கல்கியின் 5 பாகம் கொண்ட புனைவு கதையை மணிரத்தினம் திரை காவியமாக்கி
இருக்கிறார். முதல் பாகம் வெளி வந்திருக்கிறது.

பொன்னியின் செல்வனும் வந்திய தேவனும் இலங்கை தீவில் கடலில் ஏற்படும் சண்டையில்
கப்பல் உடைய கடலில் மூழ்குகிறார்கள். பிழைதார்களா இறந்தார்களா எனத் துடிப்போடு
இரசிகர்கள் பார்க்க நந்தினி உருவம் ஒத்த ஒரு பெண் கடலில் நீந்தி வர முதல்
பாகம் முடிகிறது.

இந்த படம் ஆதித்த கரிகாலன் (விக்ரம்) இராசகூடர்களோடு போரிட்டு வெற்றி
பெற்றதில் தொடங்கி அங்கிருந்து வந்தியதேவனை தன் அப்பா சுந்தரச் சோழரை அழைத்து
வரவும் தன் தங்கை குந்தவை யிடம் சேதி சொல்லவும் அனுப்புவதில் தொடங்குகிறது.
பொன்னி நதி பாடலோடு பயனிக்கிறான் வந்தியதேவன். பாடலும் படமாக்கிய விதமும்
அருமை.

அடுத்து ஆழ்வார்கடியன்(ஜெயராம்) சந்திகிறான். அவன் நந்தினிக்கு செய்தி
சொல்கிறான். பெரிய பழுவேட்டயார் பல்லக்கு வர நந்தினி பல்லக்கில் இருப்பாள்
என்ற ஆர்வத்தில் அங்கு வந்திய தேவன் உட்புக துரத்தப்படும் அவன் நந்தினியின்
அரண்மனையில் நுழைகிறான்.

இந்த கதையின் பெரும் பாத்திரம் நந்தினி (ஐஸ்வர்யா ராய்) இவர் தான் இக் கதையின்
முக்கிய நாயகி. இவரை பற்றி நாவலில் ஆசிரியர் கல்கி விவரித்ததை படித்து விட்டு
இந்த பொன்னியின் செல்வன் நந்தினியை பார்க்க வேண்டும்

கல்கியின் காவியத்தில்  அனைவரையும் விஞ்சி நிற்பது நந்தினி.
அவள் மந்தாகினி மகள்.
ஆதித்த கரிகாலனின் முன்னாள் காதலி.
வீரபாண்டியனின் அன்பிற்குரியவள்.
பெரிய பழுவேட்டரையரின் பட்டத்து ராணி!வந்தியத்தேவன்,கந்தன்மாறன்,
பார்த்திபேந்திர பல்லவன் என அனைவரும்  நந்தினியின் அழகில் மையல் கொண்டவர்கள்.

அவள் மிக பெரும் அழகி என்பதை கல்கி பக்கம் பக்கமாக விவரித்திருப்பார் ஆனால்
படத்தில் விவரிக்க இயலாது.

முதல் அறிமுக காட்சியில் வந்திய தேவனிடம் முத்திரை மோதிரத்தை கொடுத்து சுரங்க
வழியாக போங்கள். அங்கு தங்க நகைகளை கண்டு மயங்கி விடாதீர்கள் என்பார். அதற்கு
கார்த்திக் வைரச்சுரங்கமே என்
முன்பு இருக்கும் போது தங்கத்தைப் பார்த்தா மயங்கப் போகிறேன் என்பார் அப்போது
ஐஸ்வர்யா ராய் ஒரு பார்வை பார்ப்பார். அழகின் கர்வத்தோடு கூடிய வஞ்சனை பார்வை.
அருமையாக வெளிப்படுத்தி இருப்பார்.

அந்த ஒரு வசனம் நந்தினி அழகின் சொரூபம் என்பதை வெளிக் காட்டிவிடும். ஏன் அவள்
மீது ஆண்கள் ஆசைகொண்டு அழைகிறார்கள் என்பதை புரிய வைக்கும். ஆண்கள் மட்டுமல்ல
குந்தவை,வானதி இன்னும் பல இளவரசிகளுக்கும் நந்தினியின் அழகில் பொறாமை உண்டு!
ஆண்களை ஆட்டுவிப்பவள்!பழிவாங்க துடிக்கும் நாகம் அவள். தான் பிறப்பால் அவமானப்
படுத்தப் பட்டதால் தன் பேரழகை ஆயுதமாக்கி அரசியல் சதுரங்க மேடையில் கவனமாக
காய்களை நகர்த்தி சோழப் பேரரசை அழிக்க நினத்து செயல் புரிபவள்.

ஏன் நந்தினி பற்றி இவ்வளவு சொல்கிறேன் என்றால் இக் கதை நந்தினியை அவளின் சதியை
சுற்றியே சுழலும். அவள்
பிறப்பிலும்,வளர்ப்பிலும்தான் எவ்வளவோ குழப்பங்கள்.
மந்தாகினி மகள் அவள்
ஆனால் மந்தாகினி சுந்தர் சோழரின் முன்னாள் காதலி. சோழரோடு சிலகாலம் சேர்ந்தும்
வாழ்ந்தவர்.
ஆனால் நந்தினி சுந்தரசோழருக்கு பிறந்தவள் அல்ல.

சுந்தரசோழருக்குப்பிறகு பாண்டிய மன்னன் வீரபாண்டியனோடு சிலகாலம் வாழ்ந்தவள்
மந்தாகினி. ஒரு ஆணும் பெண்ணும் இரட்டை குழந்தைகளில் ஒருத்தி நந்தினி.
அந்த உறவில் பிறந்தவள்தான் நந்தினி.
மந்தாகினி சகோதரி மகளாய் முதலில் வளர்ந்து பிறகு குருக்கள் ஒருவரின்
வளர்ப்புப் பெண்ணாகிறாள். அந்த இளம்பருவத்தில்  ஆதித்தகரிகாலனை காதலிக்கிறாள்.
அவளின் தாய் சுந்தரச் சோழரின் கந்தர்வ மனைவி. அவருக்கு நந்தினி பிறக்க வில்லை
என்றாலும் ஆதித்த கரிகாலனுக்கு தங்கை முறை.
வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் கொன்ற பிறகு,நந்தினி சோழப் பேரரசின்
மதிப்பிற்குரிய பெரியபழுவேட்டையரை திருமணம் செய்து பழுவூர் ராணியாகிறாள்.
பெரிய பழுவேட்டரையர் சுந்தரசோழருக்கே உறவு முறையில் மாமா முறை. ஆக,நந்தினி
தனது தாயார்  ஊமைராணி என்கிற மந்தாகினி ஆளும் வர்க்கத்தினரால்
பாதிக்கப்பட்டதால் சோழர்களை பலி வாங்கி தான் பிறப்பால் வஞ்சிக்கப் பட்டு காதலை
இழந்து குந்தவையால் துரத்தப் பட்டதால் அந்த சோழ அரியணை மீது ஆசை கொள்கிறாள்.
அவளின் ஆசை அடுத்த தலைமுறையில் ஆளுகின்ற மன்னர்களை பலி வாங்க துடிக்கிறது.

இதனை புதிந்து கொண்டு படத்தை பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இனி படத்தில்
குந்தவையை சந்திக்கும் காட்சி நாவலில் இருந்து கொஞ்சம் மறுபட்டு
எடுக்கப்பட்டுள்ளது. அங்கும் கார்திகின் வந்தியத்தேவனின்
குறும்பும் காதலும் அழகாய் வெளி படுத்தப்பட்டுள்ளது.

படத்தில் முக்கிய காட்சி
குந்தவையும் நந்தினியும் சந்திக்கும் காட்சி. உறவின் படி நந்தினி குந்தவைக்கு
பாட்டி முறை ஆனால் இளம் பெண். தன்னால் சோழ நாட்டிலிருந்து முன்பு விரட்டப்
பட்டவள். குந்தவையை அவமானப் படுத்த துடிக்கும் அழகி. இருவரும் அடுத்து
சந்திக்கும் காட்சி அழகாக அற்புதமாக படமாக்கியிருப்பார் மணிரத்னம். திர்ஷவும்
ஐஸ்வர்யாவும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். கிளாஸிகள் சீனில் இது
முக்கியமானது.

அடுத்தது
பொன்னியின் செல்வனும் வந்தியதேவனும் சந்திக்கும் காட்சி அதனைத் தொடர்ந்து
சண்டை நாவலில் உள்ளது போல் படமாக்கி உள்ளார்கள். வந்திய தேவன் பொன்னியின்
செல்வன் வேடத்தில் மாட்டிக் கொள்வது.  அங்கு ஏற்படும் பெரும் சண்டை கடலில்
இருவரும் மூழ்குவது என முதல் பாகம் முடியும்.

இதில் பெரிய பழுவேட்டயராக வரும் சரத்குமார், சிறிய பழுவேட்டையார் பார்த்திபன்
அவரவர் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள். பிரபு விகரம் பிரவும் அவ்வாறே.

சமுத்திர குமாரியின் நடிப்பும் சூப்பர்.

பின்னனி இசை நன்றாக இருக்கிறது. A. R. ரகுமான் தேவராட்டம் பாடலில் புகுந்து
விளயாடியிருப்பார்.

செட்டிங் சூப்பர். படத்தின் காட்சிகள் அமைப்பு, திரைகதை, வசனம் அருமை.

ஒரு சரித்திர பின்னனியோடு எழுதப்பட்ட நாவலை இதைவிட அருமையாக படமாக்க இயலாது.

பார்க்க வேண்டிய படம்.

அரசியலை புறம் தள்ளிவிட்டு பாருங்கள். இதில் இந்து சமயமும் இல்லை. புத்த
சமயமும் இல்லை. பொன்னியின் செல்வன் பிற்காலத்தில் இராஜ இராஜ சோழனாக அரியணை
ஏறப் போகும் மன்னனின் இள வயது வாழ்வு. சோழ சம்ராச்சியத்தின் அரியணை போட்டி
அதன் சதி. இதுதான் கதை.

மணிரத்னம் தான் ஒரு பெரிய சிறந்த இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

கதை நகர்த்திய விதம் பாத்திர தேர்வு தேவையான நடிப்பை தேவைக்கு கொண்டு வந்தது
என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார்.

A.R. ரகுமானை சரியாக உபயோகப் படுத்தி இருக்கிறார்.......
ReplyForward

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqKyUBJRwGcP_K4LS6%3D2uQLV19HwecS5TWR5ucYqQe0mQ%40mail.gmail.com.

Reply via email to