ஆரோக்யம் வேண்டினேனோ பின்பழகியார் போலே?


*தம் எதிரே நிற்பது சாதாரணமானப் பெண்மணி இல்லை, சம்பிரதாய விஷயங்களில் நல்ல *

*பற்றுடையவள் என்பது இப்போது தெளிவாகத் தெரிந்தது மாமுனிகளுக்கு..*

*...இவள் சொல்லி பகவத், பாகவத விஷயங்களை இன்னும் சற்று நேரம் ஆனந்தமாய் *

*அனுபவிக்கலாம் என்ற எண்ணம் தற்பொழுது அவருக்கு உண்டானது..*

*அதனால், அந்தப் பெண்பிள்ளையிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தார்..*

*"பெண்ணே!.. *

*ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்வதில் நீ ரொம்பவும் ஊற்றம் உடையவளாய்த்
தெரியறயே!...*

*வயோதிகம் நெருங்கிண்டு இருக்கற இந்த சமயத்தில, ஒன்னால ஓடி ஆடி ஆசார்யனுக்கு *

*கைங்கர்யம் லாம் செய்ய முடியுமா?.. *

*அதுக்கு ஒன்னோட தேஹம் எடம் கொடுக்க வேணாமா?.."*

*....மாமுனிகளின் நியாயமான சந்தேகத்திற்கு விடையளிக்க, தற்பொழுது
திருவல்லிக்கேணி *

*அம்மாள் பேச ஆரம்பித்தாள்...*

*"ஸ்வாமி... தாம் கூறுவது நியாயமே!.. *

*அடியேனுக்கு எவ்ளோ தூரத்துக்கு ஸாத்யமோ, அவ்ளோ தூரத்துக்கு ஆசாரிய
கைங்கர்யம் *

*பண்ணணும்னு உத்தேசம்..*

*அடியேன் என்ன*

* ஆரோக்யம் வேண்டினேனோ பின்பழகியார் போலே?.. *

*...என்று கேட்டு, மாமுனிகள் இது சம்பந்தமாய் முழு விருத்தாந்தமும் கேட்க
ஆசைப்படுவார் *

*என்பதை உணர்ந்தவளாய், தானே அதைக் கூறவும் ஆரம்பித்தாள்..*


*"நம்பிள்ளையின் அந்தரங்க சிஷ்யர் இந்தப் "பின்பழகராம் பெருமாள் ஜீயர்"...*

*இவர் நம்பிள்ளைக்கு ரொம்ப ஆசையோட அடிமைகள் செஞ்சுண்டு இருந்தார்..*

*ஒரு சமயம் இந்த ஜீயருக்கு ஒடம்பு ரொம்ப முடியாம போயிடுத்து..*

*அவரால, வழக்கம்போல நம்பிள்ளைக்குச் செய்யற கைங்கர்யங்களத் தொடர முடியல..*

*அப்போ, அவர் நம்பிள்ளையோட சில சிஷ்யர்களக் கூப்பிட்டு,*

*"நீங்கள்ளாம், "ஏழை ஏதலன்", **"ஆழி எழ" இந்தப் பதிகங்கள எம்பெருமான் முன்ன
விண்ணப்பம் *

*செஞ்சு, **எனக்குத் தேக ஆரோக்யத்த தந்தருளும்படி ப்ரார்த்தனை பண்ணுங்கோ!.."னு
கேட்டுண்டார்..*

*இந்த விஷயத்தை அந்த சிஷ்யர்கள் பிள்ளையிடம் கொண்டு சென்று
ப்ரஸ்தாபித்தார்கள்..*

*"ஒரு ஶ்ரீவைஷ்ணவன் பெருமாள்கிட்ட தனக்கு ஆயுளையும் ஆரோக்யத்தையும்
வேண்டலாமா?..*

*இது ரொம்பவும் தப்பில்லையா?..*

*ஆயிரம்தான் உபதேசம் கேட்டாலும், இங்கத்திய வாழ்க்கையில ஜீயருக்கு இன்னும்
பற்று *

*விடலையே!.."னு அங்கலாய்ச்சா..*

*பிள்ளைக்கு ஜீயரோட திருவுள்ளத்துல என்ன எண்ணம் ஓடறதுனு நன்னாத் தெரியும்!..*

*ஆனாலும் மீதி சிஷ்யாக்களும் அத உள்ளபடியே உணரணும்னு ஆசப்பட்டு, ஜீயரக்
கூப்பிட்டு,*



*"நீரிப்படி பெரிய பெருமாள நிர்ப்பந்திக்கலாமா?..*

*இது ஒம்ம ஸ்வருபத்துக்கு விருத்தம் அன்றோ?..(உம்முடைய தகுதிக்கு
ஏற்புடையதோ?..)*

*என்று கேட்கவும், ஜீயர் பிள்ளைகிட்ட தம்மோட உள்ளக் கருத்தை வெளியிட்டார்..*

*"தேவரீர் நீராடி எழுந்தருளியதும், தமது மார்பிலும் முதுகிலும் குறுவேர்வை
முத்துக்களாக அரும்ப,*

*அடியேன் ஆலவட்டத்தைச் சுழற்றி அதைக் களைய வேணும்...*

*தேவரீரோட வஸ்திரங்களத் தோய்க்கவும், உலர்த்தவும் செய்து, தேவரீர்
உபயோகத்துக்குப் *

*பாங்காக **ஆக்கித் தரணும்..*

*தேவரீர் களைச்சுப் போய் சோர்வா இருக்கச்சே, தேவரீரோட கால்பிடிச்சு விடவும்,
கை அமுக்கி *

*விடவும் செஞ்சு, தேவரீருக்குத் தேஹ சௌக்யத்த உண்டாக்கணும்...*

*....இன்னும் இதுபோல அடியேனால் ஆன சகல விதமான உபசாரங்களையும், தேவரீருக்கு *

*செய்யணும்னு ஆசைப்படறேன்..*

*இந்தக் கைங்கர்யங்களை அடியேன் இழக்க விரும்பாததனாலத்தான் அப்படிப்
பெருமானிடம் கேட்கச் *

*சொன்னேன்..*

*மத்தபடி, இந்த வாழ்க்கையில, அடியேனுக்கு வேறு எந்தவிதமான பிடிப்பும் இல்ல
ஸ்வாமி..." என்று *

*விண்ணப்பம் செய்தார்..*

*....இந்தமாதிரி, ஸ்வரூப விருத்தம்னு (தகுதிக்கு ஏற்றதல்ல) தெரிஞ்சும், ஜீயர்
பெருமாள்கிட்ட *

*அப்படி ஒரு ப்ரார்த்தனை பண்ணிக்கணும்னா, அவருக்கு ஆசார்ய கைங்கர்யத்துல எவ்ளோ
ஈடுபாடு *

*இருக்கணும்?..*

*அடியேன் என்ன அப்படியா ஸ்வாமி?..*

*முடிஞ்ச போது செய்வேன்...*

*முடியலைனா, விட்டுடுவேன்...*

*அடியேனோட ஆசார்ய பக்தி அவ்வளவுதான்!.."*

*....என்று குற்ற உணர்வோடு சொல்லித் தலை குனிந்தாள் திருவல்லிக்கேணி
அம்மையார்...*

*--------------------------------------------------------------------------------------------------------------------*

*ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா*

*திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து,*

*'மாழை மான்மட நோக்கியுன் தோழி;*

*உம்பி எம்பி'என் றொழிந்திலை, உகந்து*

*'தோழ னீயெனக் கிங்கொழி' என்ற*

*சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட,*

*ஆழி வண்ண!நின் அடியிணை யடைந்தேன்*

*அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே! - 1*

*ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய*

*விளக்க உரை*

*ஸ்ரீ ராமாவதாரத்தில் குஹப் பெருமாள் திறத்தில் நீ செய்தருளிய திருவருள் என்
நெஞ்சை விட்டு அகலாது என்னை உருக்குகின்றது; அப்படிப்பட்ட திருவருள் அடியேன்
மேலும் செய்தருளத் தக்கது காண் என்கிறார் இம்முதல் பாட்டில்.*

*க்ஷத்ரிய ஜாதியில் சூரிய குலத்தில் இக்ஷ்வாகு வம்சத்தில் திருவவதரித்தவனும்
சக்ரவர்த்தியின் திருக்குமாரனும் ஸகலைச்வர்ய ஸம்பந்நனும் மஹாபுத்திமானும்
பகைவரிடத்தும் அன்பு கொள்பவனுமான இராமபிரான் குஹனை நோக்குங்கால், இவன் இழிவான
வேடச்சாதியனென்றும் அதனால் பகுத்தறிவில்லாத அவிவேகி என்றும் அச்சாதிக்கு
இயல்பான கொடுமையினால் எல்லா வுயிர்களோடும் பகைமை கொள்பவன் என்றும் இகழ்ச்சி
கொள்ளவேண்டியது ப்ராப்தமாயிருந்தும் அங்ஙனம் இகழ்ச்சி கொள்ளாது தனது பெருமைக்
குணங்களையும் பாராமல் அவனுடன் கலந்து பரிமாறின கருணையை இங்ஙனம் பாராட்டி
எடுத்துக்கூறி, ஆழ்வார், ‘அவ்வாறே அடியேனிடம் உள்ள இழி குணங்களையும்
பொருள்செய்யாது என்னையும் ஆட்கொண்டருள்வன் எம்பெருமான்’ என்னும் நம்பிக்கை
கொண்டு தாம் அவன் திருவடிகளில் சரண்புகுந்தமையை வெளியிட்டார்.*

*ஏழை, ஏதலன், கீழ்மகன் என்றவை மேன்மேலும் ஒன்றினும் ஒன்றே மிக  இழிவாம்.
“ஏழையேதலன் கீழ்மகனென்னாது” என்ற சொற்போக்கினால், கைவிடுகைக்கு இவ்விழி
குணங்களில் ஓரொன்றே அமைவதாயிருக்க, அவை பலவும் உளவென்று கண்டும் குஹனிடம்
உபேக்ஷை கொள்ளாதிருந்தனன் அருட்கடலான பெருமான் என அவனது நீர்மையிலேற்றத்தை
விளங்க வைத்தனர்.  குலத்திலும் செயலிலும் குணத்திலும் குறையொன்றையும் பாராதே
தன்பக்கல் அவன்கொண்ட அன்பே காரணமாக அவனிடம் இரங்கியருளினனென்க.*

*“ஏழையேதலன் கீழ்மகனென்னாதிரங்கி” என்பதற்கு “நீசனேன் நிறையொன்றுமிலேன்
என்றார்போல, ‘யான் ஏழை, யான் ஏதலன், யான் கீழ்மகன்’ என்று தனது இழிவைப்
புலப்படுத்தும் மொழிகளைக் குஹன் கூறாத முன்னமே அவன் பக்கல் இரக்கங்கொண்டு –
என்று பொருள் கொள்வதுமுண்டு.*

*ஏழை – அறிவில்லாதவன்.  இச்சொல்லுக்கு இப்பொருள் எங்ஙனே கிடைக்குமென்னில்
“நுண்ணுணர்வின்மை வறுமை அஃதுடைமை, பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்” என்பவாதலால்
‘ஏழை’ என்ற சொல் அறிவுகேடனென்னும் பொருளதாகும்.  திருமகள் கணவனம்
ஸகலலோகநாதனும் சக்ரவர்த்தி திருமகனுமான ஸ்ரீராமபிரானை நோக்குமிடத்து
க்ருங்கிபேர புராதிபதியான வேடர் தலைவனை தரித்ரனென்று சொல்லத் தட்டில்லையாதலால்
‘ஏழை’ என்ற சொல்லுக்கு – பொருளில்லாத தரித்ரன் என்ற அர்த்தமும் இங்கு
ஏற்றதேயாம்.*

*ஏதலன் – ஏது அலன்; யாதொரு ஸம்பந்தமும் உடையனல்லாதவன்; இது அயலானக்கும்
பகைவனுக்கும் வழங்கும். வேடன் பல வுயிர்களையும் கொலைசெய்வதையே சாதித்தொழிலாக
வுடையனாதலால் பலர்க்கும் ஏதலனாவன்.*

*அருள்சுரந்து பேசின பேச்சின் பரிசு கூறுவது இரண்டாமடி.*

*மாழைமான் மடநோக்கி உன்தோழி உம்பி எம்பி =  கள்ளம் கபடமின்றிக் கவலையையும்
அச்சத்தையுங் கொள்ளும் மகளிர் கண்ணோக்கிற்கு – வெருண்டமானின் மருண்ட பார்வையை
உவமை கூறுதல் மரபு.  இங்கு இது கூறியதானல், குஹனைக் கண்டவளவில் பிராட்டி
மருண்ட நோக்குடையளாயினள் என்பது தோன்றும்.  முன்னே குஹனைப் பார்ப்பதும் உடனே
இராமனைப் பார்ப்பதுமாக மான்பார்வைபோலக் கொண்ட சபலமான பார்வைகளால் குஹனை
அன்பனாக அங்கீகரிக்கக் குறிப்பிட்டனள் பிராட்டி என்பதும் இங்குத்தோன்றும்.
அடியார்களைக் கடாக்ஷரித்தருள்வதிற் பெருமானைக் காட்டிலும் புருஷகாரமான
பிராட்டிக்கு உள்ள முற்பாடு இதில் தோன்றுமென்னலாம்.  “பேதைமை யென்பது
மாதர்க்கு அணிகலம்” ஆதலால் பெண்ணரசியான பிராட்டியின் நோக்கம் ‘மடநோக்கு’
எனப்பட்டது. மடமை – எல்லாம் அறிந்தும் ஒன்றும் அறியாது போலிருக்குந் தன்மை;
இது பெண்மைக் குணங்களிலொன்று.  மடநோக்கு – மடப்பம் தோன்றும்படியான நோக்கு
என்க.  மாழை – அறிவின்மை, அழகுமாம்.  “மடநோக்கி உன்தோழி” என்றது முதலிய
சொற்களால், இராமபிரான் குஹனைத் தனக்குச் சமானனாகக் கொண்டனனென்பது விளங்கிற்று.*

*உம்பி, எம்பி என்றவற்றில் முறையே நீர் யாம் என்ற பகுதிகள் உம் எம் என்று
விகாரப்பட்டன.  (நன்நூல் உருபு -8)  பி – முறைப்பெயர் விகுதி.  ஒழிந்திலை –
முன்னிலையொருமை யிறந்தகால முற்றெச்சம்; ஒழிந்தாயில்லையாய் என்கை.  ‘இருந்திட’
என்ற செயவெனெச்சம் காரணப் பொருளது; என் மனத்தில் இருத்தலால் என்கை.*

*ஆக இப்பாட்டால் – கானவரில் தலைவனான குஹப்பெருமானுக்கு வானவரில் தலைவனான
இராமபிரான் திருவருள் புரிந்தமையை முன்னிட்டுத் திருவரங்க நாதன் திருவடிகளிற்
சரணம் புகுந்தாராயிற்று.*



*English Translation*

*“Woe-begotten most lowly born servant”, -not addressing the boatman Guha
thus, Fawn-like tender-eyed Sita beside you, you made your most devoted
brother his too, “Come my dear Brother, friend to me always”, those words
come to my heart and they haunt me Ocean-hued Lord, I’ve come to your lotus
feet, O Lord surrounded by groves in Arangam!*

*மாட மாளிகை சூழ்திரு மங்கை*

*மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்,*

*ஆடல் மாவல வன்கலி கன்றி*

*அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை,*

*நீடு தொல்புக ழாழிவல் லானை*

*எந்தை யைநெடு மாலைநி னைந்த,*

*பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்!*

*பாட நும்மிடைப் பாவம்நில் லாவே. - 10*


*உயர்ந்த மேல்மாடங்களும் , சிறந்த மாளிகைகளும் , கோபுரங்களும் , மண்டபங்களும்
நாளும் நாளும் பெருகுகின்ற , ஓங்கி வளர்கின்ற சோலைகளில் இசைபாடுதலை யுடைய
வண்டுகள் ஒலிக்கின்ற , நல்ல வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளி
யிருக்கின்ற , ஒருகாதிற் குழை தூங்க , மற்றொரு காதினில் தோட்டினை இட்டு ,
அடியார்கள் ஆடிப்பாட நின்று ஆடுமாறு வல்லாராகிய அவரே , யாவரினும் மிக்க
அழகுடையவர் .*

*English Translation*

*Balconied-mansions-all-over Mangai’s king and Valiant warrior, protector,
Adalma-riding Kalikanri horseback song on Lord of Tiruvarangattan, -wielder
of golden discus radiant, ancient Lord and the master of Universe, sing
this ten-songs-garland, O, Devotees! Karmic misery will never set on you
again.*





*ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசைவாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்மோழை
எழ முடி பாதம் எழ அப்பன்ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1*

*உலகில், தலைவனான அரசனுக்கு ஒரு காரியம் ஆகவேண்டியிருந்தால் பரிகாரங்கள்
முன்னின்று காரியஞ்செய்து தலைவனுக்கு வெற்றியை யுண்டாக்கப்பார்ப்பதென்கிற ஒரு
முறை யுண்டே;*

*அந்த ரீதியிலே, ஆயுதங்களில் தலைவனான திருவாழியாழ்வான் முந்துற முன்னம்
வியாபரித்தபடியைப் பேசுகிறார் ஆழியெழவென்று.*

*பெருமாள் காட்டுக் கெடுந்தருளப் புறப்படுவதற்கு முன்னே இளைய பெருமாள் தாம்
முற்பட்டதுபோல,*

*எம்பெருமானுடைய திருவடி உலகளக்க நிமிர்வதற்கு முன்னை திருவாழியாழ்வான் தான்
முன்னே உயர்ந்து தோற்றினானாயிற்று.*

*கருகுமிடம் பொருது – கைந்நின்ற சக்கரத்தன் என்கிறபடி  எம்பெருமான்
நினைப்பிட்டவிடத்திலே சடக்கெனச் சென்று காரியம் தலைக்கட்டித் திரும்புமாற்றல்
படைத்தவனான திருவாழியாழ்வான்*

*‘இந்த மாவலியின் செருக்கை யடக்க தேவரீர் வேணுமோ? அடியேனுக்கு
நியமித்தருளினால் ஒரு நொடிப்பொழுதில் நிறைவேற வேண்டிய காரியமன்றோ இது’ என்று
அவலீலையாகப் பேசுவான் போலே தான் முன்னே யெழுந்தானாயிற்று.*

*எம்பெருமான் எந்த அவதார மெடுத்தாலும் திருவாழியாழ்வான் தான் முன்னிருந்து
காரியஞ் செய்பவன்.*

*இதை ஸீபூத்யாம்” என்கிற ஸ்ரீஸீக்தியாலே நன்குணரலாம்.*

*ராமாவதாரம் வராஹாவதாரம் நரஸிம் ஹவதாரம் பரசுராமாவதாரம் முதலியவற்றில்
திருவாழியாழ்வானுடைய ப்ரஸதாவம் இல்லேயானாலும், ராமாவதாரத்தில் அம்பிலே
ஆவேசித்தும், வாராஹாவதாரத்தில் கோரப்பல்லிலே ஆவேசித்தும், நரஸிம் ஹவதாரத்தில்
திருவுகிரிலே ஆவேசித்தும், பரசுராமாவதாரத்திலே மழுவிலே ஆவேசித்தும் இப்படி
ஒரோரவதாரந்தன்னிலே ஒரொருவஸ்துவாக இருந்து காரியஞ் செய்தவன்
திருவாழியாழ்வானேயென்கிறது மேற்குறித்த ஸுதர்சந சதக ச்லோகம்.*

*வாணீ பௌராணிகீயம் ப்ரதயதி மஹிதம் ப்ரேக்ஷ்ணம் கைடபாரே:” என்கிற அதற்கு
முந்திய பாதமானது எம்பெருமானுடைய ஸ்ங்கல்பமே தான் திருவாழியாழ்வனென்கிறது.*




*குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்நன்றி
புனைந்த ஓர் ஆயிரத்துள் இவைவென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே –7-4-11*

*கோவர்த்தனத்தைத் தூக்கிய மஹோபகாரனான கண்ணனுக்கு அடியார்களான பாகவதர்களோடே
ஒன்றாகக்கூடி நின்ற ஆழ்வாருடைய ஆயிரம் பாசுரங்களுக்குள் ஸர்வேச்வரனுடைய
வெற்றிச்சரித்ரங்களைக் காட்டும் நன்மையை உடைய இந்த பதிகத்தை அர்த்தத்துடன்
கற்பவர்களுக்கு எல்லாவிதமான வெற்றியையும் இது தரும்.*

*(வளரும்..)*

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


*https://www.youtube.com/watch?v=Csl6jAYlsPs*
<https://www.youtube.com/watch?v=Csl6jAYlsPs>

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

 *Vanakkam Subbu*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2Bo83ueZS6me6tHnmav3aCvrQZvugMO4%2BFAgHwBn5eXBgA%40mail.gmail.com.

Reply via email to