| 
| ஓம் | 
| சுதந்திரத்தின் கதை |



| சுதந்திரம் பறிபோன கதை |

 |

 |


| சுதந்திரம் பறிபோன கதை ..தொடர்ச்சி..3
   |


| 
| 
| ஆங்கில ஆட்ச்சிக்கு வழிகோலியவர் |


 |    வெறும் வணிக  நோக்கத்தை மாற்றி, பாரத நாட்டில் ஆங்கில ஆட்சி ஸ்திரமாக 
அமைவதற்கு அடிகோலியவர் ராபர்ட் கிளைவ் என்பவராவார்.

  கிழக்கிந்தியக் கம்பெனியின் ஒரு குமாஸ்தா வாகத்தான் பதவி ஏற்று சென்னை நகருக்கு 
வந்தார்.

  கிளைவ் . சென்னையில் கிழக்கிந்தியக் கம்பெனியில் பொறுப்பேற்ற சமயம் 
ஐதராபாத்திலும், கர்நாடகத்திலும் அரச பதவிக்காக  வாரிசுப் போர்கள் நடைபெற்றுக் 
கொண்டிருந்தன.

  ஐதராபாத் நிஜாம் பதவியைப் பெற நாசர்ஜங் என்பவர் முயற்சி செய்துகொண்டிருந்தார்.

  அந்த சமயம் கர்நாடகத்தின் ஆட்சிப் பொறுப்பில் அன்வர்தீன் என்பவர் இருந்தார்.

  அவரை வீழ்த்திவிட்டு நவாப் பதவியைப் பெற சந்தா சாகிப் திட்டமிட்டு உழைத்துக் 
கொண்டிருந்தார். 

  அன்வர்தீனை தன் சொந்த பலத்தால் மட்டுமே வீழ்த்தமுடியாது என்று கண்ட சந்தா சாகிப் 
பிரெஞ்சு நாட்டு ஆதிக்கப் பகுதியின் கவர்ணராக இருந்த டியூப்ளே என்பவரின் உதவியை 
நாடினார்
.
  பிரெஞ்சுப் படையின் உதவியுடன் சந்தாசாகிப் அன்வர்தீனை எதிர்த்தார்..

  அன்வர்தீன் தோற்றோடிவிட்டார்.

  அன்வர்தீனின் மகனான முகம்மது அலி திருச்சிராப்பள்ளிக்கு ஓடி அங்கிருந்த 
கோட்டைக்குள் மறைந்து வாழ்ந்தார்.

  சந்தா சாகிப் கர்நாடகத்தின் நவாப் ஆக ஆட்ச்சிப் பொருப்பினை ஏற்றுக்கொண்டார்.

  முகம்மது அலி, சந்தா சாகிப்பைத் தோற்கச் செய்து  ஆட்சிப் பொறுப்பை மீட்க 
திட்டமிட்டு ஆங்கிலக் கம்பெனியின் உதவியை நாடினார். 

  ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி, சந்தர்ப்பத்தை தங்களுக்குச் சாதகமாகப் 
பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டு முகம்மது அலிக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்தது.

  முகம்மது அலி உயிரோடு இருக்கும் வரை தனது அரச பதவிக்கு ஆபத்துதான்   என்பதைப் 
புரிந்துகொண்ட சந்தாசாகிப் முகம்மது அலியைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.  

  பிரெஞ்சுப் படையின் உதவியுடன் சந்தா சாகிப் ஒருநாள் திருச்சிராப்பள்ளியை அடைந்து 
முகம்மது அலி ஒளிந்துகொண்டிருந்த கோட்டையை முற்றுகையிட்டார்.

  கிழக்கிந்தியக் கம்பெனி முகம்மது அலிக்கு உதவி செய்ய முயற்சி மேற்கொண்டது.

  சந்தாசாகிப்புக்கு எதிர் நடவடிக்கையாக ராபர்ட் கிளைவ் ஒரு சிறு படைக்குத் தலைமை 
தாங்கி கர்நாடகத்தின் தலை நகரான ஆர்க்காட்டிற்குச் சென்று அதனைக் கைப்பற்றினார்.

  அந்த நிகழ்ச்சியினை அறிந்த சந்தா சாகிப் ஆவேசமடைந்தார்.

  தன் மகன் தலைமையில் ஒரு பெரிய படையை சந்தாசாகிப் ஆர்க்காட்டை நோக்கி அனுப்பி 
வைத்தார்.

  சந்தா சாகிப்பின் படைக்கும், கிளைவின் படைக்கும்மிடையே 1751 ஆம் ஆண்டு கடும்போர் 
நடைபெற்றது.

  கிளை, சந்தா சாகிப் படையைச் சிதற அடித்து மாபெரும் வெற்றியைப் பெற்றார்.

  அந்த வெற்றி ராபர்ட் கிளைவிற்க்கு பெரும் புகழைத் தேடித் தந்த்து. அவர், 
’ஆர்காட்டு வீரர்’ என்று பெருமையுடன் பாராட்டப் பட்டார்.

  பின்னர் ராபர்ட் கிளைவ், லாரென்ஸ் என்னும் ஆங்கிலத் தளபதியுடன் 
திருச்சிராப்பள்ளிக்குச் சென்று, அங்கே  முற்றுகையிட்டிருந்த சந்தா சாகிப்பைத் 
தோல்வியுறச்செய்தார்.

  முகம்மது அலி கர்நாடகத்தின் நவாப்பாக ஆனார்.

  இந்த நிகழ்ச்சி காரணமாக ஆங்கிலேயரின் செல்வாக்கு அதிகமாகியது.
   |

 |

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/34597070.302089.1662548369145%40mail.yahoo.com.

Reply via email to