Pranam
Tham makkal (children of us) where the usage relates to effective meaning
rather than dividing the selfish content; many thirukkurals this phrase is
used; and the meaning vary to some extent according to the subject; here
mazhalai of a child of others may not be heard 24*7; but our child we hear
all the time; another point of satire is that we always feel that our
children alone is brilliant than the neighbour which the school does not
properly recognise; this view is greater among the women; they will never
accept in intelligence son or daughter is lesser than any one; emotional
bond of a woman; hence that "Tham Makkal".
குறள் 68 <https://www.ytamizh.com/thirukural/kural-68/>: தம்மின்தம்
மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.தம் மக்களின்
அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த
இன்பம் பயப்பதாகும்.That their children should possess knowledge is more
pleasing to all men of this great earth than to themselves (Tamil to
English): thammintham makkaL aRivudaimai maanhilaththu
mannuyirk kellaam inidhu. { Here tham becomes prominent when serving others
but that "Tham" is pride of a parent.
குறள் 63 <https://www.ytamizh.com/thirukural/kural-63/>: தம்பொருள்
என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்.: தம்மக்களே தம்முடைய
பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய
வினையின் பயனால் வந்து சேரும்.Men will call their sons their wealth, because
it flows to them through the deeds which they (sons) perform on their behalf
(Tamil to English): thamporuL enpadham makkaL avarporuL thamdham
vinaiyaan varum { here wealth is denoted by our children and when they
earn from the poorva janma good wealth then our wealth is many folded. }
குறள் 65 <https://www.ytamizh.com/thirukural/kural-65/>: மக்கள்மெய்
தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.: மக்களின்
உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச்
சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும். The touch of children gives
pleasure to the body, and the hearing of their words, pleasure to the
ear (Tamil
to English):makkaLmeyt TheeNdal utaRkinpam matruavar soRkaettal inpam
sevikku { heer its pure enjoyment of begetting children}. KR IRS 12122
On Wed, 12 Jan 2022 at 08:21, Rangarajan T.N.C. <[email protected]>
wrote:
>
>
> ----- Forwarded message -----
> *From:* C.P.Ramaswami <[email protected]>
> *To:* Rangarajan T.N.C. <[email protected]>
> *Sent:* Tuesday, 11 January, 2022, 03:56:57 pm IST
> *Subject:* Re: excellent tamil
>
> அதிலும் ஒரு சிறப்பு -
> “தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர்”
> மற்றவர்களின் மக்கள் சொல்வது அவ்வளவு இனிமையாக இருக்காது!
>
> On Tue, 11 Jan 2022 at 11:42 AM, Rangarajan T.N.C. <
> [email protected]> wrote:
>
> https://www.dinamalar.com/news_detail.asp?id=2198050
>
> On Tuesday, 11 January, 2022, 11:21:21 am IST, Rajaram Krishnamurthy <
> [email protected]> wrote:
>
>
> Pranam
> I read in Google as reported in Dinamani paper by some author on baby
> language Mazhalai and wonderful tamil I relished, hence no translation for
> this: KR IRS 11122
> ஒரு சொல், ஒற்றைச் சொல் மட்டுமல்ல. ஓராயிரம் சொற்களை விளைவிக்க வல்ல
> நெல்மணி ஒத்தது. களஞ்சியத்தில் வைத்துத் ப் பாதுகாக்கப்பட்டு , காலத்தில்
> விதைக்கப்படும் ஒரு தானிய மணி, உரிய முறையில் விளைந்த, ஓராயிரம் தானிய மணிகள்
> எவ்வாறு உருவாக்கித் தரும், அப்படிப்பட்டதுதான், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு
> சொல்லும். நெல்மணிகளை மண்ணில் விதைப்பது போல, சொல் மணிகளை மனங்களில் விதைக்க
> வேண்டும். அதற்கேற்ற கழனிகள் நிகர்த்ர்த்வை, மழலைகள் ஆகிய பிள்ளைகள்.
> அவர்களின் மனங்களில், தானே விழுந்து முளைப்பவையும் உண்டு. அவை கவையாகிக்
> கொம்பாகிக் பயன் தரும் பழ மரங்களாக பரிணமிக்கும் ஆற்றல் உடையது; சுவையாகிப்
> பின்னர் கேட்போர்க்கு சுவைக்கத் தருகிற தேன் நிறை இசை யாக மலர்கிர் ற அழகும்
> உடையவை; மனம் நிறைக்கும் மணமும் தருபவை. பொருள் அறிந்தோ அறியாமலோ முதன்
> முதலில் தன் செவியில் விழுந்த சொல்லைப் பலபட நாவசை த்துத் ச் சொல்லிப்
> பார்க்கும் மழலை, அதற்கு இனமான எதுகை களையும் மோனைகளையும் இணைத்துத் ச்
> சொல்லும்; இணைச் சொற்களையும் எதிர்ச் சொற்களையும் தானே உருவாக்கிக் கொள்ளும்.
> "வைக்காதே' என்று கட்டளையிடும் சொல்லுக்கு எதிராக, "நான் அப்படித்தான்
> வைப்பேன்' என்று உறுதிபட மொழிய நினைக்கும் குழந்தை , "வைக்கேன்' என்பதுண்டு.
> "கிடையாது' என்பதற்கு மழலை மொழியின் எதிர்சொல், "கிடையும்'. கொஞ்சம் நேரம்
> ஒதுக்கி, அவரவர் தத்தம் குழந்தை களிடம் கொஞ்சிப்பார்த்தால், இப்படிப் புதிய
> புதிய சொற்களைச் செவிமடுக்கலாம். அவை, அவரவர் க்கு உரிய குரல்களில் இசை
> ஒழுங்கோடு பிறப்பதையும் கேட்டுட்டு அனுபவிக்கலாம். ஒரு சொல்லை, எல்லாக்
> குழந்தைகளும் ஒரே மாதிரி சொல்வது இல்லை. ஒவ்வொன்றுக்கும் சுருதி பேதம் உண்டு.
> அவை அபசுருதி ஆகாமல் சுப சுருதியாக மலர்வர் தை க் கேட்பது சுகம். பத்துக்
> குழந்தைகளைப் பக்கத்தில் வைத்துப் பாடம் சொல்லிக் கொடுக்கிறபோது இந்த சுகத்தை
> நான் மிகமிக அனுபவித்துத் மகிழ்ந்திருக்கிறேன். அப்போது, எனக்குள் ஆயிரம்
> சிந்தனைப் பூக்களைச் செந்தேன் சுவையுடன் மலர்த்தி தந்தது, இந்தத் திருக்குறள்.
> குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர் குழலும் யாழும்
> கருவிகள். அவை உயிரற்றவை. அவற்றுக்கு உயிரளிப்பது வாசிப்பவர்கள் ளின் உணர்வு .
> முன்னதாகச் சொல்லப்படும் கருவியை முத்தமிட்டு முத்தமிட்டு உயிர்மூச்சை
> உட்செலுத்தினால் உண்டாவது இசை . குழல் நமது ஆதி கருவி. புல் இனத்தின் மூங்கிலை
> வண்டு துளைத்து விட, இளம் காற்று உட்புகுந்து முன்மொழிய தோன்றிய இசை யைக்
> கண்டு எடுத்த முதல் கலைஞன் யாரோ, அவன் தான் புல்லாங்குழலை இயற்கையிடமிருந்து
> பெற்றிருக்க வேண்டும். அது புல் ஆம் குழல். அசையும் மூங்கிலில் துளைக்கப்பட்டு
> விளங்கும் துளை வழியாக உள் சென்று வெளிவந்த கோடையாகிய மேற்காற்று குழல் இசை
> யைக் கொடுக்கிறது. இது இயற்கை விளைத்த இசை க்கருவி. இதை , அகநானூற்றுப் பாடல்
> ஆக்கி இசைக்கிறார் கபிலர் ஆடமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் கோடை அவ்வளி
> குழலிசை ஆக (அகம்-82) கண்டு, எடுத்துக் காலகாலத்திற்கும் இசைக்கும் கருவியாய்
> ஆக்கிக் கொடுத்தவன் இறை நிகர்த்வன். மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தவனுக்கும்,
> காடு உடைய முல்லை நிலத்தவனுக்கும் சொந்தமானது குழல். குழல் உடைய முருகனைக்
> குழலன் என்று "திருமுருகாற்றுப்படை' குறிக்கிறது. மாயோனாகிய கண்ணனுக்கு இசைந்த
> கருவியாகக் குழலைக் கொடுத்தவை, நமது இலக்கியங்கள். இதற்கு மூச்சுக் காற்றே
> முதல். முத்தமிடும் குழந்தை , இரகசியமாகச் செவிக்கு அருகில் செந்தேன் சொரியச்
> சொல்லும் அனுபவத்தை , இந்த இசையோடு ஒப்பிட்டுப் பார்த்து உணரலாம். அப்போது அது
> மொழியும் உறவுச் சொல், உயிர் சொல்லாய்ப் பரிணமிக்கும் அற்புதம், எழுதி மாளாது.
> அடுத்ததாகச் சொல்லப்படும் கருவி யாழ். நரம்புகளால் யா(ஆக்கப்பட்ட மையால், இது
> யாழ். நரம்பு கருவிகளுக்கு ல்லாம் ஆதிக் கருவி இது.வேட்டைக்குப் பயன்படுத்திய
> வில்லையே யாழாக பயன்படுத்தியவர் உள்ளத்தின் இசை தான் இதன் முதல் மெல்லிசையாக
> ஒலித்திருக்க வேண்டும். வில்யாழ் இருந்துதான் விதவிதமான யாழ்கள் தோற்றம்
> கொண்டன. இதனை, ஆரத் தழுவி அணைத்து மெல் விரல் கொண்டு மீட்டு வந்தால் உருவாவது
> நல்லிசை . ஓடிவந்து தோள் தழுவி இறுக அணைத்துக் கொள்ளும் குழந்தையை மடியில்
> கிடத்திய பிறகு, அது சொல்லத் தொடங்கும் அனுபவங்களைச் செவிமடுத்தல் அதனைவிட
> அதிசய ராகம் வேறு ஏது? இந்த மழலை அவரவர் தாம் பெற்ற சொந்த மழலையாக தான் இருக்க
> வேண்டும் என்பதில்லை. சொந்தம் என்று சொல்லிக் கொள்ளாமலே பந்தமாகிவிடுகிற
> பாசத்தால் உருவாகிற தன்மை உடையவை. தாய் மாமனை விடவும் தாங்கிக் கொள்கிற வாடகை
> க்கு வந்து குடியிருக்கும் புது மாமன் குழந்தையின் நேசத்தின் க்கு உரியவன்.
> தாய் சொல்லைக் கூட தவிர்த்து விடும் குழந்தைகள் பயிலும் வகுப்பு "மிஸ்'
> சொல்லை, "மிஸ்' பண்ணுவதே இல்லை. நாவொடு நவிலா நகைபடு தீம் சொல், யாவரும்
> விழையும் பொலந்தொடிப் புதல்வனை, (அகநானூறு: மருதம்: 16) வாரியணைத்த
> பெண்ணொருத்தி பார்த்து , "நீயும் தாயை இவற்கு' எனக் கூறிய மருதநிலத்தான் சங்க
> இலக்கியத்தில் இன்னும் வாழ்கிறார். இப்போதிருக்கும் அவசர யுகத்தில் பெற்ற
> பிள்ளைகளை கொஞ்சும் நேரம் பெற்றோர்ர் க்கு வாய்ப்பதில்லை. தத்தம் பிள்ளைகளை
> கொஞ்ச முடியாத குறையைப் பேரக்குழந்தை களைக் கொண்டு தீர்த்துக் கொள்கிறார்கள்
> ள் பெரியவர்கள். அதுவும் இந்த பொது முடக்கக் காலத்தில், கேட்டு மகிழ்ந்த
> மழலைச் சொற்கள் மிக மிக அதிகம். திட்டட் ப் பயன்படுத்திய சொற்களைக் கூட,
> திகட்டாத அமுதமாக திருப்பி வழங்கிய குழந்தைகள் பலர். இந்தப் பின்புலத்தோடு
> திருக்குறளை இணைத்துத் ப் பார்த்தால், அது மழலை இசையின் மாண்பை, விரித்துக்
> கொண்டே செல்வதை அனுபவித்துத் உணரலாம். குழலையும் யாழையும் கொண்டுவந்து
> இசைத்துக் காட்டி , குழந்தையின் மழலைக் குரலுக்கு இவை இணையில்லை என்று
> மூடிவைக்கிற அழகில்தான், திருக்குறள் இசை நூலை விடவும் இனிமையாகிறது. இதற்கு
> உரை எழுதிய காலிங்கர், " பரதம் பற்றிய குழலின் ஓசை யும் பண்ணினைப் பற்றிய
> யாழின் ஓசையும்' எனக் குறித்துள்ளார். குழல் நாட்டியத்திற்கு உரியது. அதாவது
> பரதத்திற்கு பக்கவாத்தியம் (வங்கியம்). யாழ் இசை க்குரிய துணை வாத்தியம். இதனை
> இன்னும் நயம்பட விளக்குவார் தண்டபாணி தேசிகர். " யாழோசை போல மழலைச் சொல் மனம்
> ஒன்றச் செய்வது எனவும், பரதத்திற்கு துணையான குழலோசை போல மழலை சுவைத்துத்
> மெய்ப்பாட்டாட் ல் ஆடவும் செய்வது எனவும் அறிய உதவுகிறது' என்பது அவர்தம்
> விளக்கம். ஆட முடியாத பாட்டினைப் ஆட்டுவிப்பதும், பாட முடியாத பாட்டினைப்
> பாட்டுவிப்பதும் இந்த மழலைகள் அல்லாமல் வேறு யார்? தங்களை முதுகில் சுமக்கும்
> யானைகளாய்ப் பெரியவர்கள் ஆக்கி விடுவதில் இவர்களுக்கு நிகர் எவர்? " ஆனை ஆனை
> ஐயா யானை' என்று தானே பாடும் குழந்தை தானே, பின்னர் கவிஞனாகிறது. இவ்வாறு,
> பேசுமொழி யாவும் ஆசுகவி ஆகவிடாமல் அதட்டி , ஆங்கிலம் புகட்டப்படுவதால்,அவர்கள்
> இதழ்களில், தானே உதயமாகும் தாய்மொழி மறுக்கப்படுவதால், அனேகக் குழந்தைகள்
> தத்தம் மழலையை இழக்கிறார்கள் ள் என்பதை மீளவும் வலியுறுத்துகிறது, இந்தக்
> குறள். மழலை மிழற்றும் அமுத மொழி "தமிழ்' என்று சொல்வதில் தயக்கம் தேவையில்லை.
> இதைத்தான் "தென்றலுடன் பிறந்த பாஷை' என்று மொழிகிறார் மகாகவி பாரதி.
> "திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல்
> இவற்றோடும் பிறந்த தமிழ்' என்று பாடினார் பாரதிதாசன். வாயைத் திறந்ததும்
> வருகிற காற்றில் ஒலியாய் விளைவது மொழி. மொழியப்படுவதால்தான் மொழி.
> திருவள்ளுவர் காட்டும் மழலைச் சொல் எந்த மொழிக்கு உரியது? அவரவர்தம் சொந்த
> மொழிகளுக்கெக் ல்லாம் உரியது. அது எது? அவரவர் தம் பெற்றோர் பேசும் மொழி.
> அதனால்தான், "தம் மக்கள்' என்ற தனிச்சொல்லை, மழலைக்கு முன்னர் வைக்கிறார்
> அவர்.அது தாய் மொழியாகவும் இருக்கலாம்; தந்தை மொழியாகவும் இருக்கலாம். தாயும்
> தந்தையும் வெவ்வேறு மொழிக்காரர்களாய் இருந்தால், பேசப்படும் மொழி,
> இரண்டுக்கும் உரியதாக தான் இருக்கும்? அண்டை வீட்டார் இரண்டு மொழிகளும்
> அறியாதவர் ஆயின், அவர் வீட்டு மொழியையும், குழந்தை , தானே கற்றுக் கொள்ளும்
> என்பதே நடைமுறை உண்மை. ஐய! காமரு நோக்கினை, "அத்தத்தா' என்னும் நின்தேமொழி
> கேட்டட் ல் இனிது (கலித்தொ த் கை : 80) என்கிறார் மருதனிளநாகனார். மேலும்,
> இந்தக் குறள் இன்னொரு நுட்பத்தையும் எடுத்துத் விளக்கக் காணலாம், மழலையின்
> இனிமைக்கு உவமையாக எடுத்துத் ச் சொல்லி, விளக்கிக் காட்டிப் பின்னர்
> விலக்கவும் படுகிற இக்கருவிகள் இரண்டும் நம் ஆதி கருவிகள். எடுத்தவுடன்
> இக்கருவிகள் பாடலைத் தருவது இல்லை. சற்றே சரி செய்யும் வரை, அவை தன் போக்கில்
> தான் ஒலியெழுப்பும். மழலை மொழியின் மாண்பும் அத்தகையதுதான். புத்தம் புது
> இராகங்கள் இந்தக் கருவிகளில் இருந்து புறப்பட்டது போல, புத்தமுதச் சொற்களை
> விளைக்கும் உயிர்த்ர் த் ன்மை, மழலைக்கு உண்டு. கவனித்துப் பார்த்தால்,
> அகராதிகளில் அகப்படாத பல புதிய சொற்களை, குழந்தைகளின் குரல் வழியாக
> செவிமடுக்கலாம். ஆக, மழலை தன் நாவில் மிழற்றும் மொழி அமுதம் ஆகிறது. மொழிய
> மொழியத்தான் வளரும் மொழி. பெரியவர்கள் பேசுவதை விடவும் பிஞ்சு மழலைகள்
> பேசும்போதுதான், மொழிக்கு உயிராற்றல் வருகிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
> கட்டுரையாளர்: எழுத்தாளர்.
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoonB%3D_7wGn%3DmChn%2B9RYX-mEocGmCny0D6N8o3UzL-0uQw%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoonB%3D_7wGn%3DmChn%2B9RYX-mEocGmCny0D6N8o3UzL-0uQw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
>
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoryLbBpes2%3D3wvbR21OyN3Kh0xiMcLb7MnmGDw-JqJThg%40mail.gmail.com.