Though I regard Sujatha @ Rangarajn as a scholar, his words as far as the
Vishnu Puranam is concerned might be true as  later; but the thoughts of
azhwars are not originally built , transferred from Sanskrit as Tirukkural
is.  There are many with us. Tirumular adept in Vedas had rendered many
verses in numbers. Panchabhuta description inUpanishads are too many from
the Rig , yajur and sama vedas. Maybe I will take time to connect all those
much later if god be willing. KR IRS 221122

On Tue, 22 Nov 2022 at 07:08, Chittanandam V R <[email protected]>
wrote:

>
>
> *திரு பி.எஸ்.ராகவன் அவர்கள் எழுதியது.*
>
>
> *திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்தத்தின் ஆரம்பப்பாட்டுகளே எண்களோடு சிலம்பம்
> ஆடும் பாட்டுகள்:*
>
>
> பூநிலாய வைந்துமாய்ப்
>
> புனற்கண்நின்ற நான்குமாய்,
> தீநிலாய மூன்றுமாய்ச்
>
> சிறந்தகா லிரண்டுமாய்,
> மீநிலாய தொன்றுமாகி
>
> வேறுவேறு தன்மையாய்,
> நீநிலாய வண்ணநின்னை
>
> யார்நினைக்க வல்லரே?
>
>
>
>
>
>
> ஆறுமாறு மாறுமாயொ
>
> ரைந்துமைந்து மைந்துமாய்,
> ஏறுசீரி ரண்டுமூன்று
>
> மேழுமாறு மெட்டுமாய்,
> வேறுவேறு ஞானமாகி
>
> மெய்யினொடு பொய்யுமாய்,
> ஊறொடோ சை யாயவைந்து
>
> மாய ஆய மாயனே.
>
>
>
>
>
> ஐந்துமைந்து மைந்துமாகி
>
> யல்லவற்று ளாயுமாய்,
> ஐந்துமூன்று மொன்றுமாகி
>
> நின்றவாதி தேவனே,
> ஐந்துமைந்து மைந்துமாகி
>
> யந்தரத்த ணைந்துநின்று,
> ஐந்துமைந்து மாயநின்னை
>
> யாவர்காண வல்லரே?
>
>
>
>
>
> மூன்றுமுப்ப தாறினோடொ
>
> ரைந்துமைந்து மைந்துமாய்,
> மூன்றுமூர்த்தி யாகிமூன்று
>
> மூன்றுமூன்று மூன்றுமாய,
> தோன்றுசோதி மூன்றுமாய்த்
>
> துளக்கமில் விளக்கமாய்,
> ஏன்றெனாவி யுள்புகுந்த
>
> தென்கொலோவெம் மீசனே.
>
>
>
>  *இந்த எண்களுக்கெல்லாம் பொருள் தெரிந்தால் தேவலை.*
>
>
> *B S ராகவன்*
>
>
> ****************************************
>
>
> *திரு. சுஜாதா எழுதியது *
>
> வடக்கே சென்ற.....
>
>
>
> நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று இயற்கையை ஐந்தாகப் பிரித்துச்
> சொல்வது
>
> நம் வழக்கம். அதேபோல் குணங்களை (Properties) ஒலி, தொடுகை, உருவம், சாரம்,
> மணம் என்று
>
> ஐந்தாகப் பிரிப்பார்கள். இதை நிலத்துக்கு ஐந்து குணங்களையும் நாம் சொல்ல
> முடியும்.
>
> நிலத்தில் சப்தங்கள் உண்டு. அதைத் தொட்டுப் பார்க்கலாம். அதற்கு வடிவம் உண்டு
> .
>
> அதற்கு ரசம்,Substance உண்டு. வாசனை உண்டு. நீருக்கு இவற்றில் நான்கு
> குணங்கள்தான் உண்டு.
>
> வாசனை கிடையாது. (கார்ப்பரேஷன் நீரை நான் சொல்லவில்லை.)
>
>
>
> நெருப்புக்கு சப்தம் உண்டு. தொட்டால் சுடும். வடிவமும் உண்டு. காற்றுக்கு
> சப்தம் உண்டு.
>
> அதைத் தொட்டால் உணரலாம். வடிவம் இல்லை. ஆகாயத்தில் சப்தம் மட்டும்தான்
>
> உண்டு.
>
>
>
> திருமழிசை ஆழ்வார் தன் திருச்சந்த விருத்தத்தில் இந்தக் கருத்தை ஓசை நயத்தோடு
>
>
> சொல்கிறார்.
>
>
>
> "பூநிலாய வைந்துமாய், புனற்கண் நின்ற நான்குமாய்,
>
> தீநிலாய மூன்றுமாய், சிறந்த காலிரண்டுமாய்,
>
> மீநிலாய தோன்றுமாகி, வேறுவேறு தன்மையாய்
>
> நீநிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே."
>
>
>
> (பூ - பூமி, புனல் - நீர், கால் - காற்று, மீ - ஆகாயம், நிலாய - நிலவிய)
>
>
>
> பூமிக்கு ஐந்து குணங்கள், நீருக்கு நான்கு குணங்கள், நெருப்புக்கு மூன்று,
> காற்றுக்கு
>
> இரண்டு, ஆகாயத்துக்கு ஒன்று என்று நீ பரவி இருப்பதை யாரால் எண்ணிப் பார்க்க
>
> முடியும் என்று ஆழ்வார் 'எண்ணிப்' பார்த்திருக்கிறார்.
>
>
>
> இது திருச்சந்த விருத்தத்தில் முதல் பாசுரம்.
>
>
>
> சிவவாக்கியரின் பாடல்களில்கூட இது அப்படியே 303-ஆம் பாடலாக
> தொகுக்கப்பட்டுள்ளது.
>
> இதனால் சிவாக்கியரும் திருமழிசை ஆழ்வாரும் ஒருவரே என்றுகூடச் சிலர்
> கருதுகிறார்கள்.
>
>
>
> இந்தப் பாடலின் ஆதாரக் கருத்தானது  நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
> என்னும் பஞ்ச
>
> பூதங்களுக்கும் குணங்கள் கூறுவது. நல்லெழுதியாரின் பரிபாடலில் உள்ளது. இதே
> கருத்து
>
> விஷ்ணு புராணத்திலும் உள்ளது. விஷ்ணு புராணம் ஆழ்வார்களின் காலத்துக்குப்
>
> பிற்பட்டது. பரிபாடல் ஆழ்வார்களின் காலத்துக்கு முற்பட்டது.
>
>
>
> எனவே பிற்சங்க காலத்திலிருந்து ஆழ்வார் மூலமாக வடக்கு நோக்கிச்
> சென்றிருக்கிறது
>
> இந்த அற்புதமான கருத்து.
>
>
>
> - சுஜாதா
>
>
> *************************************
>
>
> சித்தானந்தம்
>
>
>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopOnJjCJV6YsFSLWb7kvZ%2BPz36LfnwxNewm4r%2B-pO%3D8hg%40mail.gmail.com.

Reply via email to