[image: விநாயகரின் வடிவங்கள் எத்தனை தெரியுமா?]
*நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அவை வெற்றிகரமாக முடிய வேண்டும் என்பதற்காக முதலில் வணங்கும் முழு முதற் கடவுள் விநாயகப்பெருமான்.* *விநாயகர் பிறப்புப் பற்றிப் பல்வேறு கதைகள் இருந்தாலும் சிவமகா புராணத்தில் உள்ள கதை பரவலாக அறியப்படுகிறது. அதன்படி முற்காலத்தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கிப் பல வருடங்களாகக் கடுந்தவம் புரிந்தான். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்குக் காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார். அதற்குக் கஜாசுரன், தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றார். இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதி தேவி, தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவி கோரினார்.* *பிறகு விஷ்ணு மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வந்தனர். நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த கஜாசுரன், அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான். அதற்கு நந்தி அவனிடம் சிவபெருமானை விடுவிக்குமாறு கேட்கிறார். கஜாசுரனும் தான் கொடுத்த வாக்கின்படி சிவபெருமானை விடுவித்தான். அவன் சிவபெருமானை நோக்கிப் பிரபஞ்சத்தில் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறான். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், கஜாசுரனின் யானைத் தலையைக் கொய்து அவரைப் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கிறார். மேலும் அவனது யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாகக் காட்சியளித்தார். பிறகு சிவபெருமான் தன் வாகனமான நந்தியில் அமர்ந்து கொண்டு கயிலாயம் வருகிறார.* *சிவபெருமான் கயிலாயம் வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி, அவரை வரவேற்கும் முன்பு தயாராக நினைத்தார். ஆனால் அப்போது நந்தி இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை. எனவே பார்வதி தாம் குளிக்கும் முன்பு மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். அவனுக்கு விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர் சூட்டினார். மேலும் தான் தயாராகி வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார். விநாயகரும் அவ்வாறே செய்வதாக வாக்களிக்கிறான். பிறகு கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார். பிறகு நடந்ததை அறிந்து கோபம் கொண்ட பார்வதி, பிரபஞ்சத்தையே அழிக்க முடிவெடுத்தார். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிரம்மதேவர் வேண்டிக் கொண்டார். அதற்குப் பார்வதி, விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார். அதன்படி சிவகணங்கள் கஜாசுரனின் தலையுடன் திரும்பி வந்தனர். அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர். பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான், அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும் பெயரையும் வழங்கினார்.* திருவுருவ விளக்கம் திருவடி *ஆன்மாவைப் பொருந்தி நின்று மல கன்ம மாயைகளைத் தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.* பெருவயிறு *ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.* ஐந்துகரங்கள் *பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலைக் குறிக்கிறது.எனவே, இவாரே ருத்ரர் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சர்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்* கொம்புகள் *மகாபாரதத்தை எழுதுவதற்காகத் தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்பெறுகின்றது.* தாழ்செவி *விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளைச் சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.* *32 வகை கணபதிகள்விநாயகரின் பல்வேறு உருவங்களில், பெயர்களில் காட்சி தருவதைப் பார்த்திருப்போம். விநாயகரின் 32 உருவம் மற்றும் பெயர்கள் பற்றி இங்கு பார்ப்போம்.இந்த 32 கணபதிகளில் முதல் 16 கணபதி ‘ஷோடச கணபதி’ வகைகள் என்றும், அடுத்த 16 கணபதி ‘ஏக விம்சதி’ வகை எனவும் பிரிக்கப்பெற்றுள்ளன. அவைகளாவன:* *1 .பால கணபதி,2. தருண கணபதி,3. பக்தி கணபதி* *4. வீர கணபதி,5. சக்தி கணபதி,6. துவிஜ கணபதி,7. சித்தி கணபதி,8. உச்சிஷ்ட கணபதி,9. விக்ன கணபதி,10. க்ஷிப்ர கணபதி,11. ஹேரம்ப கணபதி,12. லட்சுமி கணபதி,13. மகா கணபதி,14. விஜய கணபதி,15. நிருத்த கணபதி,16. ஊர்த்துவ கணபதி,17. ஏகாட்சர கணபதி,18. வர கணபதி,19. திரியாட்சர கணபதி,20. க்ஷிப்ர பிரசாத கணபதி,21. ஹரித்திரா கணபதி,22. ஏக தந்த கணபதி,23. சிருஷ்டி கணபதி,24. உத்தண்ட கணபதி,25.ரணமோசன கணபதி,26.துண்டி கணபதி,27.துவிமுக கணபதி,28. மும்முக கணபதி,29.சிங்க கணபதி,30. யோக கணபதி,31. துர்கா கணபதி,32.சங்கடஹர கணபதி.* *இனி வியாழக்கிழமை தோறும் ஒவ்வொரு கணபதியின் சிறப்பையும் சிந்திப்போம்* * You tube:* *https://www.youtube.com/watch?v=EujsT16VVrI&list=PLAjii2N9SY8J7nja7W7d-EVNyL_riD9Jv&index=1 <https://www.youtube.com/watch?v=EujsT16VVrI&list=PLAjii2N9SY8J7nja7W7d-EVNyL_riD9Jv&index=1>* *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* [image: HydsdYxowlH3beLCo2uh0J46ZGoM4Mhj2QhbtOZZ3oK0CWrk_1emGb0W_LzgrTjz.png] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2Bo%3D5Ys50CswLxsDEwbN1w2_t6VtZ5b5UHFUXojfWTusXw%40mail.gmail.com.
