<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> திருப்புலியூர் (குட்டநாடு)
*முதல்வண்ண மாமே முலைவண்ண முன்னே* *விதிவண்ண நீங்கி விடுமே - சதுரத்* *திருப்புலியூர் நின்றான் றிருத்தண் டுழாயின்* *மருப்புலியூர் தென்றல் வரின் (**63)* *- **பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி* *அந்தாதி* *மூலவர் மாய பிரான்.* *நின்ற திருக்கோலத்தில் பகவான் அருள் பாலிக்கிறார்.* *தாயார் பொற்கொடி நாச்சியார்.* *தீர்த்தம்* *பரஜ்நாஸரஸ்.* *பூஞ்சுனை* *தீர்த்தம்.* *விமானம் புருஷோத்தம விமானம்.* *சப்த* *ரிஷிகளுக்குத் திருமால் நேரடியாகத் தரிசனம் கொடுத்த இடம்.* *இந்தக் கோவில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பெற்றதாகச் சொல்லப்பெறுகிறது.* *தற்போது **'**குட்டநாடு**' **என்று அழைக்கப்பெறுகிறது. எர்ணா குளத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் இரயில் பாதையில் உள்ள செங்கனூர் இரயில் நிலையத்திற்கு மேற்கே சுமார் **5 **கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.* *இக்கோவில் திருப்புலியூர் மகாவிஷ்ணு கோவில் என்றும்**, '**பீமன் கோவில்**' **என்றும் அழைக்கப்பெறுகிறது.* *துரோணரைக் **கொல்வதற்காக**, **அஸ்வத்தாம என்ற யானையை முதலில் பீமன் கொல்ல**, **துரோணரின் புதல்வன்* *அஸ்வத்தாமா இறந்து விட்டதாக துரோணர் நினைக்கும் வகையில்**, **யுதிஷ்டிரன் சம்ஸ்கிருத மொழியில் **'**அஸ்வத்தாமா கத குஞ்சரஹ**' **என்று யானை என்ற வார்த்தை கடைசியில் வரும்படி சொன்னான். **'**குஞ்சரஹ**' **என்ற வார்த்தையை துரோணர் காதில் விழாத அளவுக்கு யுதிஷ்டிரன் மெல்லச் சொன்னான் என்றும்**, '* *குஞ்சரஹ**' **என்று யுதிஷ்டிரன் சொன்னபோது கிருஷ்ணர் தன்* *சங்கை ஊதி* *அந்த வார்த்தை துரோணர் காதில் விழாதபடி செய்து விட்டான் என்றும் இருவிதமாகச் சொல்லப்படுவதுண்டு. அதைக்கேட்டு துரோணர் தன்* *வில்லைக் கீழே போட்டு விட்ட நிலையில் திருஷ்டத்யும்னன் அவரைக் கொன்றான்.* *இந்த தர்மத்தை மீறிய செயலில் பீமனுக்கும் பங்கு உண்டு* *என்பதால்**, **அதற்குப் பிராயச்சித்தமாக (யுதிஷ்டிரன் திருச்செங்குன்றூர்* *கோவிலை புனர்நிர்மாணம் செய்தது போல்) பீமன் இந்தக் கோவிலைப்* *புனர் நிர்மாணம் செய்தான் என்பது வரலாறு.* *யுத்த தர்மத்துக்கு விரோதமாக* *துரியோதனனைத்* *தொடையில் அடித்துக் கொன்ற* *செயலுக்குப் பிராயச்சித்தம் தேடவே பீமன் இந்தக் கோவிலைப் புனர் நிர்மாணம் செய்தான் என்றும் சொல்லப் பெறுவதுண்டு.* *இந்தக் கோவிலில் ஒரு பெரிய கதை நிறுவப்பட்டுள்ளது. இது பீமனின் கதை என்று நம்பப்பெறுகிறது.* *சிபிச் சக்கரவர்த்தியின் மகன் வருஷாதர்பி அரசாண்ட போது சப்தரிஷிகள் (அத்திரி**, **காசியபர்**, **கௌதமர்**, **வசிஷ்டர்**, **பரத்வாஜர்**, **விசுவாமித்திரர்**, **ஜமதக்கினி) அங்கு வந்தனர். அரசன் அவர்களுக்குத் தானம் செய்ய முன்வர**, **நாட்டில் வறுமை உள்ளதால் தங்களால் தானத்தை ஏற்க இயலாது என்று சப்தரிஷிகள் கூறிவிட்டுச் சென்றனர். பின்னர் தனது அமைச்சர்கள் மூலம் பொன் கலந்த பழங்களைக் கொடுத்தனுப்ப**, **முனிவர்கள் அதையும் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் கோபம் கொண்ட வருஷாதர்பி ஒரு வேள்வியைச் செய்து**, **அதில் **'**க்ருத்யை**' **என்ற தேவதையை உண்டாக்கி முனிவர்களைக் கொல்ல அனுப்பினான்.* *சப்தரிஷிகள் மகா விஷ்ணுவைத் துதிக்க**, **அவர் இந்திரனை அனுப்பினார். இந்திரன் புலியாக மாறி**, **அந்தத் தேவதையைக் கொன்றான். அதனால் இந்த ஸ்தலத்திற்கு **'**திருப்புலியூர்**' **என்ற பெயர் ஏற்பட்டது. சப்தரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீமந் நாராயணன்**, **மாய பிரானாகத் தோன்றிக் காட்சி அளித்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.* *மூலவர் மாய பிரான் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம்**, **கிழக்கே திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றார். **தாயாருக்கு பொற்கொடி நாச்சியார் என்பது திருநாமம். சப்தரிஷிகளுக்குப் பகவான் பிரத்யக்ஷம்.* *திருமங்கையாழ்வார் ஒரு பாசுரமும்**, **நம்மாழ்வார் **11 **பாசுரங்களுமாக மொத்தம் **12 **பாசுரங்கள் பாடியுள்ளனர்.* *இக்கோவில் காலை **5 **மணி முதல் **11 **மணி வரையிலும்**, **மாலை **5 **மணி முதல் இரவு **8 **மணி வரையிலும் திறந்திருக்கும்.* *பரிகாரம்* *நல்லவர்களாக இருப்பவர்களுக்கும்**, **தெய்வ வளத்தைத் தவிர மற்ற பலம் எதுவும் இல்லாத சாமானியர்களுக்கும்**, **கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும்.* *இந்த கட்டங்களை எப்போது**, **யாரால் எப்படி வரும் என்று சொல்ல முடியாது.* *எல்லோரும் தன்னைக் கைவிட்டு விட்டு விட்டால் பகவானைத் தஞ்சம் அடைய வேண்டிய இடம்* *தான் இந்தத் திருப்புலியூர் மாய பிரான் திருக்கோயில்.* *பகவான் நிச்சயம் அவர்களது துன்பங்களைப் போக்குவதோடு சொர்க்கத்திற்கும் இடம் கொடுத்து அருள்பாலிப்பார்.* *மங்களாசாஸனம் -* *நம்மாழ்வார் - **3535 - 45* *திருமங்கையாழ்வார் - **2673 (71)* *மொத்தம் 12 பாசுரங்கள்.* *https://www.youtube.com/watch?v=1x9OoDnTXQs <https://www.youtube.com/watch?v=1x9OoDnTXQs>* *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* *Vanakkam Subbu* [image: wygltUSizKEORrTQqC2Nk0Ug4hf6FDz7Lcu2SYFxlGnPRsLO_T3n36kqlspaL6no.gif] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BoJR3ApWVX9jGip%3DTMy%2BH0uX%2B4NpZfhczHKp3j%2BbkkVOw%40mail.gmail.com.
