ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்துக்கள் எந்த விதத்திலும் பாடம்
கற்றுக்கொள்ளவில்லை
ஆச்சாரியார் ரஜினீஷிடம் அவருடைய சீடர் ஒருவர் கேட்ட கேள்வி: எங்களுடைய
வீடுகளும் உடைமைகளும் மதத் தீவிரவாதிகளால் கொளுத்தப்படும் பொழுது நாங்கள் என்ன
செய்ய வேண்டும்? மத நல்லிணக்கத்திற்காக முயற்சி செய்ய வேண்டுமா? அல்லது
எங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டுமா?

ஆச்சாரியார் ரஜினீஷ் அவர்களின் பதில்: உங்களுடைய கேள்வியே விவேகமற்றதாகத்
தெரிகின்றது. நீங்கள் உங்களுடைய வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதாக
தெரியவில்லை.
முகமது கஜினி சோமநாதபுரம் கோயிலைத் தாக்கியபோது அந்தக் கோயில்தான்
இந்தியாவிலேயே மிகவும் செல்வ வளம் பொருந்திய கோயிலாக இருந்தது.

1200 இந்து சாமியார்கள் அங்கே தியானம் செய்து கொண்டும் இறைவனை துதித்துக்
கொண்டும் இரவு பகலாக பக்தி செலுத்திக் கொண்டிருந்தனர்
அவர்கள் நினைத்தது என்னவென்றால் நாம் கடவுளிடம் தூய பக்தியை செலுத்திக்
கொண்டிருக்கின்றோம்; அந்தக் கடவுள் நம்மை காப்பாற்றுவார் என்று. அந்தக்
கடவுளும் காப்பாற்றவில்லை; அங்கிருந்த அரசர்களும் காப்பாற்றவில்லை.

அதனால் முகமது கஜினி அங்கிருந்த அனைவரையும் கொன்று, சிலைகளை உடைத்து, கோவிலை
கொள்ளையடித்து ஏராளமான தங்க, வெள்ளி, வைர ஆபரணங்களையும் மதிப்பிட முடியாத
சொத்துக்களையும் எடுத்துச் சென்றான். அங்கிருந்த ஹிந்து துறவிகளின் தியானமோ,
இறை நம்பிக்கையோ அவர்களைக் காப்பாற்றவில்லை.

இன்றைக்கு பல நூற்றாண்டுகள் கழித்த பிறகும் கூட இதே மாதிரியான ஒரு
பைத்தியக்காரத்தனம்தான் நம்மிடம் நிலவுகின்றது. கடவுளிடம் பக்தி செலுத்தினால்
போதும் அவர் நம்மை காப்பாற்றுவார் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கின்றோம்.

உங்கள் முன்னோர்களிடமிருந்து நீங்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றே
தோன்றுகிறது.
பக்தியும் தியானமும் ஒருவரைப் பாதுகாக்கும் என்றால் ராமச்சந்திர மூர்த்தி
ராவணன் மீது ஏன் போர் தொடுக்க வேண்டும்? தியானம் செய்து கடவுளிடம் முறையிட்டு
ராவணனின் மனதை மாற்றி இருக்கலாமே?

அதேபோல் பக்தியும் இறை நம்பிக்கையும் மனங்களை மாற்றும் என்றால் கிருஷ்ண
பரமாத்மா பாரதப் போருக்கு ஏற்பாடு செய்யாமல் துரியோதனிடம் மன மாற்றத்தை
உருவாக்கி இருக்கலாமே?அர்ஜுனனைப் போர் செய்யும்படி அறிவுறுத்தி இருக்க
வேண்டாமே? மனிதகுல வரலாற்றில் மகாபாரதப் போர் ஒரு மாபெரும் போர்.
ஏராளமான மனிதர்களைக் காவு கொடுத்த போர். அதனை ஏற்படாமலே தடுத்து இருக்க
முடியுமே!

இந்த பாரத தேசத்தில் எத்தனையோ மகிமை மிகுந்த, சக்தி மிகுந்த குருக்களும்,
ஆச்சாரியர்களும் இருந்திருக்கிறார்கள்.  ஆனால் முகலாயர்களும் ஆங்கிலேயர்களும்
இந்த நாட்டிற்குள் புகுந்து இந்த நாட்டினை அடிமை கொண்டார்கள்.

குருநானக் எவ்வளவு நல்ல முறையில் முகலாய ஆட்சியாளர்களிடம் மதம் என்றால் என்ன
என்று சொல்லிப் புரிய வைத்தார். ஆனாலும்கூட குரு கோவிந்த சிங் வரும்பொழுது
அவர் வாள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத்தானே தள்ளப்பட்டார்.

தியானமும் இறை நம்பிக்கையும் ஒரு மனிதனின் மனதைத் தூய்மைப்படுத்தும்,
புனிதமாக்கும்.

ஆனால் நம்முடைய உடமைகளையும், குடும்பத்தையும், வீடுகளையும் காக்க
வேண்டுமென்றால் நாம் அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டாக வேண்டும்.

மகாபாரதத்திலே கிருஷ்ணர் ஐந்து கிராமங்களை கேட்டார். ஆனால் நாம் இப்போது
பாரதப் பேரரசிடம் ஐந்து சட்டங்களை கேட்க வேண்டும்.

1. எல்லோருக்கும் சமமான , பொதுவான கல்வி.
2. பொதுவான குடிமைச் சட்டம்
3. மதமாற்ற தடைச் சட்டம்
4 அந்நியர்கள் ஊடுருவல் தடைச் சட்டம்
5 மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் சட்டம்.

இந்த ஐந்து சட்டங்களும் நடைமுறைக்கு வரவில்லை என்றால் நமது சனாதன தர்மத்தை
காப்பதில் இருந்து நாம் தவறியவர்கள் ஆவோம்.

ஆகவே இந்த ஐந்து சட்டங்களை வலியுறுத்தி பாரதப் பேரரசுக்கு நாம் ஒவ்வொருவரும்
கோரிக்கை மடல் அனுப்ப வேண்டும்.
சனாதன தர்மம் காக்கப்படவேண்டும். வெ.சுப்பிரமணியன் ஓம்

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvPHrPJPbf%2BDRxNU-gNtFj6KYjhpxf6pVDzJBsXm4m98w%40mail.gmail.com.
  • [no subject] Venkatachalam Subramanian
    • Re: Rajaram Krishnamurthy

Reply via email to