அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில், *திருப்புட்குழி*










*மூலவர்: விஜயராகவப் பெருமாள்அம்மன்/தாயார்: மரகதவல்லிதல விருட்சம்:
பாதிரிதீர்த்தம்: ஜடாயு தீர்த்தம்புராணப் பெயர்:திருப்புட்குழிஊர்:
திருப்புட்குழிமாவட்டம்: காஞ்சிபுரம்மாநிலம்: தமிழ்நாடு*
*மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக் கொண்டு அருள்பாலிக்கிறார்.
பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு.
ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில்
கொடிமரமும், பலி பீடமும் கோவிலுக்கு வெளியில் உள்ளது.பெருமாளின் மங்களாசாசனம்
பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 57 ஆவது திவ்ய தேசம்.   திரு என்றால் மரியாதை.
புள் என்றால் ஜடாயு. குழி என்றால் ஈமக்கிரியை செய்தல்! இங்குள்ள மரகதவல்லி
தாயார் வறுத்த பயறை முளைக்க வைக்கும் தாயார் என அழைக்கப் பெறுகிறார்.எனவே,
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வழிபாடு செய்யும் தலம். ஜடாயு-மோட்சம். ஜடாயு
தீர்த்தத்தில் நீராடி பெண்கள் மடியில் வறுத்த பயறு கட்டி இரவில் மரகதவல்லி
தாயார் முன் படுக்கக், காலையில் பயறு முலைத்திருக்குமாயின் குழந்தைப்பேறு-
வறுத்த பயறை முளைக்க வைக்கும் தாயார். இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும்
போது இராவணனுடன் ஜடாயு போரிட்ட தலம். ஜடாயு உயிர் அவர் சிறகிலிருந்ததால் அதை
இராவணன் வெட்டியதும் ஜடாயு கீழே விழ இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றான்.
உயிர் ஊசலாடும் நிலையில் இராமனைச் சந்தித்து இராவணன் சீதையைத் தூக்கிச் சென்ற
தகவல் அளித்து இராமனின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஜடாயு உயிர் நீத்தார். தன்
தந்தை இறந்த போது தான் வனவாசத்தில் இருந்ததால் அவருக்கு ஈமக்கிரியை செய்ய
முடியாமல் போனதை நினைத்து வருந்தி தனக்கு பெரியப்பா ஸ்தானத்தில் இருந்த
ஜடாயுவைக் குழியில் வைத்து தகனம் செய்தார். ஜடாயு தீர்த்தத்தை உருவாக்கினார்.
மனைவியின்றி இராமர் ஈமக்கிரியை செய்த போது குளத்தில் உள்ள பொற்றாமரை மலரில்
பூமாதேவி காட்சி தந்து இராமருக்கு உதவிட இறுதிக் காரியங்களைச் செய்த தலம்.
அமாவாசை தர்ப்பணம் இரட்டிப்பு பலன். *தல வரலாறு



*இராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு
சீதையை மீட்க இராவணனுடன் போரிட்டது. அவனால் வெட்டப்பட்டு மரணத் தருவாயில்
இருந்தது. சீதையைத் தேடி அவ்வழியே வந்த இராமலட்சுமணரிடம் சீதையை இராவணன்
கடத்திச் சென்ற விஷயத்தைத் தெரிவித்தது. மரணத்தை எதிர் நோக்கி இருக்கும்
தனக்கு இராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி
சமேதராகக் காட்சி தந்து அருள வேண்டும் எனவும் வேண்டியபடி உயிர்விட்டது.
அதன்படி ஜடாயுவை தன் வலது பக்கம் வைத்துத் தீ மூட்டி ஈமக் கிரியைகளைச்
செய்தார். இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார்
இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித் தாயார் வலப்புறமும் மாறி
அருள்பாலிப்பதாகப் புராணங்கள் கூறுகிறது. எனவே தான் இங்கு மட்டும் தாயார்
சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலது புறமும்
அமைந்துள்ளது குறிப்படத் தக்கது. ஜடாயுவின் வேண்டுகோளின் படி இராமர், தன்
அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார்.
எனவே இங்கு தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது.*

*பெயர்க்காரணம்: திரு என்றால் மரியாதை. புள் என்றால் ஜடாயு. குழி என்றால்
ஈமக்கிரியை செய்தல். ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால்
இத்தலம் திருப்புட்குழி ஆனது.*

* இத்தலத்தில் அசையும் உறுப்புகளைக் கொண்ட கல் குதிரை வாகனம் இருக்கிறது.
சிற்பக்கலையில் இது ஒரு அதிசயமாகும். உண்மையான குதிரை போலவே அசையும்
உறுப்புகளைக் கொண்டது இந்தக் கல்குதிரை. இதைச் செய்த சிற்பி இது மாதிரி இனி
யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம்.
இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி
பெருமாளுக்கு வலது புறம் அமைந்துள்ளது. மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை
வைத்துக் கொண்டு அருள்பாலிக்கிறார். அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா
லென்னுள்ளம் மென்னும் புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக்
கென்னும் குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி இலங்கெழில்
தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-திருமங்கையாழ்வார்!*

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>

*காலை 7 மணி முதல்12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை
திறந்திருக்கும்.*முகவரி

*அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில், திருப்புட்குழி- 631 502 காஞ்சிபுரம்
மாவட்டம்*
போன்

*+91- 44-2724 6501.*

*YOUTUBE LINK:*
*https://www.youtube.com/watch?v=beVTSF8bsE4*
<https://www.youtube.com/watch?v=beVTSF8bsE4>

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

 *Vanakkam Subbu*

 [image:
wygltUSizKEORrTQqC2Nk0Ug4hf6FDz7Lcu2SYFxlGnPRsLO_T3n36kqlspaL6no.gif]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2Bp2gmH-k1ppZqX%2B8%2B0RYo6do0RJRCsbvT4%3D%2B2_vO3NyRQ%40mail.gmail.com.

Reply via email to