Pranam காம்போடு மாவடு காதலாய்ச் சேகரித்துக் குஷியாய்க் குளிப்பாட்டி தலைதுவட்டி உடல்துடைத்து சீராட்டி உ(வ)ப்பிட்டு ஊறவைத்து தினம்பார்த்து தாலாட்டிடுமழகு|
ஓரிரெண்டு நாட்களிலே உறைப்பு மங்கலமாய் மஞ்சள்தூளிட்டு வறுத்திட்ட கடுகுப் பொடித்தூளும் விருப்பமாய்ச் சேர்த்திடக் கலவை கலீர் கலீரெனச் சேருமே சிரிக்குமே | ஊறுகின்ற த்ராக்ஷை ரஸம்போலே ஊறிநிற்கும் மாவடுவும் போதையே ஊற்றிப் பிசைந்த தயிரன்னமதன் ஊடலற்ற துணையதுவே உறுதியாய் உவந்துண்போம் வாரீர் ஊராரே || அக்ரஹாரம் நம்மாத்து மாவடு மஹா ப்ரியர்களுக்கு ஸமர்ப்பணம். -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoq_goAUGSXviiLZSWGOFjP9PP3eADU%2B1f%2BkVkNMFPrxQg%40mail.gmail.com.
