*திருப்பவள வண்ணர் பெருமாள் கோவில், **காஞ்சிபுரம்*
*திவ்ய தேசங்களில் சோழ நாட்டிற்கு இணையாகத் தொண்டை மண்டலமான காஞ்சிபுரம் விளங்கி வந்தது. திருமால் தன் இஷ்டப்படி எல்லாம் நிறம் மாறிப் பக்தர்களுடன் கண்ணாமூச்சி விளையாடி இருக்கிறார். கார்வண்ணன் என்று பகவானை முன்பு அழைத்து வந்ததுண்டு. ஆனால் காஞ்சிபுரத்து ஸ்தலங்களில் பகவான் பவள வண்ணனாகவும் பச்சைப் வண்ணனாகவும் கூட மாறித் தன் திருவிளையாடல்களைப் புரிந்திருக்கிறார். உலகமே அவர் திருவாயில் இருந்ததை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே நிறங்களிலும் திருமால் மறைந்திருக்கிறார்.* * காஞ்சியிலுள்ள திரு ஏகாம்பரநாதர் கோவிலுக்கு நேர் கிழக்கே உள்ளது. திரு பவளவண்ணர் பெருமாள் கோவில். இரண்டு ஏக்கர் நிலப் பரப்பளவு மேல் நோக்கிய 5 நிலை இராஜ கோபுரமும் ஒரு பிரகாரமும் கொண்டு அமைந்திருக்கும் இந்தக் கோவிலில் மூலவர் ஸ்ரீ பவளவண்ணர் பெருமாள். மேற்கு நோக்கி**க்** காட்சி தருகிறார் தாயார் ஸ்ரீ பவள வல்லி தாயார். விமானம் பிரவாள விமானம், தீர்த்தம் சக்கர தீர்த்தம்.* * இங்கேயும் பிரம்மதேவரின் யாகக் கதை வருகிறது. பிரம்ம தேவனின் யாகத்தை அழிக்க சரஸ்வதி தேவியால் அனுப்பப்பட்ட கொடிய அரக்கர் கூட்டத்துடன் பிரம்மனின் வேண்டுகோளை ஏற்றுத் திருமால் கடும் கோபத்தோடு போரிட்டார். பின்னர் அவர்களை ஒன்றுவிடாமல் அழித்தார். இதனால் பகவானின் திருமேனி எங்கும் இரத்தம் தெறித்து விழுந்தது. அதே கோலத்தோடு இந்த ஸ்தலத்தில் நின்ற பெருமாளுக்கு ஸ்ரீ பவள வண்ணர் என்ற பெயர் ஏற்பட்டது. மூலவர், சிவந்த வடிவம் கொண்டு காட்சி தருகிறார். இதை வேறு எந்த தலத்திலும் காண முடியாது அத்தினி தேவதைக்கும் பார்வதி தேவிக்கும் நேரடி தரிசனம் கொடுத்திருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.* *தல வரலாறு : ஒரு சமயம் வைகுந்தத்தில் திருமகளும், திருமாலும் அருகருகே அமர்ந்து ஆனந்தத்துடன் பேசிக் கொண்டு இருந்த போது திருமகள், திருமாலை நோக்கி, காத்தல், அருளல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் நடத்தும் சிவபெருமான் அருள் பெற்று தாங்கள், தங்கள் மேனியைப் பொன்னிறமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என விண்ணப்பித்தாள். இதைக் கேட்ட கார்வண்ணர் தேவி அப்படியே செய்கிறேன் எனக் கூறி, உன் விருப்பப்படியே பொன்னிற மேனி கொண்டு திரும்புவேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.* *வைகுந்தத்திருலிருந்து புறப்பட்ட திருமால் கச்சித் திருத்தலத்தை அடைந்து வீரட்டகாசத்தின் முன்பு தன் சக்கர ஆயுதத்தால் அழகிய தீர்த்தம் ஒன்றை உண்டாக்கினார். தினமும் சக்கர தீர்த்தத்திலே நீராடி, 14000 தாமரை மலர்களைக் கொண்டு வந்து அவற்றால் வீரட்டகாசரை வழிப்பட்டார். திருமாலின் வழிபாட்டைக் கண்டு மகிழ்ந்து ஈசன், தாய் உமையுடன் திருமாலுக்குக் காட்சி கொடுத்து பச்சை மேனியனே, உன் எண்ணத்தை யாம் அறிவோம் கவலை வேண்டாம், பவளம் போன்ற செந்நிற மேனியை உனக்குத் தந்தோம், என்று அருளினார்.* *கோவிலுக்குள் பச்சை வண்ணன் சன்னதி இருக்கிறது. பச்சைவண்ணர் ஆதிசேஷன் மீது வீற்றிருக்கும் காட்சி அற்புதமாக இருக்கிறது. பிறகு மகரிஷிக்கு பகவான் இந்த கோலத்தில் நேரிடையாகத் தரிசனம் தந்ததாகப் புராண வரலாறு உண்டு.* *வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்கொங்கத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன் குலவரையான் மடப்பாவை யிடப்பால்கொண்டான் பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பணி வரையினுச்சியாய் பவள வண்ணாஎங்குற்றா யெம்பெருமான் உன்னை நாடி யேழையே னிங்ஙணமே யுழிதருகேனே-திருமங்கையாழ்வார்!* *பரிகாரம்* *"பொறாமை வயிற்றெரிச்சலால் கெடுதல் செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், இராகு- கேது தோஷத்தால் பிடிக்கப்பட்டு எந்த ஒரு முன்னேற்றமும் காணாமல் துடிப்பவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், புத்திரர்கள் இருந்தும் அவர்களால் சுகம் அனுபவிக்க இயலாதவர்கள், வீண் வம்பில் மாட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டிற்க்கும் அலைந்து கொண்டிருப்பவர்கள், விஷப்பூச்சிகளால் கடிபட்டு நிறத்தை இழந்து இரத்தம் கெட்டு நீல முடியாதவர்கள் அத்தனை பேர்களும் ஒரு முறை இந்த புனித கோவிலுக்கு வந்து பவள வண்ணரைத் தரிசித்து தங்கள் குறைகளை எடுத்துச் சொன்னால் பகவான் விஸ்வரூபம் எடுத்த அத்தனை பேருடைய துன்பங்களை அடியோடு விரட்டுவார் என்பது சத்தியம்.* <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *https://www.youtube.com/watch?v=2pmL53Wz5rI* <https://www.youtube.com/watch?v=2pmL53Wz5rI> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* *Vanakkam Subbu* [image: wygltUSizKEORrTQqC2Nk0Ug4hf6FDz7Lcu2SYFxlGnPRsLO_T3n36kqlspaL6no.gif] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BrWH_trGKO%3DGHsdR2gN%2B-edRs7VWjbfqFBQucpE3U7Ddg%40mail.gmail.com.
