Bharathi sang Kannan pattu and especially HE is my employee. About that: கண்ணன் பாட்டுக்குத் தூண்டுகோலாக அமைந்தது எது? இதனை வ.வே.சு. ஐயர் விளக்கிறார்:
“தன்னை நெடுநாள்களாக மறந்திருந்த பாரதநாடு திடீரென விழித்துக்கொண்டதும், அதன் எதிரே முதலில் தோன்றிய ஒளி, கீதாசாஸ்திரத்தைக் கூறிப் பார்த்தனுடைய ரதத்தை வெற்றிபெற ஓட்டிய கண்ணபிரானுடைய உருவமே. அந்த உருவமானது நமது கவியின் இருதயத்திலும் எழுந்து அவருடைய கவிதைக்கு ஒரு சோபையைக் கொடுத்தது. பத்து வருஷங்களுக்கு முன்பு அவர் பதிப்பித்த ஜன்மபூமியிலேயே ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம் என்று இரண்டு செய்யுட்கள் காணப்படுகின்றன. ஆனால் பிற்பட்டுத்தான் கண்ணனுடைய செயல்களும் திருவிளையாடல்களும் அவர் மனத்தைப் பூரணமாக ஆகருஷித்தன. இவ் ஆகருஷணத்திற்கு நாலாயிரப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பாசுரங்களின் அனுஸந்தானம் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இக்கண்ணன் பாட்டானது *பா*வ விஷயத்தில் அப்பாசுரங்களின் வழியையே தழுவியிருக்கிறது.” (கண்ணன் பாட்டு இரண்டாம் பதிப்பின் முன்னுரை, 1919). சேவகன்: “எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்” என்ற பரவசமூட்டும் வரி 1960களின் ‘படிக்காத மேதை’ திரைப்படம் வழியாக தமிழ்நாட்டில் வெகுஜன அளவில் சென்றடைந்த ஒன்று. தெய்வத்திற்கு சேவகம் செய்வதே மனிதப்பிறவியின் பேறு என்ற சம்பிரதாயமான கருத்தைத் தலைகீழாக மாற்றி, ‘சேவகரால் பட்ட சிரமமிக உண்டு, கண்டீர்; சேவகரில்லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை” என்று நொந்து போய் உட்கார்ந்திருக்கும் கவிஞரைத் தேடி, கண்ணனே சேவகனாக வருகிறான் என்ற கற்பனை அலாதியானது. பாண்டுரங்க பக்தர்களின் சரிதங்களில், ஏகநாதரின் வீட்டில் அவரது பாடல்களைக் கேட்க விரும்பி பகவானே வேலைக்காரன் உருவில் வந்தான் என்பது போன்ற கதைகள் உண்டு. ஆனால் இந்தப் பாடலில், அப்படி தீவிர பக்தி உணர்வோ ஈடுபாடோ எதுவும் இல்லாத ஒரு சராசரி மானிடரிடத்திலும் கண்ணன் இறங்கி வருவதாக சித்தரித்திருப்பது அவனுடைய அளவற்ற கருணையை இன்னும் பல படிகள் மேலே உயர்த்துவதாக இருக்கிறது. கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம், ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் என்று நல்ல சேவகனுக்கு உண்டான பண்புகள் அனைத்தும் தோன்ற நிற்கும் கண்ணனைத் தக்கவன் என்று முடிவு செய்கிறார் கவிஞர். “மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்; கூலியென்ன கேட்கின்றாய்? கூறு” கென்றேன். “ஐயனே! தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை; நானோர் தனியாள்; நரைதிரை தோன்றாவிடினும் ஆன வயதிற் களவில்லை; தேவரீர் ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை” யென்றான். பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே கண்டு, மிகவும் களிப்புடனே நானவனை ஆளாகக் கொண்டுவிட்டேன்.. இப்படி நல்ல ஏமாளி சேவகனாகக் கிடைத்தான் என்று கண்ணனை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் கவிஞர், அவனது தொடர்பு நிகழ்த்தும் ரசவாதங்களைப் படிப்படியாக அழகுற விவரிக்கிறார். நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப் பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால் பெற்றுவரு நன்மையெலாம் பேசி முடியாது. “வீதி பெருக்குகிறான், வீடுசுத்த மாக்குகிறான் – தாதியர்செய் குற்றமெலாம் தட்டி யடக்குகிறான்” என்று ஆரம்பித்து, “நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்” என்று போய், இறுதியில், இங்கிவனை யான்பெறவே என்னதவம் செய்து விட்டேன்! கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்! என்று முடிக்கிறார் கவிஞர். “என்னையே பற்றுக் கோடாகக் கொண்டு தன் அனைத்து சிந்தனைகளையும் செயல்களையும் எனக்கே அர்ப்பணிப்பவனைக் கர்மங்கள் பற்றுவதில்லை” என்ற கீதையின் உபதேசம் “எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்” என்பதில் எதிரொலிக்கிறது. கண்ணனைநான் ஆட்கொண்டேன் கண்கொண்டேன் கண்கொண்டேன் கண்ணன் எனையாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே என்று இந்தப் பாடல் முடிவுறுகிறது. “உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்கிறாள் ஆண்டாள். ஆட்கொள்ளுதல், ஆட்செய்தல், ஆட்படுதல் – இவை தொடர்புடைய மூன்று சொற்கள். ஒன்று நம்மை முழுமையாக ஆட்கொள்வது எப்போது? நாம் முழுமையாக அதற்கு ஆட்செய்யும் போது. அது நிகழ்வதற்கு முன் நாம் தற்செயலாகவோ, அல்லது தன்முனைப்புடனோ அதற்கு ஆட்பட்டிருக்க வேண்டும் (அந்த *ஒன்று* பரம்பொருள், கலை, அறிவுத் தேடல், செயலூக்கம் என எதுவாகவும் இருக்கலாம்). மேற்கண்ட வரிகளில், கண்ணனும் நானும் ஒருவரையொருவர் ஆட்கொண்டோம் என்று பாரதி குறிப்பிடுவது இரண்டறக் கலத்தல் என்னும் அன்னியோன்னிய பாவத்தின் உச்சநிலையை உணர்த்துகிறது. NB;; Link attached to listen https://youtu.be/z63r2MkahwM KR IRS 10223 On Thu, 9 Feb 2023 at 22:25, Jambunathan Iyer <[email protected]> wrote: > ஹரே கிருஷ்ணா [image: 🙏🏻][image: 🙏🏻] > துவாபர யுகத்தில் திரும்பும் இடமெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடி > கொண்டிருந்தது, தர்மம் நாராய் கிழிந்து கிடந்தது, பாம்பினை கண்ட பறவை குஞ்சாய் > ஒடுங்கிக் கிடந்தது. நதி, மண், ஆகாயம் என திரும்பும் இடமெல்லாம் அக்கிரம > கூட்டம் மித மிஞ்சி ஆடியது. > கம்சன் நரகாசுரன் தொடங்கி துரியோதனன் கூட்டம் வரை ஆடி தீர்த்தார்கள். பெற்ற > வரத்தை அதர்மத்தின் துணையாக்கி பூமியையே உருட்டி விளையாடி கொண்டிருந்தார்கள். > சொந்த > மருமகனை கொல்ல துணிந்த கம்சன், பங்காளிகளை ஒழிக்க தேடிய துரியன், அடங்கா > சிசுபாலன், பெரும் ரவுடி ஜெராசந்தன் என தெரிந்த முகங்கள் இப்படி என்றால் > தெரியா முகம் எப்படி இருந்திருக்கும்? > இது போக அரக்க கூட்டம், பாம்பு கூட்டம் இன்னும் மானிடரை அறவழி வாழவே விடாத > பெரும் அராஜக கும்பல்கள் ஆட்டம் போட்ட காலமாய் இருந்திருக்கின்றது. பற்று, > பாசம், அதிகாரம், அகங்காரம், பொறாமை, பேராசை என எல்லா மாயைகளிலும் சிக்கி > அந்த பொல்லா கூட்டம் பூமியை நரகமாக்கிய அன்று பூமி கடலால் காற்றால் மட்டுமல்ல > அதர்மத்தாலும் சூழப்பட்டிருந்தது. தர்மமும் இன்னும் பல நல்லோரும் கதறிய > பொழுதுதான், உலகில் அதர்மம் உச்சத்தில் இருந்த போது தான் அந்த அவதாரம் > நிகழ்ந்தது. யாருக்கும் தெரியாமல் ஆனால் தெரிய வேண்டியோருக்கு தெரிந்தபடி > சவால்விட்டு பிறந்தான் கண்ணன், பிறந்த நொடியில் இருந்து அவனுக்கும் > அதர்மத்துக்குமான போர் தொடங்கிற்று > எல்லா அவதாரங்களும் ஜெனித்து வாழ்ந்து முடித்ததல்ல, நரசிம்ம அவதாரமெல்லாம் > சில மணிகளே நின்றிருந்தது. ராமனும் கண்ணனுமே பால்யம் முதல் முதிர்வயது வரை > மானிடராய் தெய்வ சக்தியில் வாழ்ந்து அதர்மத்தை ஒழித்து தர்மம் காத்து > நின்றார்கள், அதில் கண்ணன் இன்னும் சிறப்பு, பிறக்கும்பொழுதே தன் மாய > விளையாட்டை ஆரம்பித்தவன் அவன் . கிருஷ்ணா என்பது கறுப்பை குறிக்கும் சொல், > இன்றும் ஆந்திராவின் கிருஷ்ணா நிதி அப்படித்தான் அழைக்கபடும், அந்த கருப்பு > குழந்தையும் அன்று கிருஷ்ணன் ஆனது > அவன் வாழ்வினை படியுங்கள், அந்த குழந்தையினை கொஞ்ச தோன்றும். அந்த வாலிபனை > ரசிக்க தோன்றும், அவன் வீரத்தில் உடல் சிலிர்க்கும், அவன் ஞானத்தில் மனம் > உருகும், அவன் தத்துவத்தில் வாழ்வே புரியும், அவன் தந்திரத்தில் புன்னகை > பெருகும். கடைசியில் கைகூப்பி வணங்கி கதறி அழவும் தோன்றும், அப்படி ஒரு > தெய்வீக அவதாரம் அவர். அவனின் ஒவ்வொரு அசைவும் ஞானம், ஒவ்வொரு அசைவும் > தத்துவம், அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் தர்மம். > யுகங்கள் தாண்டி அவன் நிலைத்து நிற்க அதுதான் காரணம் அன்றைய வியாச முனி முதல் > இன்றைய ஓப்பன் ஹைமர் , ஹாக்கின்ஸ் வரை அவனை படிக்கவும். அன்றைய > வில்லிபுத்தூராழ்வார் முதல் இக்கால வாலி வரை அவனை கொண்டாடவும் அதுதான் காரணம். > பிறக்கும் > பொழுதே சவால்கள் அதிகம், தப்பி பிழைத்தால் வாழவிடா அரக்க கூட்டம் பூத > கூட்டம் ஒடி ஓடி துரத்தியது, பிஞ்சு வயதிலே அந்த அதர்ம கும்பலை ஒழிக்க > தொடங்கினான் கண்ணன். அன்று ஆயர்பாடியில் தொடங்கிய அவனின் அதர்மத்துக்கு > எதிரான போராட்டம் மஹாபாரத காலத்தில் தான் முடிந்தது > அவனுக்கு சவால் அதிகம், பொறுப்பும் அதிகம், ஆனால் வாழ்வினை மிக ஆனந்தமாக > விளையாட்டாக சிரித்த முகத்துடன் கடந்து சென்றவன் கண்ணன். அவனுக்கும் > வாழ்வெல்லாம் சோகமே, தாயிடம் வளரவில்லை உடன்பிறந்தார் யாருமில்லை. பலராமன் > பலமும் கொஞ்ச்காலமே அர்ஜூனன் அவ்வப்போது வந்து போனான், மற்றபடி அவன் > வாழ்வெல்லாம் அவன் தனிமையே ராமருக்காவது லட்சுமணனும் அனுமனும் இருந்தார்கள், > கண்ணனுக்கு அப்படி யாருமில்லை, அவன் அதுபற்றி வருந்தவும் இல்லை. > கோபியர் சூழ்ந்தால் தடுக்கவுமில்லை, அவர்கள் இல்லா காலத்தில் ஏங்கியதுமில்லை. > ஆம்,அதுதான் > கண்ணன் வந்ததை அவன் விலக்கவுமில்லை, விலகியதை தேடவும் இல்லை. அவன் காலம் வரை > அடிவாங்கிய ஒடுக்கபட்ட, தாழ்த்தபட்ட அந்த ஆயர்பாடி கூட்டம் அவன் தலமையில் > திருப்பி அடித்தது, அந்த இனத்துக்கே அப்பொழுதுதான் ஒரு மரியாதை வந்தது. > விளையாட்டும் > வேடிக்கையும் அம்மக்களை காத்து கொண்டு வந்தான், அவன் வளர வளர அதர்மம் மெல்ல > மெல்ல அழிந்தது. > > Compiled from Original Post in FB : தெய்வ சிந்தனைகள். Thanks to தெய்வ > சிந்தனைகள் > <https://www.facebook.com/Rudhrambiga?__cft__[0]=AZWRrN5Lxex3CoKgOQ3fCRZHA7Qqqe_eIYdO0vIU3phjeOONkOxWXXWQIZUNZU5t5d2kcIER9ijLspDzNFZXbfFB92bfAucQ-oHPchDYgpgMGxXEfkLS6GPsiOcIUDohe6H-zuvx9J2Ha_AakzKdJGRskSFU-qEKs7y89_q4muhki0S1IGAdYgn8lpkrFYin68g&__tn__=-UC%2CP-R> > > N Jambunathan Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004 > > *" What you get by achieving your goals is not as important as what you > become by achieving your goals. If you want to live a happy life, tie it to > a goal, not to people or things "* > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Sanathana dharma and science" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/sanathana-dharma-and-science/CADdz_9QMH7oYuFduG%2B9g9b5kowV_cSjPwMFdbQZiOgnW5_HcAw%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/sanathana-dharma-and-science/CADdz_9QMH7oYuFduG%2B9g9b5kowV_cSjPwMFdbQZiOgnW5_HcAw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoq5wqxoA%3DfW%3Dm0i2vPdAjyOebKiFcmDWTLs-rUJctcCww%40mail.gmail.com.
