சாத்திர வேதஞ் சதகோடி கற்றாலும்
சமய நெறிகளி னாசாரம் பெற்றாலும்
பாத்திர மேந்திப் புறத்தி லலைந்தாலும்
பாவனை யாலுடலுள்ள முளைந்தாலும்
மாத்திரைப் போது மெமன்வரு மப்போது
மற்றொன்றுதவாதுதவா துவாது
சூத்திரமாகிய தோணி கவிழுமுன்
சுக்கானை நேர்படுது திக்கணமே சொன்னேன் .
 இதையே நான் பிறிதொரு இடத்தில் கூறினேன்  மென்பொருள் பலப்பல  தொன் பொருள்
ஒன்றே ; ஐயரும் ,மணியம்மையும் பாடலில் இடம்பெற்றாலும், அறிந்தவர் அறிவர்
அவர்கள் யாரென்று; அறிவிலான் ஆக்கம் அழித்தார் பொருட்டே KR IRS 15922

On Wed, 14 Sept 2022 at 22:52, Venkatachalam Subramanian <
[email protected]> wrote:

> குணங்குடியார் பாடல்களில் சில:
> உமையாள் பாதம் முன்னிற்க*
>
> (*இப்பாடல் சேகனாப் புலவருடையது)
>
> ஆதியந்தங் கடந்தவுமையாள்தன் பாதம்
> அகண்டபரி பூரணமாம் ஐயர் பாதம்
> சோதியந்தங் கடந்த கணபதியின் பாதம்
> தொழுதிறைஞ்சிக் கரங்குவித்துப் போற்றி செய்து
> ஆதியந்தங் கடந்ததந்தி பாதம் என்றும்
> வாலைமனோன் மணியம்மை பாதமென்றும்
> ஓதியந்தங் கடந்தண்டம் இரண்டதாக
> ஒன்றுமறி யாவறிஞ னுரைசெய்தானே.
>
> நந்தீஸ்வரக்கண்ணி
>
> ஆதியந்தங் கடந்தவுமை யாளர்ருள் நாதாந்தச்
> சோதியயந்தங்க் கடந்தசெழுஞ் சுட்ரே நந்தீஸ்வரனே!
>
> முடியடியாய் நின்றநடு மூல மணிவிளக்கே
> அடிமுடியாய் நின்றநடு அணையேநந்தீஸ்வரனே
>
> ..............................................................................
>
> ....................................................................................
>
>
> ...................................................................................
>
> ....................................................................................
>
>
>
>
> இராகம் கேதார கௌளம்; தாளம் ஆதி
> பல்லவி
> சூத்திரப் பாவை கயிறறு வீழுமுன்
> சூட்சக் கயிற்றினைப் பாரடா-அதி
> சூட்சக் கயிற்றறினைப் பாரடா....... (சூத்தி)
> அநுபல்லவி
> நேத்திரமிரண்டினும் நேரேயிலங்கிய
> நீடொளி போன்றது தேடரிதாகிய
> காத்திரமுள்ளது யாவும்பொதிந்தது
> கையிலுங் காலிலு மெட்டப்படாததோர் ... (சூத்தி)
>
> சரணங்கள்
> 1.சாத்திர வேதஞ் சதகோடி கற்றாலும்
> சமய நெறிகளி னாசாரம் பெற்றாலும்
> பாத்திர மேந்திப் புறத்தி லலைந்தாலும்
> பாவனை யாலுடலுள்ள முளைந்தாலும்
> மாத்திரைப் போது மெமன்வரு மப்போது
> மற்றொன்றுதவாதுதவா துவாது
> சூத்திரமாகிய தோணி கவிழுமுன்
> சுக்கானை நேர்படுது திக்கணமே சொன்னேன் ..(சூத்தி)
>
> 2.உற்றுறவின் முறை யார் சூழ்ந் திருந்தென்ன
> ஊருட்சனங்களெல் லாரும் பணிந்தென்ன
> பெற்றாரும் பெண்டீரும் பிள்ளை யிருந்தென்ன
> பேணும் பெருஞ்செல்வ ஆணவத்தாலென்ன
> கத்தன் பிரிந்திடிற் செத்த சவமாச்சு
> காணாது காணாது கண்டதெல் லாம் போச்சு
> எத்தனை பேர்நின்று கூக்குர லிட்டாலும்
> எட்டாமற்போய்விடுங் கட்டையல் லோவிந்தச்... (சூத்தி)
>
> 3.மாயப்பிறவி வளையை யடைத்திட
> மாறாத் தியான மனத்தி னினைத்திட
> காயா புரிக்கோட்டை கைக்கு ளகப்பட
> காணு மணிச்சுடர் தானே விளங்கிட
> ஆயுமறிவுடன் யோக்த்தி னாலெழும்
> ஆனந்தத் தேனையுண் டன்புடனேதொழும்
> தாயா யுலகத்தை யீன்ற குணங்குடித்
> தற்பரனைக் கொண்டு வப்புடனே சென்று (சூத்தி)
>
> வெ.சுப்பிரமணியன்
> ஓம்.
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsC_aCr_%2BqVF0dZY6bm%2BB2gFHZ2co%2Bx2OgjcBdpSxyUsQ%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsC_aCr_%2BqVF0dZY6bm%2BB2gFHZ2co%2Bx2OgjcBdpSxyUsQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopHYpXcfRf1d8c0r0cONOHPF9HhMnGSRPDdBGYJqcdv6A%40mail.gmail.com.
  • [no subject] Venkatachalam Subramanian
    • Re: Rajaram Krishnamurthy

Reply via email to