*சோளிங்கர் யோகநரசிம்மப் பெருமாள் கோவில் ( திருக்கடிகை) 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மலை மேல் அமைந்துள்ள இக் கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 1305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும் . இக்கோயில் சோழர்களால் கட்டப் பெற்ற கோவிலாகும்.*
* இங்கு கீழே ஒரு கோவிலும், பெரிய மலை மற்றும் சிறிய மலையில் ஒவ்வொரு கோவிலுமாக மூன்று கோவில்கள் இருக்கின்றன.* *கோவில்கள் விபரம்1. கீழேயுள்ள கோவில் - உற்சவர் மட்டும். உற்சவர் : பக்தவச்சலப் பெருமாள், தக்கான்.* *2. பெரிய மலை மீதுள்ள கோவில் - கடிகாசலம்பெருமாள் : யோக நரசிம்மர், அக்காரக்கனிதிருநிலை : வீற்றிருந்த திருக்கோலம்திருமுக மண்டலம் : கிழக்கு நோக்கியதுதாயார் : அமிர்தவல்லித் தாயார்விமானம் : சிம்மகோஷ்டாக்ருதி விமானம்தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், தக்கான்குளம்* *3. சிறிய மலை மீதுள்ள கோவில்மூலவர் : யோக ஆஞ்சநேயர்-இவர் நான்கு திருக்கரத்தோடும் கையில் சங்கு சக்கரத்தோடும் நரசிம்மரை நோக்கியவாறும் எழுந்தருளியுள்ளார். இங்கு ரங்கநாதர், சீதா ராம லட்சுமணர் சந்நிதிகள் உள்ளன.சோழ சிம்மபுரம் என்பது மருவிச் சோளிங்கபுரம் என ஆயிற்று. நாளடைவில் சோளிங்கபுரம் என்பது பேச்சு வழக்கில் மருவி சோளிங்கர் என்றாகிவிட்டது.தொட்டாச்சார்யார் :அனைத்துத் திருமால் ஆலயங்களிலும் காணப்பெறும் சடாரி இத்தலத்தில் ஆதிசேஷன் வடிவில் இருப்பது குறிப்பிட வேண்டிய சிறப்பு. வலப்புறத்தில் ஐம்பொன்னாலான கிருஷ்ண விக்கிரகத்தையும் மற்றொருபுறம் சிறிய வடிவிலான வரதராஜப் பெருமாளையும் தரிசிக்கிறோம். தொட்டாச்சார்யார் எனும் பக்தர் ஆண்டு தோறும் காஞ்சி வரதராஜரின் கருட சேவையைத் தரிசிப்பது வழக்கம்.வயது முதிர்ந்த நிலையில் அவரால் காஞ்சிக்குச் செல்ல முடியாத போது பெருமாளே தக்கான் குளத்தில் அவருக்குக் கருட சேவையைக் காட்சி அருளியதாக ஐதீகம். அதை நினைவுறுத்தும் வண்ணம் இங்கு கொலுவிருக்கும் வரதராஜப் பெருமாளை அருளாளர் என்றும் பேரருளாளர் என்றும் அழைக்கின்றனர். கருவறையை வலம் வரும்போது ஆண்டாள் சன்னதியை தரிசிக்கலாம். எதிரில் ஆழ்வார்களும் ஆச்சார்யார்களும் அருளுகின்றனர்.தலபுராணம் :பக்த பிரகலாதனுக்காகக் காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தைத் தாங்களும் தரிசிக்க வேண்டும் என வாமதேவர், வசிஷ்டர், கஸ்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். விஸ்வாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மரை வழிபட்டு வரம் பெற்றார். அதே போல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டும் எனும் ஆவல் கொண்டு அவர்கள் இங்கு தவமிருந்தனர்.ராமாவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் ஆஞ்சநேயரிடம், “இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை’’ என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் ஸ்ரீராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களைப் பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளைக் காப்பாற்றினார்” என்கிறது ஸ்தல புராணம்.கடைசியில் ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாகக் காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தைத் தரிசித்துப் பூரித்த ஆஞ்சநேயரிடம், ‘நீ எனக்கு முன்பாகக் கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளைப் போக்கி அருள்வாயாக!’ என அருளினார்! அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையில் யோக ஆஞ்சநேயராகச் சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.கார்த்திகை மாதம் மட்டும் அபிஷேக நேரம் மாறும் :சோளிங்கர் தலத்தில் நரசிம்மர், அமிர்தவல்லித் தாயார் மற்றும் ஆஞ்சநேயருக்கு நடத்தப்பெறும் அபிஷேகங்கள் விசேஷமானதாக கருதப்பெறுகிறது. இந்த அபிஷேக ஆராதனையை நேரில் கண்டு தரிசிப்பது மிகுந்த புண்ணியத்தைத் தர வல்லது.நரசிம்மருக்கும், அமிர்தவல்லித் தாயாருக்கும் பால், பஞ்சாமிர்தம், தயிர், இளநீர், தேன் உட்படப் பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற மாத வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை அபிஷேகம் நடத்துவார்கள். ஆனால் கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமைகளில் இந்த அபிஷேகம் காலை 7 மணி முதல் 9 மணி வரை நடத்தப்பெறும் என்று ஆலய தலைமை அர்ச்சகர் ஸ்ரீதர் பட்டாச்சார்யார் தெரிவித்தார்.கார்த்திகையில் நடைதிறக்கும் நேரம் :கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 5 மணிக்கு நடை திறந்து சுப்ரபாதம் பூஜை நடைபெறும். அது முடிந்ததும் தர்ம தரிசனத்துக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 7 மணி வரை தர்ம தரிசனத்துக்கு அனுமதி உண்டு.காலை 7 மணி முதல் 9 மணி வரை அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும். காலை 10 மணி முதல் பிற்பகல் 7 மணி வரை தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பெறுவார்கள்.அதன் பிறகு பிரார்த்தனை உற்சவம் நடைபெறும்.ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும் என்பதால் சனிக்கிழமை இரவு 2 மணிக்கே பெரியமலை கோவில் நடையைத் திறந்து விடுவார்கள். ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம்.சிறிய மலையில் உள்ள ஆஞ்சநேயரை கார்த்திகை வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணி வரை தரிசிக்கலாம். சனிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை தரிசிக்கலாம்.ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பெறுகிறார்கள்.* *கடிகாசலம் என்று போற்றப்பெறும் திருத்தலம் சோளிங்கர். சென்னையில் இருந்து 102 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு கடிகை என்றால் 24 நிமிடங்கள். சலம் என்றால் அசைவது. அசலம் என்றால் அசைவில்லாதது. மலை என்று பொருள். அதனால்தான் சோளிங்கர் திருத்தலத்துக்கு கடிகாசலம், திருக் கடிகாசலம் என்றெல்லாம் புராணத்தில் பெயர்கள் அமைந்துள்ளன.* *சோளிங்கர் மலையின் மீது இருந்தபடி இந்த வையத்து மனிதர்களை எல்லாம் வாழ அருளி கொண்டிருக்கிறார் நரசிம்மர். வாழ்வில் ஒருமுறையேனும் இங்கு வந்து ஒரு கடிகை அதாவது 24 நிமிடங்கள் இருந்து, நரசிம்மரைத் தரிசித்தால் மோட்சம் நிச்சயம் என்கிறது பத்ம புராணம்.* *ஸ்ரீ ராமானுஜர், மணவாள மாமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீ நாதமுனிகள் முதலானோர் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்தலப் பெருமையை அருளியுள்ளனர்.* *நரசிம்ம அவதார மூர்த்தத்தை தரிசிக்கும் பேராவல் கொண்டு, விஸ்வாமித்திரர், சப்தரிஷிகள் முதலானோர் இங்கே, இந்த மலையில் கடும் தவம் மேற்கொண்டு, நரசிம்ம தரிசனம் செய்தார்கள் என்கிறது ஸ்தல புராணம்.* *இன்னொரு புராணக் கதையும் உண்டு.* *ராம அவதாரம் முடிவுக்கு வந்தது, ஸ்ரீராமர், வைகுந்தம் புறப்பட்டார். ‘நானும் வருகிறேன்’ என்றார் அனுமன். ‘கடிகாசலத்தில் சப்தரிஷிகள் தவமிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னல் வரப்போகிறது. அந்த இன்னலை நிறுத்து. அவர்களின் தவம் கெடாமல் இருக்க உதவுவாயாக. பின்னர் வரலாம்’ என அருளினார்.அதன்படி அனுமன், சோளிங்கர் மலைக்கு வந்தார். அங்கே, காலன், கேயன் எனும் அரக்கர்கள் சப்தரிஷிகளின் தவத்தைக் கலைக்கவும் குலைக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு, இம்சித்து வந்தார்கள்.* *திருமாலை வேண்டினார் அனுமன். அவரின் சங்கு சக்கரங்களைப் பெற்றார். அரக்கர்களின் சிரசைக் கொய்து போட்டார். சப்தரிஷிகளின் தவத்துக்கு வந்த இடையூறு முடிவுக்கு வந்தது. பெருமாளும், நரசிம்ம மூர்த்தி திருக்கோலத்தில் திருக்காட்சி அளித்துச் சேவை சாதித்தார். ’இந்தக் கலியுகத்தில் உன்னுடைய பணி, பூமியில் மிக மிக அவசியம். உன்னை நாடி வரும் என் பக்தர்களின் இன்னல்களைப் போக்குவாயாக!’ என அருளினார். அதன்படி, சோளிங்கர் திருத்தலத்தில், திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்திய படி, ஜபமாலையை வைத்துக் கொண்டு, யோக அனுமனாக இங்கே தனிச்சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார். அரிதினும் அரிது என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.* *சப்த ரிஷிகளுக்கு நரசிம்மமாகத் திருக்காட்சி தந்ததாலும் யோக ஆஞ்சநேயராக அனுமன் இருப்பதாலும், இன்னும் மகத்துவம் நிறைந்த திருத்தலமாகப் போற்றப்பெறுகிறது, சோளிங்கர் திருத்தலம். மலை மீதுள்ள நரசிம்மருக்கு, பக்தோசித பெருமாள் எனும் திருநாமமும் உண்டு. அதாவது, பக்தர்களின் எண்ணங்களை ஈடேற்றித் தருவார் என்பதால், பக்த உசிதப் பெருமாள் என்று அழைக்கப்பட்டு, அதுவே பக்தோசிதப் பெருமாள் என்றானது.* *சுமார் 1305 படிகள் கொண்ட பிரம்மாண்டமான மலை சோளிங்கர். இந்த மலையின் மீது கோயில் கொண்டிருக்கிறார் யோக நரசிம்மர். இதையடுத்து 500 படிகளேறினால், சின்னஞ்சிறிய மலையில், ராமபக்த அனுமன், யோக ஆஞ்சநேயராகக் காட்சி தருகிறார்.* *யோக நரசிம்மரையும் யோக ஆஞ்சநேயரையும் தரிசித்து விட்டால், இதுவரை இருந்த தடைகளும் எதிர்ப்புகளும் இல்லாமல் போகும். காரியம் யாவும் வீரியமாகும். மனதில் இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் அகலும். இழந்த பொருளை, பிரிந்த உறவை, பதவியை, கெளரவத்தைத் திரும்பப் பெறுவது உறுதி என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.* *ஆண்டு முழுவதும் பல்வேறு விதமான திருவிழாக்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.* *விசேஷ உற்சவங்கள் விபரம் :சோளிங்கர் தலத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் உற்சவ விழாக்கள் விபரம் வருமாறு:-1. சித்திரை மாதம்:1.சித்திரை பெருந்திருவிழா, பத்து நாட்கள் நடைபெறும். தங்க கருட சேவை திருத்தேர். 2.இராமானுஜர் விழா 10 நாட்கள்.2.வைகாசி மாதம்:1.நரசிம்ம ஜெயந்தி, 2.வசந்த உற்சவம், 3.வைகாசி கருட சேவை தொட்டாசார் சவை, 4.நம்மாழ்வார் விழா 10 நாட்கள்.3.ஆனி மாதம்* *1.கோடைத்திருநாள் (3நாட்கள்),2.பரதத்துவ நிர்ணயம் கருட சேவை,3.ஆதிகேசவப்பெருமாளுக்கு வருஷ திருநட்சத்திரமான திருவோண விழா.* *4.ஆடி மாதம்1.ஆண்டாள் திருவாடிப்பூர விழா 10 நாட்கள் திருவாடிப் பூரத்தன்று திருக்கல்யாண புறப்பாடு. 2.ஆடி பவுர்ணமி கஜேந்திர மோட்சம் கருடசேவை. 3.ஜேஷ்டாபிஷேகம்(கவசம் களைந்து திரு அபிஷேகம் நடந்து பின் கவசம் அணிதல்).5.ஆவணி மாதம்1.திருப்பவித்ரோற்சவம்- 7நாட்கள். பெரியமலையில் நடை பெறும். 2, ஸ்ரீஜெயந்தி- மறுநாள் உரியடி கண்ணனுக்கும் பெருமாளுக்கும் நான்கு வீதி புறப்பாடு.6.புரட்டாசி மாதம்1.நவராத்திரி உற்சவம் 10-நாட்கள் பெருமாள், தாயார் இருவருக்கும். 2. விஜயதசமி, குதிரை வாகனம்.7.ஐப்பசி மாதம்1.டோலோற்சவம் எனும் ஊஞ்சல் திருவிழா 5 நாள் நடை பெறும். 2.மணவாள மாமுனிகள் 10 நாள் உற்சவம்.3,கடை வெள்ளிக்கிழமை. 4,தீபாவளி ஆஸ்தானம். 5,வனபோஜனம்.8.கார்த்திகை மாதம்1. பெரிய மலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறிய மலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் உற்சவப் புறப்பாடு. திருமஞ்சனம் முதலிய விசேஷம். 2.கார்த்திகை தீபத் திருவிழா- சொக்கப்பனை கொளுத்துதல். 3, திருமங்கையாழ்வார் 10 நாள் உற்சவம். 4, அனுமன் ஜெயந்தி சின்னமலையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு விசேஷ உற்சவம்.9. மார்கழி மாதம்:1. பகல் பத்து திருநாள், 2. வைகுண்ட ஏகாதசி, 3. முக்கோடி துவாதசி தீர்த்தவாரி உற்சவம், 4. இராப்பத்து திருநாள். இறுதி நாளில் நம்மாழ்வார் பரமபதம் புகும் திருவடி தொழும் விழா, 5. ஆண்டாள் மார்கழி நீராட்டம் 3 நாள் நடைபெறும். 6. ஜனவரி முதல் தேதி திருப்படித் திருவிழா10. தை மாதம்:1. பொங்கல்-சங்கராந்தி ஆண்டாள் திருக்கல்யாணம், 2. கனுப்பாரி (பரி) வேட்டை, 3. கிரி பிரதசட்னம், 4. தைப்பூசம், 5. தை அமாவாசை தொடங்கி தெப்பல் உற்சவம் 3 நாள் நடைபெறும்.11. மாசி மாதம்:1. தவன உற்சவம், 3 நாள், 2. மாசி உத்திரரடத் திருநாள் 10 நாள். (சுவாமி தொட்டாசார்- அவதார உற்சவம்), 3. மாசி மகம்- தெப்பல் உற்சவம் 3 நாள்.12 பங்குனி மாதம்:1. யுகாதி (அ) தெலுங்கு வருடப்பிறப்பு உற்சவம். பஞ்சாங்க சிரவணம், 2. பெரியமலையில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணம்.எப்படிச் செல்வது?சோளிங்கர் தலமானது வேலூர் மாவட்டத்தில் உள்ளது. திருத்தணி-சித்தூர் நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு செல்ல அரக்கோணத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு.ஆலயத்தைத் தொடர்பு கொள்ள...சோளிங்கர் நரசிம்மர் ஆலய முகவரி:-உதவி ஆணையர் / செயல் அலுவலர்,அருள்மிகு லட்சுமி (யோக)நரசிம்ம சுவாமி திருக்கோவில்,சோளிங்கர்-631 102. வேலூர் மாவட்டம்.போன் : 04172- 262225, 263515.* <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *https://www.youtube.com/watch?v=zcs5gUS3_0U <https://www.youtube.com/watch?v=zcs5gUS3_0U>* *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* *Vanakkam Subbu* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BpdVCAZiyTTLkvF4zOD5WnJuHF5-SBvMfxdNXK%3Da%2BbG1w%40mail.gmail.com.
