👆👆👆இந்த ஊர இந்த விஷயத்துல அடிச்சுக்க முடியாது .
பாலக்காட்டு கிராமம் ஒன்றில் கும்பாபிஷேக மருந்து இடிக்கும் வைபவம் கீழ்கண்ட வீடியோ. கொம்பரக்கு, சுக்கான்தூள், குங்கிலியம்,கற்காவி,செம்பஞ்சு,சாதிலிங்கம்,தேன்மெழுகு,வெண்ணெய் எனும் எட்டு பொருட்களை கொண்டு தயாரிக்கும் அஷ்டபந்தன மருந்தைக் கொண்டே எல்லா கோவில்களிலும் மூர்த்திகளின் பிரதிஷ்டை நடக்கும். கும்பாபிஷேகத்தின் முக்கிய சடங்கு மருந்து சார்த்துதல் என்ற இந்த அஷ்டபந்தனத்தை சாற்றி விக்ரஹங்களை உறுதியாக அமரவைப்பது. இன்று பல ஊர்களில் ரெடிமேடாக கிடைக்கும் அஷ்ட பந்தன மருந்தை வாங்கி அதை வெந்நீரில் போட்டு அப்படியே எடுத்து சார்த்தி சுவாமியை அதன் மேல் அமர வைத்து விடுகிறார்கள். ஒரு சில கிராமங்களில் மட்டும் தான் இன்னும் பாரம்பரியமான முறையில் கும்பாபிஷேகத்திற்காக அஷ்ட பந்தனம் மருந்தை இது போல தயாரித்து இடிக்கிறார்கள். பாலக்காடு பக்கங்களில் இந்த அஷ்ட பந்தனம் மருந்து தயாரிப்பதற்கு மட்டுமல்லாமல் இடிப்பதற்கும் கணக்கு உண்டு. ஓரு அஷ்டபந்தன உருண்டையின் மேல், இரண்டு லட்சம் முறை அல்லது 3 லட்சம் முறை அடி விழ வேண்டும் என்ற கணக்கு உண்டு. அதற்காக ஊரில் இருக்ககூடிய இளைஞர்கள் டைம் டேபிள் போட்டு கொண்டு 2-3 மாதம் மருந்தின் மேல் மாறி மாறி அடிப்பார்கள். பக்கத்து ஊர்களில் இருந்தும் பல இளைஞர்கள் குழுவாக வந்து இதற்கு வேலை பார்ப்பார்கள் அவர்கள் ஊரில் கும்பாபிஷேகம் நடக்கும்போது இந்த ஊர் இளைஞர்கள் சென்று உதவுவார்கள். கோலாகலமாக உற்சவம் போல ஒவ்வொரு நாளும் அடிக்கக்கூடிய அடிகளை கணக்கு வைத்துக்கொண்டு அந்த குறிப்பிட்ட லட்சம் அடி வரும் வரை அது இந்த வைபவம் நடக்கும். அடித்து முடித்த பிறகு ஒவ்வொரு நாளும் எல்லாருக்கும் டிபன் என்ன, பலகாரம் என்ன, என்று ஜமாவாக இருக்கும். எல்லா ஊரிலும் இன்றும் இப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு சில பாலக்காட்டு கிராமங்களில் கும்பாபிஷேகப் பணிகளை அவர்கள் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து வேலை பார்ப்பார்கள். இது மாதிரியான பல சுவாரசியங்களும், பாரம்பரியமும் கலந்தது தான் நம் தர்மம் -----------------------வெ.சுப்பிரமணியன் ஓம் படித்ததில் பிடித்தது -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsKSEE5TQqABoGTed5d9CsUUeLk%3DDWDBvkuqtrL%2BeSEVg%40mail.gmail.com.
