*Aadi Katril Ammiyum Nagarum Meaning :*

# 'ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்' என்பது அனைவரும் அறிந்த ஒரு பழமொழி. ஆனால்
ஆடிக்காற்றில் அம்மி நகருமா? ஆடி மாதத்தில் அதிவேகமாக காற்று அடித்தாலும்
அம்மி இம்மி அளவுக்கும் நகராது.

# இதற்கு வேறு பொருள் உண்டு. ஆடிக்கும் முன் மாதங்கள் கோடை வெயில் வீசும்
மாதங்கள்.

கூட்டாக சேர்ந்து தம்மடித்த போட்டியாளர்கள், பிக் பாஸ் கொடுத்த தண்டனை -
ஷாக்கான பிக் பாஸ் வீடு.! <https://dhunt.in/6yJ5z>

# சித்திரை, கத்திரி வெயில் என்பார்கள். அம்மாதங்களில் அடிக்கிற வெயிலின்
தாக்கத்தால் பலருக்கு அம்மை நோய் வரும். ஆடியில் வரும் காற்றும், சாரல்
மழையும் ,குளிர்ச்சியை ஏற்படுத்தி பூமியின் சூட்டை தணிக்கும்.

# அதனால் அம்மை கண்டவர்கள் முழுமை அடைந்து குணம் பெறுவார்கள். ஆடிக்கு பின்
அம்மை நோய் போய்விடும்.

# அதனால்தான் 'ஆடிக்காற்றில் அம்மையும் நகரும்' என்கிறார்கள். ஆனால்
அச்சொற்றொடர் திரிந்து, 'ஆடிக் காற்றில் அம்மியும் நகரும்' என்றாயிற்று.
இனிமேலாவது பழமொழிகளின் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.       KR IRS 6721

On Tue, 6 Jul 2021 at 14:06, 'venkat giri' via iyer123 <
[email protected]> wrote:

> *Respected Sir/s*
>
> *காற்றில் அம்மியும் பறக்கும்"*
> *காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.....Make hay while the sun shines*
> *காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை ஆசிரியர் மாணவர்களிடம் கூறுவதை
> புல்புல் பூங்கொடி மரத்தில் அமர்ந்திருந்தபோது கேட்டது.*
> *‘ஆகா, நாம் இன்றைக்கு பழமொழியைக் கேட்டுள்ளோம். பழமொழி பற்றி ஆசிரியர் வேறு
> ஏதேனும் தகவல்கள் கூறுகிறாரா? என்று பார்ப்போம்’ என்று மனதிற்குள் ஆர்வம்மிக
> கூர்ந்து கவனிக்கலானது.*
> *ஆசிரியர் மாணவர்களிடம் “இப்பழமொழிக்கான விளக்கம் உங்களில் யாருக்காவது
> தெரியுமா?” என்று கேட்டார்.*
> *அதற்கு மாணவன் ஒருவன் எழுந்து “வாய்ப்புகள் கிடைக்கும்போது அதனை நாம் நமது
> நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இதனுடைய பொருள்” என்று
> கூறினான்.*
> *அதற்கு ஆசிரியர் “நீ சொல்வது சரிதான். சம்பாதிக்கும் காலம் என்பதும்
> காரியங்களை சாதிக்கும் காலம் என்பதும் சில குறிப்பிட்ட காலம் மட்டுமே என
> எண்ணும் சிலர் இப்பழமொழியைக் கூறுவர்.*
> *இப்பழமொழி கூறும் உண்மையான பொருள் குறித்து நான் உங்களுக்கு விளக்கிக்
> கூறுகிறேன்.” என்று பழமொழிக்கான விளக்கத்தை ஆசிரியர் கூறுத் தொடங்கினார்.*
> *போரடித்தல்*
> *வயலில் விளைந்த நெற்பயிரினை அறுவடை செய்யும்போது, நெற்பயிரின்
> அடிப்பகுதியில் ஒருசாண் அளவிற்கு விட்டு அறுவடை செய்வர்.*
> *பின் களத்து மேடுகளில் அறுத்த நெற்பயிரிலிருந்து நெல்மணிகள் தனியாக
> உதிர்ந்து விடுமாறு அடித்து பிரிப்பர். இதற்கு போரடித்தல் என்று பெயர்.*
> *போரடித்து பிரிக்கப்படும் நெல்மணிகளுடன் தூசு, குறைந்த விளைச்சல் கொண்ட
> நெல்மணிகளான சாவி போன்றவையும் சேர்ந்து இருக்கும்.*
> *போரடித்து வரும் நெல்லை காற்று வீசும்போது அள்ளி தூற்றுவர். இவ்வாறு
> தூற்றும்போது நல்ல நெல்கள் நேராக கீழேயும், தூசு, பதர் என்று சொல்லப்படும்
> விளைச்சல் குறைந்த நெல்கள் காற்றின் பிடியில் சிக்கி சற்றுத் தள்ளியும்
> விழும்.*
> *நல்ல நெல்லினை இம்முறையில் எளிதில் பிரித்து எடுக்கலாம். இதுவே
> இப்பழமொழிக்கான நேடியான பொருளாகும். ஆனால் இந்தப் பழமொழிக்கு மறைமுகப் பொருள்
> ஒன்றும் உள்ளது.*
> *உயிர் உள்ள போதே*
> *‘காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா’ என்ற பாடல் வரிகளைக்
> கேட்டிருப்பீர்கள். *
> *காற்று என்ற ஒன்று இல்லாதிருந்தால் உயிர்கள் உயிர்வாழ இயலாது.*
> *எனவே காற்று என்பது உயிர்களுக்கு மிகவும் அவசியம். இந்தக் காற்று உடலில்
> உட்சென்று வெளிவந்து தன் பணியை செய்யும் வரையே உடலில் உயிர் நிலைத்து
> நிற்கும். மாறாக உடலில் காற்று செல்லாத நிலை ஏற்பட்டால் அவ்வுடலைவிட்டு உயிர்
> நீங்கி விடும்.*
> *உடலில் காற்று உள்ள வரையே மட்டுமே ஒரு மனிதனுக்கு வாழ்வு உள்ளது.
> அதற்குள்ளாக தான் தூற்றிக் கொள்ள வேண்டும்.*
> *மனிதன் தேவையில்லாத கெட்டவற்றை ஒதுக்கிவிட்டு, தேவையான நல்லவற்றை மட்டுமே
> கடைப்பிடித்து வாழ வேண்டும்.*
> *இந்த உடலில் மூச்சுக் காற்று இருக்கும்போதே*
> *மனதில் உள்ள தேவையற்ற தீய எண்ணங்களை*
> *,நச்சுப்பொருட்களை நீக்கிகொள்ளவேண்டும்*
> *.மூச்சுக் காற்று நின்றுவிட்டால்*
> *எதையும் செய்யமுடியாமல் போய்விடும்*
> *உடலில் உயிர் இருக்கும்போதே*
> *நல்ல செயல்களை செய்யவேண்டும்.*
> * அன்பு செய்ய வேண்டும். .*
> *அதனால்தான் மூச்சுக்காற்றாக இயங்கும்*
> *இறைவனை அது உடலில் வந்து போகும்போதே*
> *அவனை துதித்தூய்ய வேண்டும்*
> *என்பதே அதன் உண்மையான பொருள்.*
> *----------உங்கள் அன்புள்ள *
> *ஸ்ரீதரன்*
> * திருச்த்திரப்பள்ளி*
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/702021270.5937352.1625560556157%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/702021270.5937352.1625560556157%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor9d9kG0s1iUn_o8Bj0bMTVBRR7JR6d_GcN-NxTu9_Cjw%40mail.gmail.com.

Reply via email to