்படி வயதான முனிவர் போல் தளர்ந்த உடல், கையில்
கமண்டலம், தடியை ஊன்றிய படி சிவபெருமான் உரு மாறினார். சிவகணங்கள் சேனைகளாக
உருமாறி சிவபெருமான் பின்னால் நின்றன. வழியில் சலந்தரனைக் கண்டவர் நீ யார்
எனக்கேட்டார். நான் கடல் அரசனின் மகன். என் பெயர் சலந்திரன், நான்
சிவபெருமானிடம் போர் புரியச் செல்கின்றேன் என்றான். *

*சிவபெருமானும் சிரித்துக் கொண்டே "சிவனை எதிர்த்தால் ஒரு நொடியில் மாள்வாய்"
என்றார். சலந்தரன் அவரிடம் "என்னை ஏதிர்பவரை உருத் தெரியாமல் அழிப்பேன்"
என்றார். **உடனே இங்கிருந்து போய்விடு என்றார் சிவன். ஒரு நொடிப்பொழுது
தங்கியிருந்து என் ஆற்றலைக் காணுங்கள் என்றான் சலந்திரன்.*



*நான் உன் வல்லமையைக் காணத்தான் வந்தேன். "நான் சிவனுக்கு அடுத்தநிலையில்
உள்ளவன் என்றபடியே தனது பாதத்தால் தரையை கீறி ஒரு சக்கரத்தை
உண்டாக்கினார்.  இந்தச் சக்கரத்தை உன் தலைமேல் தூக்கிவைக்க முடியுமா? எனக்
கேட்டார். என்ன முயற்சி செய்தும் சலந்திரனால் முடியவில்லை. தன் முழு
ஆற்றலையும் உபயோகப்படுத்தி அந்தச் சக்கரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தித்
தலைமேல் வைத்ததும் அது அவனை இரு கூறாக்கியது. பெருமான் அசுரப்படையை தீயினால்
சாம்பலாக்கினார்.  *


*சலந்தரன் அழிந்ததால் அனைவரும் ஆனந்தப்பட்டனர். தேவர்கள் துயர் துடைக்கச்
சலந்தரனை வதம் செய்த மூர்த்தியே சலந்தரவத மூர்த்தி யாவார்.  சலந்தரவத
மூர்த்தி இரு கரங்களில் மழு, மான், முன் வலக்கரத்தில் சக்கரம், இடக்கரத்தில்
கத்தரி முத்திரையுடன் இருப்பார். கோபக்கனலை அழித்து மனம் அமைதிபெறச் செய்வார்.
பிற பெயர்கள் சலந்தராகரர் -  சலந்தராரி - சலந்திரவத மூர்த்தி!. நிகழ்வு
நிகழ்ந்த தலம்: திருவிற்குடி   *


** தரிசன இடங்கள்:*
*இவரைத் தரிசிக்க நாம் செல்லவேண்டிய தலம் திருவாருர் அருகேயுள்ளள திருவிற்குடி
யாகும். இறைவன் வீரட்டானேஸ்வரர் இறைவி பரிமளநாயகி. இங்குள்ள சங்கு, சக்கர,
ஞானதீர்த்தங்களினால் சலந்தரவத மூர்த்தியை அபிசேகம் செய்ய அவர்களின் தீராத
துயரத்தினையும் தீர்த்து மஞ்சள் நிற மலர் அர்ச்சனையும், புளி சாத
நைவேத்தியமும் செவ்வாயன்று கொடுக்க விஷப்பூச்சிகள் அரவம் இவற்றினால் ஏற்படும்
தொல்லை அழியும். *


*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

[image: 🔰NB Neil🔰10Q SuzUPG2]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2Bp8a-hpa_fRLE%2BTLBrJg36Q7oSiHtvz52QUhtTRwYiYnA%40mail.gmail.com.

Reply via email to