*ஓம். காரியசித்தி மாலை காசிப முனிவர் அருளிச்செய்தது.*





* கரியஸித்தி மாலை*




























































































*பந்தம் அகற்றும் அநந்தகுணப்பரப்பும் எவன் பால் உதிக்குமோஎந்த உலகும்
எவனிடத்தில்ஈண்டி இருந்து காக்குமோசந்த மறை ஆகமங் கலைகள்அனைத்தும் எவன்பால்
தகவருமோஅந்த இறையாம் கணபதியைஅன்பு கூரத் தொழுகின்றோம்......(1) உலகம்
முழுதும் நீக்கமறஒன்றாய் நிற்கும் பொருளெவனில்வுலகிற் பிறக்கும்
விகாரங்கள்உறாத மேலாம் ஒளியானவன்ஊட்டுங் களைகண் எவன் அந்தஉலக முதலைக்
கணபதியைஉவந்து சரணம் அடைகின்றோம்.........(2)இடர்கள் முழுதும் எவனருளால்எரி
வீழும்பஞ் செனமாயும்தொடரும் உயிர்கள் எவனருளால்சுரர்வாழ் பதியும்
உறச்செய்யும்கடவுள் முதலோர்க் கூறின்றிக்கருமம் எவனால் முடிவுறும்
அத்தடவுமருப்புக் கணபதிபொன்சரணம் சரணம் அடைகின்றோம்......(3)மூர்த்தி யாகித்
தலமாகிமுந்நீர் கங்கை முதலானதீர்த்த மாகி
அறிந்தறியாத்திறத்தி நாளும் உயிர்க்குநலம்ஆர்த்தி நாளும் அறியாமைஅகற்றி
அறிவிப்பான் எவன் அப்போர்த்த கருணைக் கணபதியைப்புகழ்ந்து சரணம்
அடைகின்றோம்.....(4)செய்யும்வினையிம் முதல்யாவன்செய்யப்படும்
அப்பொருள்யாவன்ஐயம் இன்றி உளதாகும்அந்தக் கருமப் பயன் யாவன்உய்யும்
வினையின் பயன் விளைவில்ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்பொய்யில் இறையைக்
கணபதியைப்புரிந்து சரணம் அடைகின்றோம்...(5)வேதம் அளந்தும் அறிவறியவிகிர்தன்
யாவன் விழுத்தகையவேத முடிவில் நடம்நவிலும்விமலன் யாவன் விளங்குபரநாத முடிவில்
வீற்றிருக்கும்நாதன் எவன் எண்குணன் எவன் அப்போத முதலைக்
கணபதியைப்புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.....(6).மண்ணில் ஓர் ஐங் குணமாகிவதிவான்
எவன் நீர், இடைநான்காய்நண்ணி அமர்வான் எவன் தீயின்மூன்றாய் நவில்வான் எவன்
வளியின்எண்ணும் இரண்டு குணமாகிஇயைவான் எவன்வான் இடை ஒன்றாம்!அண்ணல் எவன்
அக்கணபதியைஅன்பிற் சரணம் அடைகின்றோம்..(7)பாச அறிவில் பசு அறிவில்பற்றற்
கரிய பரன்யாவன்பாச அறிவும் பசு அறிவும்பாற்றி மேலாம் அறிவானதேசன் எவன்
அக்கணபதியைத்திகழச் சரணம் அடைகின்றோம்...(8)நூற்பயன்இந்த நமது
தோத்திரத்தையாவன் மூன்று தினமும் உம்மைச்சந்தி
களில்தோத்திரஞ் செயினும்சகல கரும சித்திபெறும்சிந்தை மகிழச்
சுகம்பெறும் எண்தினமுச் சரிக்கின் சதுர்த்தியிடைப்பந்தம் அகல
ஓரெண்கால்படிக்கில் அட்ட சித்தியுறும்..........(9)திங்கள் இரண்டும்
தினந்தோறும்திகழஒருபான் முறையோதில்தங்கும் அரச வசியமாம்தயங்க இருபத்
தொருமுறைமைபொங்கும் உழுவ லால்கிளப்பின்பொருவின் மைந்தர் விழுக்கல்விதுங்க
வெறுக்கை முதற்பலவும்தோன்றும் எனச்செப்பினர் மறைந்தார்;..(10)
....................முற்றும்....................................கிரி
டிரேடிங் ஏஜென்ஸி பிரைவெட் லிலிடெட் அச்சிட்ட சிறிய புத்தகத்தினின்று
..வெ.சுப்பிரமணியன் ஓம்*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtL4PrsEuACme9L-tPVKw85Ls-wfRCWB%2B5E8PAO%3DBP47w%40mail.gmail.com.

Reply via email to