Mr J spoke about PRATYAYA; Mr V G spoke about PRATYAKSHA. Both are different. Both words have their roots only from the term Prakrithi, the matter. "Pra" is always ahead , in front, in presenti. The English word Presence had originated from the Sanskrit word PRA only. Prati yaya is INTUITION . It is there something; water is there; beyond; everyone knows the prowess; but from a distance, it may be water or it may be a Mirage; then one sees the birds on the water; now it is not mirage but true water; intuitive logic; Prati+ Aksha= pratyaksha means seeing with own eyes or else I won't believe; pratyaksham is that. Pratyaya is a belief in intuition based logic. Pratyaksha is perception based logic. The latter is science. but the former is the Vedam. Both the anecdotes are not coexisting but relative to one another. KR IRS 9 5 23
On Tue, 9 May 2023 at 07:02, 'venkat giri' via iyer123 < [email protected]> wrote: > > > > 90 வயதில் அங்கப்பிரதிட்சணம் செய்த காஞ்சி மஹான்! > > ""90 வயதில் அங்கப்பிரதிட்சணம் செய்த காஞ்சி மஹான்!"" ---ஸ்ரீ மடம் பாலு > > காஞ்சீபுரத்தில் காமாக்ஷி அம்மனுக்கு கும்பாபிஷேகம்….கோவிலிருந்து பெரியவாளை > அழைத்தார்கள். ஸ்ரீ ஜயேந்திர பெரியவாளும் வந்து கூப்பிட்டார். ஆனால் பெரியவா > வரவில்லை என்று சொல்லி விட்டார். > > நான் பெரியவாளிடம் "நம் காமாக்ஷி அம்மனுக்குஅபிஷேகம் பெரியவா போகாமல் > இருக்கலாமா?" என்று கேட்டேன். > > அதற்கு பெரியவா, "இல்லை ஸ்ரீ ஜயேந்திர பெரியவா என் குழந்தை...மடத்தை > நிர்வாகம் செய்கிறார் பூஜை செய்கிறார். அவர் தான் செய்ய வேண்டும். அது > தான்முறை" என்று சொல்லி விட்டார். > > கும்பாபிஷேகம் ஆன மறு நாள் கோவிலிலிருந்து, தீர்த்தம்,சால்வை, புடவை எல்லாம் > வந்தன. பெரியவா விபூதி ப்ரசாதத்தை இட்டுக் கொண்டார். சால்வையைப் போர்த்திக் > கொண்டார். புடவையையும் மேலே போட்டுக் கொண்டார். > > என்னைப் பார்த்து, "என்ன கோவிலுக்குப் போகலாமா? நேற்றைக்கு கும்பாபிஷேகம் > ஆகிவிட்டது. நான் போக வில்லை எனக்குக் காமாட்சியைப் பார்க்க வேண்டும்.. > போகலாமா?" என்று கேட்டார். > > "ஒரு குழந்தை தன் தாயைப் பார்க்க எப்படி ஆவலாக இருக்குமோ, அப்படி ஓர் ஆவல்!" > > "என்னை ஏன் கேட்கிறீர்கள் நீங்கள் விரும்பினால் போகலாம் என்றேன்." > > "நீதானே என்னை எங்கும் போகக் கூடாது என்று இங்கு கலவையில் உட்கார வைத்தாய்.." > என்று நான் மூன்று வருஷங்களுக்கு முன், அவர் கால் சக்கரங்கள் அழியாமல் > இருப்பதற்காகச் சொன்ன வார்த்தைகளை மீற முடியாமல் என்னிடம் கேட்டார். > > "அன்று மாலை நான்கு மணிக்கு நடக்க ஆரம்பித்து மறு நாள் மாலை நான்கு மணியளவில் > காஞ்சி போய்ச் சேர்ந்தோம்." > > கோவிலில் சென்று அம்பாளை தரிசித்துப் புஷ்பம் போட்டு மாலை சார்த்தி புடவை > சாத்தி அழகு பார்த்தார். பின் எங்களுக்குப் ப்ரசாதம் கொடுத்து, ஆச்சார்யாள் > சன்னிதிக்கு வந்து தரிசித்து, அங்கேயே வாய் திறந்த வாறு படுத்து விட்டார்.. > அவ்வளவு அசதி. > > அப்போது அவருக்கு தொண்ணூறு வயசு... பின் பழமும் பாலும் கொடுத்து சாப்பிடச் > சொன்னேன். மூன்று பழத்துண்டுகளும் பாலும் சாப்பிட்டு துயில் கொண்டார். > > "மறு நாள் கொட்டகைக்குச் சென்று ஸ்னானம் செய்து, ஈரத்துணியுடன் காமாக்ஷிக்கு > அங்கப்ரதக்ஷிணம் செய்தார். உடம்பெல்லாம் ரத்தப் புள்ளியாக தோற்றம். முதல் > முதலாக காமாக்ஷியை அங்கப்ரதக்ஷிணம்செய்தவர் மஹாபெரியவா தான்!" > > அதே வேகத்தில் கிளம்பி 25 கிலோ மீட்டர் நடந்து கலவை சென்றுவிட்டார்! > > "இந்தத் தென்பும் மனோ திடமும் நம்மில் யாருக்காவது வருமா? சாக்ஷாத் ப்ரத்யக்ஷ > பரமேச்வரன்!" > > ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர! > ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம். > Sent from Yahoo Mail on Android > <https://go.onelink.me/107872968?pid=InProduct&c=Global_Internal_YGrowth_AndroidEmailSig__AndroidUsers&af_wl=ym&af_sub1=Internal&af_sub2=Global_YGrowth&af_sub3=EmailSignature> > > On Tue, 9 May 2023 at 6:58 pm, Jambunathan Iyer > <[email protected]> wrote: > சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் சந்தேகம். வாலியை வீழ்த்தும் அளவு > வலிமை ராமனுக்கு உள்ளதா எனச் சோதிக்க நினைத்தான். அதனால் ராமனுக்கு ஒரு > பரீட்சை வைத்தான். துந்துபி என்ற அரக்கன் முன்னொரு சமயம் வாலியுடன் போர் புரிய > வந்தான். அந்த துந்துபியைக் கொன்று அவனது சடலத்தை வாலி தூக்கி எறிந்த போது, > அது ரிஷ்யமுக மலையில் சென்று விழுந்தது. அந்தச் சடலம் இருக்கும் இடத்துக்கு > ராமனை அழைத்துச் சென்ற சுக்ரீவன், 'ராமா! இது அன்று வாலி வீசி எறிந்த அரக்கனின் > சடலம். இப்போது நீ இதை எடுத்து வீசு. நீ எவ்வளவு தூரம் வீசுகிறாய் என்பதைப் > பார்த்து, உன் பலத்தையும் வாலியின் பலத்தையும் நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்' > என்றான். > அப்போது லக்ஷ்மணன், 'அண்ணா! உங்கள் இடது திருவடியின் கட்டை விரலால் நெம்பி > விடுங்களேன்' என்றான். ராமனும் அப்படியே தன் இடது திருவடியின் கட்டை விரலால், > பூமியைக் கடந்து அப்பால் செல்லும்படி துந்துபியின் எலும்புக் கூட்டை நெம்பி > விட்டான். அது வாலி வீசிய தூரத்தை விட வெகுதூரம் சென்று வீழ்ந்தது. சுக்ரீவனோ, > 'ராமா! என்ன இருந்தாலும் நீ எலும்புக் கூட்டைத்தான் தூக்கி வீசி இருக்கிறாய். > வாலி இவன் உயிரோடு இருந்த காலத்திலேயே இவனைத் தூக்கி எறிந்தான். எனவே இந்த ஒரு > செயலைக் கொண்டு உன்னால் வாலியைக் கொல்ல முடியும் என்று என்னால் நிச்சயிக்க > முடியவில்லை!உனக்கு இன்னொரு பரீட்சை வைக்கப் போகிறேன்' என்றான். > அருகில் இருந்த வனத்துக்கு அழைத்துச் சென்ற சுக்ரீவன், 'ராமா! வாலி தன் > வில்லில் இருந்து பாணம் போட்டால், அது பெருத்த சால மரத்தையே துளைக்கும். > அவ்வாறு உன்னால் பாணம் போட முடியுமா?' என்று கேட்டான். ராமன் புன்னகை செய்தபடி > தன் கோதண்டத்தில் பாணத்தைப் பூட்டி எய்தான். அது வரிசையாக ஏழு சால மரங்களைத் > துளைத்துக் கொண்டு சென்றது. அதை கண்டபின் தான் சுக்ரீவனுக்கு ராமனின் > வீரத்தின் மேல் நம்பிக்கை உண்டானது. இவ்வாறு பலவிதமான சாகசங்களைப் புரிந்து > தன் > > தன்நம்பிக்கையை நாம் இழக்கும் போதெல்லாம் “ப்ரத்யயாய நம:”என்ற திருநாமத்தைச் > சொல்லி இறைவனை வணங்கினால், அவர் அருளால் நமக்குத் தன்னம்பிக்கையும் > புத்தணர்ச்சியும் உண்டாகும். அது மட்டுமல்ல, 'நான் எதற்காக என்னை நிரூபிக்க > வேண்டும்? என்னை நிரூபித்தால் தான் நீ என்னை ஏற்றுக் கொள்வாய் என்றால், அது > தேவையே இல்லை' என்று பகவான் ஒருபோதும் நினைப்பதில்லை. காரணம், > இறைவனிடத்தில், தன்முனைப்பு (ego) இல்லை. அதனால், அவனை இத்திருநாமம் சொல்லி > வழிபடும் போது, நமக்கும், தன்முனைப்பு, தன்முனைப்பினால் வரும் அகங்காரம், > விருப்பு, வெறுப்பு, போன்றவைகள் அகன்று விடும். மேலும், பகவான், தன்னை > நிரூபிப்பது, தன்னை உயர்த்திக் காட்ட அல்ல, பக்தர்களை ரக்ஷிப்பதற்காக, துயர் > தீர்ப்பதற்காக. இது பகவானின் காருண்யத்தைக் காட்டுகிறது. அவனின், > இத்திருநாமத்தை இப்படியாக பொருள் உணர்ந்து சொல்லும் போது நமக்கும் அந்த > ஸ்வபாவம் வந்து சேரும். > ஓம் ஶ்ரீ ப்ரத்யயாய நம: > > N Jambunathan Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004 > > *" What you get by achieving your goals is not as important as what you > become by achieving your goals. If you want to live a happy life, tie it to > a goal, not to people or things "* > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/iyer123/510172041.4168930.1683640945241%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/iyer123/510172041.4168930.1683640945241%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor0nhjyhd4sL7evSCWnQHNHsDzF_288-CiY00agM0QWYQ%40mail.gmail.com.
