Thanks a lot Sir.
First time I cone to know about these details.

Thanks & Regards
N Sekar

On Thu, 16 Feb 2023, 11:45 Vanakkam Subbu, <[email protected]> wrote:

> *"திருவிழாவும் மல்லாரி இசையும் ஒரு தொகுப்பு"*
>
> மல்லாரி
> மல்லாரி என்பது சாஹித்தியமில்லாத ஒரு இசை வகை. இது நாதஸ்வரத்திற்குப்
> பிரத்யேகமாக அமையப்பெற்றது. கம்பீர நாட்டை ராகத்தில் தான் மல்லாரி
> இசைக்கப்பெறும். 'ரி' என்கிற ரிஷபம் பிடித்துப் பாடப்பெறும் சலநாட்டையில்
> மல்லாரி வாசிக்கக் கூடாது.
>
> ஆகம விதி முறைப்படி அமையப் பெற்ற இவ்விசை மரபுகள் நாதஸ்வர தவில் இசை மூலம்
> இன்றும் பழமை மாறாமல் பின்பற்றப்படும் தலம் சிதம்பரம் ஆகும்.
>
> மல்லாரி வகைகள்,
>
> சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் கீழ்கண்ட வகைகளில் மல்லாரி இசையை நாதஸ்வரக்
> கலைஞர்கள் வாசித்து வருகிறார்கள்.
>
> * தீர்த்த மல்லாரி:-
> இறைமுழுக்கிற்குத் தண்ணீர் எடுத்துவரும்போது அல்லது, குடமுழுக்கிற்குப் புனித
> நீர் எடுத்து வரும்போது வாசிக்கப் பெறுவது.
>
> * தளிகை மல்லாரி:-
> பெயரிலிருந்தே புரியும், இந்த மல்லாரி இசை இறைவனுக்கு மடப்பள்ளியில் இருந்து
> நிவேதனம் எடுத்து வரும்போது வாசிக்கப் பெறுவது.
>
> *கும்ப மல்லாரி:-
> பூர்ண கும்பம் கொடுக்கும்போது வாசிக்கப்பெறுவது.
>
> *தேர் மல்லாரி:-
> நடராஜப் பெருமானும், சிவகாமசுந்தரி அம்மையும் தேருக்குப் புறப்பட்டுச்
> செல்லும் போது வாசிக்கப் பெறுவது.
>
> *புறப்பாட்டு மல்லாரி:-
> உற்சவ மூர்த்திகள் புறப்பாடு செய்யும் போது வாசிக்கப் பெறுவது  .
>
> திருவிழாவும், மல்லாரி இசையும் ;
> முற்காலத்தில், சுவாமி ஊர்வலத்தின் போது கீர்த்தனைகளோ,வேறு பாடல்களோ
> வாசிக்கப் பெறவில்லை என்று தெரியவருகிறது. பல்வேறு நூல்கள், மற்றும் கிடைத்த
> செய்திகளின் படிக் கீர்த்தணைகள் முதலான இசை வடிவங்கள் சுமார் 200 அல்லது 300
> ஆண்டுகளுக்கு முன்புதான் வழக்கத்திற்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தக்
> குறிப்புகளிலிருந்து மல்லாரி இசை பற்றியும் குறிப்பாகச் சிதம்பரம் கோவில் மரபு
> பற்றியும் தெரியவருகின்றது.
>
>
> சிதம்பரம் ஆலயத் திருவிழாக்களில் சுவாமி வீதி உலாவிற்கு மல்லாரி இசையை,
> ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட முறைப் படியே இசைக்க வேண்டுமென்பது மரபு.
>
> இப்படிப்பட்ட முறையில், நாகஸ்வர இசை உலக மேதைகளாகிய சிதம்பரம்
> பெருமதிப்பிற்குரிய வைத்தியநாதப் பிள்ளை, அவர்களுடைய சீடர் மரியாதைக்குரிய
> இராதாகிருஷ்ணன் பிள்ளை, இவர்களுடைய சீடர் ஆச்சாள்புரம் மரியாதைக்குரிய
> சின்னத்தம்பிப் பிள்ளை அவர்கள், இவர்கள் தான் இன்று வரை சிதம்பரம் நடராஜர்
> கோவில் ஆஸ்தான வித்வான் இன்று வரை இறைவனுக்கு இசை தொண்டாற்றி வருகின்றார்கள்.
>
> உற்சவ மூர்த்தியும், மல்லாரி இசையும்;
> முன்பு குறிப்பிட்டது போல் உற்சவமூர்த்திகள் புறப்பாட்டின் போது மல்லாரி இசை
> வாசிக்கப்பெறும். இதையடுத்து ராக ஆலாபனை, ரக்தி,அதைத் தொடர்ந்து பல்லவி என்ற
> முறையில் இந்த மரபு அமைந்துள்ளது. சுவாமி, கோவிலிலிருந்து புறப்பட்டுக் கோபுர
> வாசல் வந்ததும் கோபுர தரிசன தீபாராதனை செய்யப் பெற்றுக் கெட்டி மேளம்
> வாசிக்கப் பெறும்.
>
> சுவாமி, தெற்குக் கோபுர வாயிலை நெருங்கியதும் ரக்தி வாசிக்கப் பெறும்.
>
> ரக்தி என்றால் அழகு என்று பொருள். இது ராகம், கண்ட, நடை, தீர்மானம் என மூன்று
> பிரிவுகளைக் கொண்டது. சாகித்தியம் இல்லாமல் தீம் தத்திக்தை என்ற சப்தாதரத்தைக்
> கொண்டு விஸ்தரிக்கப் பெறுவது, லய வேலைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்
> பெறுவது. இவ்விசை மிஸ்ரத்தில் ஆரம்பிக்கப் பெற்றுப் பின் திஸ்ர கதியிலும்,
> ஸர்வ லகுவிலும் வாசிக்கப்பெறும், சுவாமி மேல கோபுர வாசலுக்கு வரும் போது
> பல்லவி வாசிக்கப் பெறும். வடக்கு, வீதியில் ஸ்வரப் பிரஸ்தாரம் தொடர்ந்து
> நடைபெற்று ஆலயத்திற்குள் சுவாமி திரும்பி வந்திருக்கும் போது ஏதேனும் ஒரு பதம்
> வாசிப்பார்கள்.
>
> சிதம்பரம் ஆலயத் திருவிழாக்களில், சுவாமி வீதி உலாவிற்கு ஒவ்வொரு நாளுக்கும்
> குறிப்பிட்ட கீர்த்தனைகள் மற்றும் ராகங்களே கையாளப்பெற வேண்டும் என்றும்,
> தாளங்கள் கூட முறைப்படுத்தப் பெற்றுள்ளன என்பதும் வியக்கத்தக்க செய்திகளாகும்.
>
> ஒன்றாம் திருநாள்
> மல்லாரி - ஏக தாளம்
> மல்லாரி - ஆதி தாளம்
> ரக்தி - ஹம்ஸத்வனி ராகம் - ஆதி தாளம்
> சங்கராபரணம் ராகம் - ரூபக தாளம்
>
> இரண்டாம் திருநாள்
> மல்லாரி - கண்ட ஜாதி திரி புட தாளம்
> ரக்தி - ரீதி கௌள ராகம் - ஆதிதாளம்
>
> மூன்றாம் திருநாள்
> மல்லாரி - ஆதி தாளம்
> ரக்தி - சக்ரவாகம் ராகம் - ஆதி தாளம்
>
> நான்காம் திருநாள்
> மல்லாரி - மிஸ்ர ஜாதி திரிபுடை தாளம்
> ரக்தி - ஹம்ஸப்ரமரி ராகம் - மிஸ்ரசாபு தாளம்
> ரக்தி - பந்துவராளி ராகம் - ரூபக தாளம்
>
> ஐந்தாம் திருநாள்
> பஞ்சரத்ன மல்லாரி (ஒவ்வொன்றாக)
> முதலில் மிஸ்ர ஜாதி திரிபுடை தாளம்
> 2ஆம் மல்லாரி - கண்ட ஜாதி திரிபுடை தாளம்
> 3ஆம் மல்லாரி - சங்கீர்ண ஜாதி துருவ தாளம்
> 4ஆம் மல்லாரி - ஆதி தாளம்
> 5ஆம் மல்லாரி - ரூபக தாளம்
> அதன் பின் திருவாசகப் பதிகம் (அம்மையே அப்பா - மோஹன ராகம் - ஆதி தாளம்)
> திருப்புகழ் - ஹம்சாநந்தி ராகம் - ஆதி தாளம்
> திருப்புகழ் - ஹம்சாநந்தி ராகம் - ஆதி தாளம்
>
> ஆறாம் திருநாள்
> மல்லாரி - மிஸ்ர ஜாதி திரிபுடை தாளம்
> ரக்தி - தோடி ராகம்
> சண்முகப்பிரியா ராகம் - ரூபக தாளம்
>
> ஏழாம் திருநாள்
> மல்லாரி - அட தாளம்
> ரக்தி - வராளி ராகம், ஆதி தாளம்
> ரக்தி - காம்போதி ராகம், ரூபக தாளம்
>
> எட்டாம் திருநாள் - தங்க ரதம்
> தாருகாவனத்தில் வேதங்களும் யாகங்களுமே உயர்ந்தவை என்று எண்ணி வேத நாயகனும்
> வேதத்தின் உட்பொருளுமான சிவபெருமானை மறந்த முனிவர்களின் மயக்கத்தை ஒழிக்கப்,
> பிட்சாடனார் வேடம் பூண்டு வந்த கோலத்தைத் தங்கரதத்தில் நான்கு வீதிகளிலும் உலா
> அழைத்து வருவார்கள்.
>
> கோவிலிலிருந்து தங்கரதத்தில் சுவாமி எழுந்தருளும் வரை சுமார் நான்கு மணி
> நேரம் உடற்கூறு ( ஒடக்கூறு ) என்று மருவியும் வழங்கப்பெறுகிறது வாசிக்கப்
> பெறுகின்றது. அதாவது உடலின் கூற்றையும், அது அழியும் தன்மை படைத்தது
> என்பதையும் உணர்த்தும் ஒரு இசை வகை ஆகும்.
>
> இதை 'மாயாமாளவ கௌள' அல்லது 'நாதநாமக் கிரியா' ராகங்களில் மிஸ்ர தாளத்தில்
> மட்டுமே வாசிக்கப்பெறும், உடற்கூறும் லய வித்தியாசங்களும் செய்து வந்து,
> சிவபெருமான் தங்க ரதத்தில் எழுந்தருளும் வரை வாசித்திட வேண்டும்.
>
> தங்க ரதத்தில் பிட்சாடனார் எழுந்தருளியதும், தமிழில் சிவன் மேல் உள்ள ஒரு சில
> கீர்த்தனைகள் ("ஆடும் சிதம்பரம்", 'ஆடிக்கொண்டார்') போன்றவை வாசிக்கப் பெறும்.
>
> ஒன்பதாம் திருநாள் - திருத்தேர்
> தேர் மல்லாரி,
> ஆனந்த நடராஜப் பெருமானையும் சிவகாமசுந்தரி அம்மையையும் சிற்சபையில் இருந்து
> திருத்தேருக்கு எழுந்தருளப் பண்ணுகின்ற விடியற்காலை நேரத்தில் தேர் மல்லாரி
> சதுஸ்ர ஏகம் தாளத்தில் வாசிக்கப் பெற்றுப் பிறகு முத்துத்தாண்டவர் பதம்,
> நடராசர் கீர்த்தனை கேதாரம் ராகத்தில் ஆனந்த நடனப் பிரகாசம் கீர்த்தனைகள்
> இசைக்கப் பெறும்.
>
> விடியற்காலையில், சிற்சபையிலிருந்து அம்மையப்பர் திருத்தேருக்குப்
> புறப்படும்போது தேர் மல்லாரி ஐந்து அட்சரங்களைக் கொண்டதாகிய (பஞ்சாட்சரம்)
> கண்ட நடையில் வாசிக்கப்பெறும். தேரில் சுவாமி எழுந்தருளும் வரை இதையே தான்
> வாசிக்க வேண்டும். மாறுதல் செய்யக்கூடாது.
>
> தேரிலிருந்து இரவில் ஆயிரங்கால் மண்டபத்திற்குச் சுவாமிகளை கொண்டு வரும் போது,
> முதலில் சதுஸ்ர ஏகம் தாளம், பிறகு திஸ்ர ஏகம் தாளத்தில் மல்லாரி
> வாசிக்கப்பெறும். இறைவனும், இறைவியும் ஆயிரங்கால் மண்டபத்தை அடைந்ததும் சில
> சிவஸ்துதி கீர்த்தனைகளான 'காலைத் தூக்கி நின்றாடும்', யதுகுல காம்போதி
> ராகத்தில், மிஸ்ரசாபு தாளத்திலும், கனக சபாபதி கீர்த்தனையை அடாணா ராகம், ரூபக
> தாளத்திலும், இசைக்க வேண்டும்.
>
> பத்தாம் திருநாள்  (தரிசனம்)
> முதலில் தேர் மல்லாரி சதுஸ்ர ஏக தாளத்தில் வாசித்துவிட்டுப், பின்னர்
> முத்துத்தாண்டவர் பதம் ஏக தாளத்தில் வாசிக்கப்பெறும், சுவாமி அலங்காரம்
> முடிந்து தரினத்திற்குப் புறப்படும் வரை சிவனைப் பற்றிய பல கீர்த்தனைகள்
> வாசிக்கப் பெறும்  .
>
> பதினோராம் திருநாள்   -   விடையாற்றி உற்சவம் (முத்துப்பல்லக்கு)
> சங்கீர்ண ஜாதி ஜம்பை தாளத்தில் மல்லாரி வாசிக்கப்பெறும்.
> ரக்தி ஆலாபனைக்கு உசேனி ராகம் தான் முக்கியமாக எடுத்துக் கொண்டு பிறகு பல்லவி
> வாசிக்க வேண்டும்.
>
> சுவாமி திருக்கோவிலுக்குத் திரும்பியதும் லாலி, ஊஞ்சல், மங்களம் வாசித்து
> நிறைவு செய்வது மரபு.
>
> வைணவ சந்நிதியான ஶ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு நவராத்திரி உற்சவம் சிறப்பாக
> நடைபெறும்போது, நடராஜர் திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் ஶ்ரீ தாயார் புறப்பாடு
> துவங்கி, மல்லாரி, ராக ஆலாபனை, பல்லவி முதலியவை மரபின்படி வாசிக்கப்பெற்று
> மாலை மாற்று வைபவம் நடைபெறும். இவ்விழா நவராத்திரி ஒன்பது நாளும் நடைபெறும்.
>
> மேலும், கோவிந்தராஜர் திருக் கோவில் திருவிழாவின் போது, ஒவ்வொரு நாளும்
> குறிப்பிட்ட ராகம் வாசிக்கும் மரபு உண்டு.
>
> மாலைமாற்றுக்கு எனப், பிரத்யேகக் கீர்த்தனைகள் மற்றும்
> சங்கராபரணம்,
> சுருட்டி,
> ரீதி கௌளை,
> ஆனந்த பைரவி,
> உசேனி,
> மத்தியமாவதி,
> ஆகிய ராகங்களில் அமைந்த தியாகராஜ ஸ்வாமிகளின் உற்சவ சம்பிரதாயப் பாடல்கள்
> வாசிக்கப்பெறும். ஒவ்வொரு நாளும் ஐந்து பாடல்கள் வீதம் ஒன்பது நாட்களில் 45
> பாடல்கள் வாசிக்கப் பெறும்.
>
> மாலைமாற்று முடிந்தவுடன், தாயார் தன் சந்நிதிக்குத் திரும்பியதும்
> திருவந்திக்காப்பு நடைபெறும்.
> ஆலய சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட பெண்கள், மூன்று முறை கையில் குட
> விளக்கு ஏந்தி, மூன்று முறை உற்சவ விக்ரகத்தை வலம் வரும் நிகழ்ச்சியைக்
> கண்ணேறு கழித்தல் அல்லது திருஷ்டி சுற்று என்பார்கள், அப்போது அவர்களுக்கு
> மரியாதை செலுத்தும் வகையில் நாதஸ்வர, தவில் கலைஞர்களும் உடன் சுற்றுவார்கள்
> அப்போது தவில் மட்டும் தட்டி அழிக்கப் பெறுவதால் தட்டுச் சுற்று என்பார்கள்.
> பின்னர், தாயார் சன்னதிக்கு மீண்டும் நுழையும் போது எச்சரிக்கை வாசிக்கப்
> பெறும்  . பின்னர் லாலி, ஊஞ்சல், மங்களப் பாடல்கள் வாசிக்கப் பெறும்.
>
> திருவாதிரைத் திருநாள் வழிபாடு
> ஆக, சாதரண மக்கள் வீட்டுச் சுப நிகழ்ச்சிகள் உட்பட, அனைத்துத் திருக்கோவில்
> விழாக்களிலும் நீங்கா இடம் பெற்றது நாதஸ்வர இசை, குறிப்பாகச் சிதம்பரம் திருக்
> கோவிலின் மல்லாரி எனும் தெய்வீக நாதஸ்வர இசை மிகவும் சிறப்பு மிக்கது.
>
> தில்லைத் திருக் கூத்தன் அருள் பெறவும், 'மல்லாரி' எனும் தெய்வீக நாதஸ்வர
> இசையைக் கேட்டுப் புனிதம் பெறவும், சிதம்பரம் மார்கழித் திருவிழாவிலே
> குடும்பத்துடன் பங்கு பெறுவோம்! திரு ஆதிரைத் திருநாளன்று
> நடராஜப்பெருமானையும், சிவகாம சுந்தரி அம்மையையும் தரிசித்து எல்லை இல்லா
> ஆனந்தம் அடைவோம்!
> * * * * * * * * * *
> ஆதாரப் புத்தகம்,
> கோமுகி கல்வி
> மலர் 4 * இதழ் 11
> டிசம்பர் 2015
>
>
>
>
> <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
>   https://www.youtube.com/watch?v=GucCDmbWPTM
> <https://www.youtube.com/watch?v=GucCDmbWPTM&fbclid=IwAR1Rl4fK-g0h_P5XKw6eg1UhiTzhIjmzXE7kYQZBXCJRZ1tVS8UOgMxoD3U>
>
>
> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
>
> *வாழிய பாரதமணித் திருநாடு!*
>
> *வணக்கம்* *சுப்பு*
>
>  *Vanakkam Subbu*
>
>  [image:
> zGgbcCHwTas05D3TEGRzfeJitXMuFdleP8uz97cCm3eLcDguXidhEufGaerGn9hH.gif]
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BqRerwPz%3DH2YVNWhQSnb%3DmAFgkicC%2BA%3DeJcW7QNBEO_OA%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BqRerwPz%3DH2YVNWhQSnb%3DmAFgkicC%2BA%3DeJcW7QNBEO_OA%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zc0N362eKcuhgHgqh17T-TMnVwBUdM3cvLtwfqWNCiUEg%40mail.gmail.com.

Reply via email to