welcome sir KR On Tue, 9 May 2023 at 19:44, Jambunathan Iyer <[email protected]> wrote:
> Thanks Rajaram Krishnamurthy JI > > I am happy to Read and get enlighten on Happiness the reply mail you send > now on > ஆனந்தம் எங்கே? : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) as explained by > Mahaperiyava > N Jambunathan Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004 > > *" What you get by achieving your goals is not as important as what you > become by achieving your goals. If you want to live a happy life, tie it to > a goal, not to people or things "* > > > > On Wed, May 10, 2023 at 6:25 AM Rajaram Krishnamurthy < > [email protected]> wrote: > >> Thanks a lot. How is anandam felt by Maha periava?. >> ஆனந்தம் எங்கே? : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)MAKOTI.ORG >> <https://www.kamakoti.org/> >> >> நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம் >> ஆசைப்படும் வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றைவிட்டுப் >> பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி >> நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து விட்டுவிட்டால், அத்தனைக்கத்தனை ஆனந்தமாக >> இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை முளைகளை துக்கத்துக்கு >> அடித்துக்கொண்டு நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம். ஆசைகளைக் குறைக்கக் >> குறைக்க துக்கஹேதுவுங் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் >> விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படவே வேண்டாம்; அப்படியே >> பரமாத்மாவில் கரைந்து ஆனந்தமாகி விடலாம். >> >> மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். >> ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்து விடுகிறான்? நாயும், >> நரியும், கரப்பான் பூச்சிகளும்கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி >> செய்கின்றன. சாகின்றன. பொதுவாக மனிதனும் இதற்குமேல் ஏதும் செய்வதாகக் >> தெரியவில்லை. அப்பொழுது இவனது விசேஷ ஞானத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது? >> எல்லாவற்றிலும் பெரிய ஞானம் நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான். >> மனிதன் இப்படிப்பட்ட நிலைத்த ஆனந்தத்தைப் பெறுகிறானா? >> >> யோசித்துப் பார்த்தால், பரம தாத்பரியமாகத் தெரிவது, இந்த ‘ஞானம்’, >> ‘ஆனந்தம்’, ‘நாம்’, என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை >> உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞான மயமான ஆனந்தம் என்று கண்டுகொள்வோம். >> >> வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தேதான் >> ஆனந்தம் பிறக்கிறது. நமது உண்மை ஸ்வரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி >> மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில்கூட ‘நம்முடையது’ என்று ஒன்றிடம் சம்பந்தம் >> வைக்கும்போதுதான் அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்த சம்பந்தம் போய் >> விட்டால் ஆனந்தம் போய் விடுகிறது. உதாரணம் சொல்கிறேன்; ஒருவருக்குச் சொந்தமாக >> கொஞ்சம் நிலம் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் >> வருஷத்துக்கு வருஷம் விளைச்சல் அதிகமாவதாக வைத்துக் கொள்ளுங்கள். ‘இந்த வயல் >> என்னுடையது’ என்பதால், விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் அவருக்கு மனம் >> குளிருகிறது. ஆனந்தம் உண்டாகிறது. அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது. >> வயலை வேறு ஒருவருக்கு விற்று சாஸனம் பண்ணி விடுகிறார். மறுபடி அடுத்த வருஷம் >> அதே வயலில் ஏகமாக விளைச்சல் கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும்போது >> இவர் மனம் குளிரவா செய்கிறது? “அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு >> மாதிரிப் பொட்டலாக இருந்தது; இப்போது எவனோ ஒருவனுக்கு அதிருஷ்டம் அடிக்கிறதே!” >> என்று வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது. ‘எனது’ என்ற சம்பந்தம் இருந்த >> மட்டுந்தான் அமோக விளைச்சலில் சந்தோஷம் இருந்தது. பிறகு அதே விளைச்சலில் >> உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது. >> >> இன்னோர் உதாரணம் சொல்கிறேன். என்னிடம் பல பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து >> வந்து, அவற்றுக்கு சித்தப்பிரமை இருக்கிறது. அது நிவிருத்தியாக வேண்டும் என்று >> கேட்டுக் கொள்வதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு நேர்மாறாக ஒரு தகப்பனார் >> நடந்து கொண்டார்! அவர் இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டவர். இளையாளுக்கு >> மூத்தாள் பிள்ளையோடு ஒத்துவரவில்லை. ஏகச் சண்டை போட்டுக் குடும்பம் பிரிந்தது. >> இவர் இளையாள் தரப்பிலேயே இருந்தார். பிள்ளையைக் கைவிட்டுவிட்டார். அவர் ஒரு >> நாள் என்னிடம் வந்து, ‘மூத்தாள் பிள்ளை இளையாளுக்குப் பில்லி சூன்யம் >> வைத்தான். நல்ல வேளையாக அது அவனையே திருப்பி அடித்துவிட்டது’ என்றார். >> எல்லாத் தகப்பனார்களும் பிள்ளைக்குச் சித்தப்பிரமை ஏற்படும்போது >> கவலைப்படுகிறார்களென்றால், இவரோ அதிலேயே சந்தோஷப்படுகிறார். ஏன்? இவருக்கு >> அவனிடம் ‘நம்முடையவன்’ என்ற சம்பந்தம் போய் விட்டது. இளையாளிடம் மட்டும் >> ‘நம்முடையவள்’ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால்தான் அவளுக்கு ஹானி இல்லை >> என்றால் இவர் ஆனந்தப்படுகிறார். >> >> மாயைக்கு ஆளான ‘நான்’ என்பதன் சம்பந்தத்துக்கே இத்தனை ஆனந்தம் இருக்கிறது >> என்றால், எதிலும் சம்பந்தப்படாமல் பூரண ஞானமாக இருக்கின்ற அந்த வெறும் ‘நான்’ >> எத்தனை ஆனந்தமயமாக இருக்கும்! வெல்லம் போட்டால் கசப்பு பாகற்காய்க் கறியிலும் >> சிறிது தித்திப்பு இருப்பதை உணர்கிறோம். வெல்லத்தின் சம்பந்தத்துக்கே >> தித்திப்பு இருப்பதால், அசல் வெல்லம் தித்திப்பு மட்டுமே என்பதில் சந்தேகம் >> என்ன! கசப்பான துக்க உலகத்தின் ‘நான்’ என்பதின் மாயக் கிரணங்கள் >> சம்பந்தப்படுகிறபோதே அதில் தித்திப்பு ஆனந்தத்தைப் பெறுகிறோம் என்றால், அந்த >> ‘நான்’ மட்டுமே ஸ்வச்சமாக நிற்கின்றபோது எத்தனை தித்திப்பாக ஆனந்த மயமாக >> இருக்கவேண்டும்? சிறிய பொத்தல்கள் கொண்ட ஒரு சட்டியால் ஒரு தீபத்தை >> மூடிவைத்தால் துவாரங்கள் வழியாக மெல்லிய ஒளிக்கிரணங்கள் வெளிவரும். மாயையால் >> மூடப்பட்ட ஆத்ம தீபத்திலும் இந்திரிய துவாரங்கள் வழியாகக் கொஞ்சம் கொஞ்சம் >> ஆனந்த ஒளியைப் பார்க்கிறோம். மாயச்சட்டியை உடைத்து விட்டால் ஆனந்த ஜோதிர் >> மயமாகவே ஆகிவிடலாம். துவாரங்களின் அளவைப் பொறுத்துப் பல வேறு அளவுகளில் ஒளி >> வெளி வந்தாலும் உள்ளேயிருப்பது ஏகஜோதிதான். நாம் மாயச்சட்டியை உடைத்து >> விட்டால் உலகத்தில் பார்க்கும் வித்தியாசங்கள் எல்லாம் மறைந்து எல்லாம் ஒன்றான >> ஆனந்தரூபமாகவே தெரியும். >> >> மாயையை எப்படி உடைப்பது என்றால் ஆசைகளை அடக்குவதுதான் வழி. மனம் இருக்கும் >> வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனத்தை அடக்கிவிட வேண்டும். மனம் >> அடங்கி விட்டால் மரண நிலையில் இருப்பதுபோல் ஒரு சக்தியுமின்றி ஜடம் மாதிரி >> ஆவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, இதுதான் சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை. >> சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக >> தீக்ஷண்யம் இருக்கும். பல வாய்க்கால்களில் ஒன்றில் ஜலத்தை அடைத்துத் >> திருப்பினால் இன்னொன்றில் அதிகம் நீர் பெருகுவது போல், ஓர் அங்கத்தில் ஊனம் >> இருப்பதே இன்னொன்றில் தீக்ஷண்யத்தைத் தருகிறது. ஆத்ம சக்தியைப் பலவாறாகச் >> சிதறச் செய்யும் எல்லாம் இந்திரியங்களையும் அடைத்துக் கொண்டு விட்டால், >> அப்போது சகல சக்திகளும் ஒரே இடத்தில் அமைதியாக, ஆனந்தமாகக் கூடி நிற்கும். >> மிகுந்த சக்தியுடன் உலகுக்கு நல்லது செய்யலாம். >> >> ஆத்ம ஞானம் பெற்ற ரிஷிகள் சக்தியே இதற்கு திருஷ்டாந்தம். சகல >> லோகங்களுக்கும், சகல காலங்களுக்கும் சென்று அவர்கள் விஷயங்களைத் தெரிந்து >> கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். நம் காதுக்குக் கேட்காத சப்தங்களை >> ஆகாயத்தில் கேட்டு வேத மந்திரங்களைக் கொடுத்தார்கள். எப்படி ஆசையை அடக்குவது? >> எப்படி மனத்தை நிறுத்துவது? எப்படி நிலைத்த ஆனந்தத்தை அடைவது என்று >> கேட்கிறவர்கள் அந்த வேதங்கள் சொன்னபடி நடந்தாலே போதும்; முடிவில் பேரானந்தம் >> அடையலாம். இதற்குப் பரமேசுவரன் அநுக்கிரகம் செய்வாராக. >> >> Where is the joy? : Voice of the Goddess (Part One) >> Kamakodi Voice of God >> We have innumerable desires. But it is certain that one day the things we >> desire will leave us or we will leave them. If this separation does not >> occur through death, and if we resign ourselves to desires before it, then >> all this can be bliss. No matter how many desires we have, we tie ourselves >> down to sorrow. Decreasing cravings will reduce anxiety. If we give up all >> desires before the end of this birth, we should never be reborn again; Just >> like that, you can become blissful by dissolving into the Supreme Soul. >> We are proud that man is more intelligent than other animals. But what >> makes him more special than them? Dogs, foxes and cockroaches also eat it. >> Progeny develop. die Humans generally don't seem to do anything more. Then >> what is there to be proud of in his special wisdom? The greatest wisdom of >> all is to find the path to eternal bliss. Does man attain such permanent >> bliss? >> >> If you think about it, it seems like the supreme sense, this 'wisdom', >> 'bliss', 'we' are all one. When we come to the wisdom of realizing who we >> really are, we find that we are blissful enlightenment. >> >> We do not get happiness from external things. Happiness is born from us. >> Even when we cover up our true form of bliss with ignorance, we derive >> bliss from it only when we relate to something that is 'ours'. If that >> connection is gone, happiness is gone. Let me give an example; Suppose one >> owns some land. First of all, keep the yield increasing year after year. >> Because 'this field is mine', whenever the yield is high, he is relieved. >> Happiness arises. Then the yields begin to decline. He sells the field to >> someone else and makes a charter. Again, next year, the same field has >> yielded abundantly. Does he feel cold when he sees it now? “Ah, last year >> when we had it in our hands it was a barren sample bottle; Now somebody's >> got bad luck!” That causes stomach upset. There was happiness in the >> abundant yield only when there was a connection with 'mine'. Then the >> sentiment changed drastically in the same yield. >> Let me give you another example. I have had many parents bring in >> children who are paranoid. You have seen it asking for development. A >> father did the opposite! He is married for the second time. The younger one >> did not get along with the older one. The family got separated due to a >> fight. He was on the younger side. Abandoned the child. He came to me one >> day and said, 'The elder son has cast spells on the younger one. >> Fortunately, it hit him back. If all fathers worry when their child becomes >> paranoid, this one is happy about it. Why? He has lost the relation of >> 'ours' to him. Only Ilayaal has the idea of being 'ours'. That is why he is >> happy if she is not harmed. >> If there is so much bliss in connection with the delusional 'I', then how >> blissful is that mere 'I' who is completely unattached to anything! We feel >> that bitter gourd curry also has a bit of tartness when jaggery is added. >> There is no doubt that the original jaggery is only tittipu, as it is >> associated with jaggery itself! If in the world of bitter sorrow we get the >> bliss of tittipu while the mystical rays of the 'I' are involved, how much >> blissful bliss must be when the `I' alone stands pure? If a lamp is covered >> with a pan of small packets, thin rays of light will come out through the >> holes. Even in the Atma Dipa covered by illusion we see little by little >> the light of bliss through the apertures of the senses. Ananda Jyotir can >> become magic if you break the magic chatti. Depending on the size of the >> holes, the light comes out in many different sizes, but what is inside is >> Ekajyoti. When we break the magic box, all the differences we see in the >> world disappear and we see everything as one blissful form. >> The way to break illusion is to suppress desires. Desires will exist as >> long as there is a mind. So the mind should be subdued. If the mind is >> subdued, we should not think that we will become like a body without any >> power as if we are in the state of death. Rather, this is the source of all >> power. Usually people who have a disability in one part have a greater >> weakness in another part. Just as if water is blocked in one of the many >> canals and diverted, more water will rise in another, oh Usually people >> who have a disability in one part have a greater weakness in another part. >> Just as if water is blocked in one of the many canals and diverted, more >> water will rise in another, so a defect in one part gives rise to dikshana >> in another. If everything that disperses the soul energy in many ways is >> blocked by the senses, then all the energies will gather in one place in >> peace and bliss. We can do good to the world with great power. The power of >> rishis who have spiritual knowledge is the Dhrishtanta for this. They had >> the power to know things by going to all the worlds and all the ages. They >> heard sounds in the sky that our ears could not hear and gave Vedic >> mantras. How to curb desire? How to stop the mind? Those who ask how to >> attain eternal happiness, just follow the scriptures; At the end there will >> be rapture. May Lord Parameswaran bless this. Kr IRS 10523 >> >> On Tue, 9 May 2023 at 16:09, Jambunathan Iyer <[email protected]> >> wrote: >> >>> Close the past and look forward to new beginnings. If you are not happy >>> with your job\career, relationship, etc. prepare to change it and find the >>> one which will give you happiness and peace of mind. Honour your promises >>> and complete all unfinished tasks so that you can move forward with ease >>> and swiftness. >>> >>> N Jambunathan Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004 >>> >>> *" What you get by achieving your goals is not as important as what you >>> become by achieving your goals. If you want to live a happy life, tie it to >>> a goal, not to people or things "* >>> >>> -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor_9jcNB9gnT_eYTRBbKgvTQMxTt9tdcxBYUfQYM-ieBg%40mail.gmail.com.
