*55. **கௌரிலீலா சமன்வித மூர்த்தி*

🌼🌺உலகத்தின் இயக்கம்🌺🌼


ஒரு சமயம் சிவ பெருமான் தியான நிலையில் உலக இயக்கங்களைக் கண்காணித்துக் கொண்டு
இருந்தார். அப்போது அவரைக் காண வந்த பார்வதி அன்னை உலகமனைத்திலும் உயிர்கள்
உருவமும், வடிவமும் நீ்ங்களாய் இருக்கிறீர்கள் அப்படி இருக்கையில்
எப்படி உயிர்கள் இயக்கத்தைக் கண்காணிக்கிறார்கள் என்று கேட்டார்.


அதற்கு அவர், " உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று ரூபத்திலும்
கண்காணிப்பேன்" என்றார் .

ஈசன் கூறியதன் பொருள் பார்வதி அன்னைக்கு விளங்காததால் விரிவாகக் கூற வினவினார்.


🌺🌼   எது பெரியது? சிவமா ? சக்தியா? 🌼🌺


" என் பிரியத்திற்குரிய தேவி , நானே உன்னிலும், முப்பத்து முக்கோடி
தேவர்களிடத்திலும் உயிர்கள் அனைத்துமாய் உள்ளோம். என் அருள் உயிர்களை
இயக்கவில்லை எனில் தரையில் கிடக்கும் கல்லும் மண்ணும் வாழும் உயிர்களும்
ஒன்றே. ஒவ்வொரு உயிர்களின் உள்ளேயும் அதனை இயங்கச் செய்வதற்கான ஜீவாத்மா நானே
என்கிறார். உயிர்களின் ஜீவாத்மா சிவம் என்றால் அது இயங்கக் காரணமான சக்தி நானே
என விவாதிக்கிறார் பார்வதி அன்னை.அதனை விளக்க அனைத்து உயிர்களின் உள்ளத்தில்
சென்று ஜீவாத்மாவை தன்னுள்ளே எடுத்துக்கொண்டு ஜடப் பொருளாக்கினார். உலக
இயக்கம் இதனால் ஸ்தம்பித்தது. பார்வதி அன்னையால் உயிர்களற்ற
உருவத்திற்குச் சக்தி தந்து இயக்க முடியவில்லை.


🌳உலக இயக்கத்திற்கான அடிப்படை🌳


" ஜீவாத்மாவும் அதனை இயக்கும் பிராணணையும் ஒருங்கிணைந்து இயங்கும் போதே
இறைவனால் படைக்கப்படும் எந்த ஒரு பொருளுக்கும் உயிர் கிடைக்கும்.அது இயக்கித்
தன் வம்ச விருத்தியால் இறை படைப்பைச் சுலபமாக்கும் " என்று விளக்கினார்.
இதனால் மனம் வருந்திய பார்வதி அவரிடம் மன்னிப்பு  வேண்டி மீண்டும்
உயிர்களுக்கு ஜீவன் கொடுக்கச் செய்து, தன் சக்தியூட்டி மீண்டும் உலக இயக்கத்தை
இயல்பான நிலைக்குக் கொண்டு வருகிறார். இச்செயலுக்குப் பிராயசித்தமாக பார்வதி
தேவியார் தானே மானுடப் பெண்ணாக அவதரித்து உயிர்களின் இயக்கத்திற்குக் காரணமான
சுக துக்கங்களை அனுபவிக்க எண்ணுகிறார். ஈசனும் அன்னையின் விருப்பத்தை ஏற்று
பூமியில் அவர் அவதரிக்க அனுமதி அளிக்கிறார்.


பார்வதி அன்னை பெண் குழந்தையாக யமுனை நதியோரத்தில் சென்று தன் அவதார வாழ்வை
துவக்குகிறார். அவ்வழியே வலம் வந்த தக்கன் அந்தக் குழந்தையை காண்கிறார். வேறு
யாரும் அந்தக் குழந்தைக்கு உரிமை கோராததால் அதனைத்  தன்மகளாகக் கருதி தக்கன்
வளர்க்கலானார்.


❤🌺தாட்சாயிணி அன்னையின் தவம்🌺❤


தாட்சாயிணிக்கு வயது ஐந்தானதும் தன் பிறப்பின் காரணமறிய வேண்டி சிவனைக்
குறித்துத் தவமியற்றினார். இவ்வாறு பணிரெண்டாண்டு காலக் கடுமையான தவம்
மேற்க்கொண்டார். அவரைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் வயதான வேதியராக வேடமிட்டு
தவமிருந்த பார்வதி தேவியை மணக்க விரும்புவதாகச் சொன்னார்.


ஈசனின் வயதான வேடம் கண்டு வந்தது யாரென உணராமல் பார்வதி தேவியும் கடுமையான
வார்த்தைகளால் மணக்க இயலாது என்று கூறிக் கோபமானார். இதனால் வேறு வழியில்லாமல்
சிவபெருமான் தனது சுயரூபத்தைக் காட்டினார்.


🌼🌺ஈசனின் திருமணம்🌺🌼


இந்நிலையில் சிவபெருமான் பார்வதியை மணக்க விரும்பி  அன்னையைச் சந்தித்ததும்,
விவாதம் செய்ததும் தக்கனுக்குத் தெரிந்தது. தக்கன் ஈசனின் விருப்பத்தை
மனமுவந்து ஏற்று சிவபெருமானுக்கும் தாட்சாயிணிக்கும் நல்லநாள், நல்முகூர்த்த
நேரத்தில் திருமணம் செய்வித்தார். திருமணம் நடைபெற்றவுடன் ," உரிய காலம்
வந்ததும் உன்னை வந்தடைந்து கூட்டிச்  செல்வேன் எனக் கூறி சிவ பெருமானும்,
தேவர்களும் மறைந்தனர். இதனால் திருமணமான பின்னரும் கணவனைப் பிரிந்து தாட்சாயணி
தனது தவச்சாலையில் தவம் செய்து காலம் கழித்தார்.


🌺ஈசன் சொன்ன வாழ்க்கை தத்துவம்🌺


உடல் இயக்க உயிர் எவ்வளவு முக்கியமோ , அது போல மனித வாழ்வு முழுமையுற ஆணுக்கு
பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் துணையாய் , தம்பதியிடம் வாழ வேண்டும்.

சிவம் இன்றி சக்தியோ, சக்தி இன்றிச் சிவமோ எந்த ஒரு உயிரையும் இயக்கமுடியாது .
எப்படி சிவமும் சக்தியும் சேராமல் ஒரு உயிருக்கு இயக்கம் இல்லையோ அது போல
ஆணும் பெண்ணும் இணையாமல் ஒரு உயிர் உருவாக முடியாது என்பதை விளக்குகிறார்.

ஆணும் பெண்ணும் தனித்து இயங்குவதால் ஒரு மனிதனின் இல்லற வாழ்வு பூர்த்தி
அடைவதில்லை. இல்லறமின்றி எந்த ஒரு மனித வாழ்வும் பூர்த்தி அடையாது.


சிவன் சக்தியை அடையாமல் உயிர் சிறப்பும், உலக இயக்கமும் இல்லை என்பதைப்
பார்வதி அன்னைக்குத் தாட்சாயிணி அவதாரம் மூலம் புரிய வைக்கிறார். அன்னை தன்
தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறார்.


அன்னையின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டு இடபாருடராக வந்து தக்கனிடம் கூறாது
தாட்சாயிணியை திருக்கயிலை அழைத்துச் சென்றார். இதனால் தன்னை மதிக்காத
சிவன்மேல் தக்கன் பெரும் கோபம் கொண்டவனாக மாறினான். இவ்வாறு திருமணம் செய்து
உமாமகேஸ்வரி அன்னையை விட்டு விலகி உலக இயக்கத்திற்கான அடிப்படை தத்துவத்தைப்
புரிய வைத்து , மறைந்து பின் வந்து அழைத்த மூர்த்தியே அதாவது கௌரியுடன்
சிவபெருமான் விளையாடிய மூர்த்தமே கௌரிலீலா சமன்வித மூர்த்தி ஆகும்.


🌺 காணச் செல்ல வேண்டிய திருத்தலம்🌺


வலங்கைமான் அருகேயுள்ளது பூவனூர் ஆகும். இங்கமைந்த இறைவன் புஷ்பவனநாதர், இறைவி
இராஜராஜேஸ்வரி என்றும் அழைக்கப்பெறுகிறார். இங்கிருக்கும் கிருஷ்ண
தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்க கருங்குஷ்டம் குணமடையும். மேலும் இங்குள்ள
சாமுண்டீஸ்வரி சந்நிதியில் கொடுக்கப்பெறும் வேரைக் கட்ட, விஷக்கடிகள்
அனைத்தும் குணமாகும். இவ*ரு*க்கு மஞ்சள்நிற மலர் அர்ச்சனையும், பழவகை
நைவேத்தியமும், நல்லெண்ணைய் தீபமும் வெள்ளிக்கிழமைகளில் கொடுக்க, நீண்ட
ஆயுளும், கல்வியறிவும், உயர் பதவியும் கிட்டும்.

[image: Image may contain: 9 people, indoor]




*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

[image: 🔰NB Neil🔰10Q SuzUPG2]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2Bqt%2BatU5bCDMdg8SfJySFVK77Z16rnRRD_jAtB1T%3DXVrw%40mail.gmail.com.

Reply via email to