கருஞ்சீரக விதைகளில் நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், சபோனின் ஆகிய வேதிப்பொருள்களுடன், உடல் இயக்கத்திற்கு தேவையான இரும்பு, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய தாதுஉப்புக்களும் மற்றும் லினோலெனிக் அமிலம் மற்றும் ஒலியிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்களும், விட்டமின்கள் எ, சி, ஈ, கே ஆகியவையும் இயற்கையாகவே கலந்துள்ளது கூடுதல் சிறப்பு. இதன் விதைகள் கறுப்பு நிறமாக இருக்க காரணம் இதில் உள்ள ‘மெலட்டின்’ என்ற வேதிப்பொருள்தான். இது அதிக மருத்துவ குணம் உடையதாக மதிப்பிடப்படுகின்றது.
கருஞ்சீரகம் இன்று உலகையே அச்சுறுத்தும் கொடிய வியாதிகளான நீரிழிவு, இதய நோய்கள், புற்றுநோய் இவற்றை தடுக்கும் தன்மை பெற்றுள்ளதோடு சிகிச்சையிலும் நல்ல பலன் தருவதாக உள்ளதை பல ஆய்வுகள் கூறுகின்றன. பல்வேறு நோய்களை தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் இதன் விதைகளில் உள்ளது. இதன் மருத்துவ குணத்திற்கு முக்கிய காரணம் இதன் விதைகளில் உள்ள ‘தைமோகுயினோன்’ என்ற வேதிப்பொருள் தான். இந்த வேதிப்பொருளை மையமாக உலக அளவில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதும் சிறப்பான ஒன்று. இந்த வேதிப்பொருள் இருப்பதனால் கருஞ்சீரகம் வீக்கமுருக்கியாகவும், வலிநிவாரணியாகவும், உடல் வெப்பத்தை தணிப்பதாகவும், பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்கும் கிருமிக்கொல்லியாகவும், பூஞ்சைக்கொல்லியாகவும், கல்லீரல், நரம்புமண்டலம், இதயம், சிறுநீரகம் ஆகிய உள்ளுறுப்புகளை பாதுகாப்பதாகவும், ஒவ்வாமையை நீக்குவதாகவும், புண்ணை ஆற்றுவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு மாதவிடாயை சீராக்கும் தன்மையும், பிரசவத்திற்கு பின் பால்சுரப்பினை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு. ஆஸ்துமா, தோல் வியாதிகள், மூட்டு வியாதிகள், இவற்றுக்கும் நல்ல பலனை தரக்கூடியது. சர்க்கரை வியாதி மட்டுமல்லாமல், மருந்துகளாலும், உணவு வகைகளாலும், கண்ணுக்கு தெரியாத உலோக சரக்குகளாலும் பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை மீட்டெடுக்க இயற்கை நமக்கு கொடுத்த மூலிகை பொக்கிஷம் இந்த கருஞ்சீரகம். இதைப்பயன்படுத்த சிறுநீரக செயல்பாட்டை சீராக்கும் தன்மையுடையது. க்ளோமெருலஸ் வடிகட்டும் திறனை மேம்படுத்தும் தன்மையுடையதாகவும் சில ஆய்வுகள் கூறுவது சிறப்பு. அதனால் தான் என்னவோ ‘அதிசய மூலிகை’ என்ற பெயரும் இதற்குண்டு. இத்தகைய கருஞ்சீரகத்தை பொடித்து சூரணமாகவோ, அல்லது இதனைக்கொண்டு தயாரிக்கப்படும் தைலமாகவோ இதனைப் பயன்படுத்த இதன் மருத்துவக்குணங்களை பெற முடியும். சரும பாதுகாப்பிற்கும், அழகிற்காகவும் கருஞ்சீரக தைலம் பெரிதும் உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடல் அழகிற்கு முக்கியத்துவம் தரும் பலர் உடல் ஆரோக்கியத்திற்கு தருவதில்லை. கருஞ்சீரகம் பல நம் உடலில் அற்புதங்களை நிகழ்த்தும் மூலிகை. ஆகவே கருஞ்சீரகத்தை அழகிற்காக மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் அஞ்சறைப்பெட்டியில் சேர்த்து பயன்படுத்த நலம் நம்மை நாடி வரும். xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx Black fennel seeds are naturally mixed with fiber, amino acids, saponin, minerals like iron, sodium, calcium and potassium, essential for body movement, fatty acids like linolenic acid and oleic acid, and vitamins A, C, E and K. The reason why its seeds are black is because of the chemical 'melatin' it contains. It is considered to be highly medicinal. Many studies say that black cumin has the ability to prevent the deadly diseases that threaten the world today, such as diabetes, heart diseases, and cancer, and it also gives good results in treatment. Its seeds also contain antioxidant properties that prevent various diseases. The main reason for its medicinal properties is the chemical 'thymoquinone' in its seeds. It is also a great thing that many researches are being done globally on this chemical. Due to the presence of this chemical, black fennel is anti-inflammatory, pain-relieving, heat-relieving, germicidal and fungicidal to destroy bacteria and viruses, protects the liver, nervous system, heart, kidney, removes allergies, heals ulcers, and increases immunity. It has the property of regulating menstruation in women and increasing the secretion of milk after childbirth. Asthma, skin diseases, joint diseases, these are also beneficial. Black fennel is an herbal treasure given to us by nature to restore kidneys affected not only by diabetes but also by drugs, foods and invisible metal cargo. It can be used to regulate kidney function. Some studies also suggest that glomerulus can improve filtration efficiency. That is why it has the name 'miracle herb'. The medicinal properties of this black cumin can be obtained by using it as a poultice, or as an ointment made with it. Black fennel ointment is widely used worldwide for skin care and beauty. Many people who give importance to physical beauty do not give importance to physical health. Black cumin is a herb that works wonders on our body. Therefore, health urges us to use black fennel in the wallet not only for beauty but also for health. KR IRS 29922 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopPiw7iNcL1EbiPZfmRnERhoSKhAYaAwjXgK4BJCxp%2B-w%40mail.gmail.com.
