*1     **பழமொழி: *

*அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான். *
*தற்போதைய பொருள்: *

*அற்ப சிந்தனை உள்ள மனிதர்கள் தமக்கு திடீரென்று பெரும்பொருள் அல்லது
உயர்ந்தபதவி கிடைத்தால் மழை இல்லாத நள்ளிரவில் கூட குடைபிடிப்பார்கள்.
**மேற்காணும்
தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து
இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர்
ஒரு காலத்தில் '**அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை
பிடிப்பான். அவன் யார்?' *

*என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. **இந்த விடுகதைக்குப் பதில் '**காளான்'
**ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது.*

*9         "**கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,*

*நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".*

*கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை
கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள்
கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.*

*xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx*

*ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.*

*ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - சரி.*

*********************

*படிச்சவன் பாட்டை கெடுத்தான், **எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.*

*படிச்சவன் பாட்டை கொடுத்தான் , **எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் - சரி.*

*Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx*

*ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.*

*ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் - சரி.*

*Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx*

*ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - *

*தவறு. **ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - *
*சரி. ********************

****ஆடி காற்றில் அம்மியும் பறக்கும்* * *தவறு*

****ஆடி காற்றில் அம்மையும் பறக்கும்* **சரி*

*xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx*

****மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே* * *தவறு*

****மங்கு திரையை நம்பி ஆற்றில் இறங்காதே* * *சரி*

*Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx*

****களவும் கற்று மற* * *தவறு               **களவும் கத்தும் மற* *

*xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx*

****குரைக்கிற நாய் கடிக்காது* * *தவறு*

****குழைகிற நாய் கடிக்காது* * *சரி*

*xxxxxxxxxxxxxxxzx**

*ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே* * *தவறு*

****நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே* * *சரி*

*xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx*

****ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்* * *தவறு*

****அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்** *சரி*

*xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx*

****ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்* * *தவறு*

****அகத்தில் போட்டாலும் அறிந்து போடவும்* * *சரி*

*xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx*

****அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்* * *தவறு*

****அடிமேல் அடிவைத்தால் அம்மியும் தகரும்* * *சரி*

*xxxx**

*கண்டதை கற்க பண்டிதன் ஆவான்* * *தவறு*

****கண்டு அதை கற்க பண்டிதன் ஆவான்* * *சரி*

*xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx*

****வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை* * *தவறு*

****வாக்கு தெரிந்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கு தெரிந்தவனுக்கு போலீஸ்
வேலை* * *சரி*

*Xxxxxxxxxxxxxxx*

*பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல* * *தவறு*

****பழம நழுவிப் பாகில் விழுந்தது போல* * *சரி*

*xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx*

****கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே* * *தவறு     KR   IRS
 17 6 23*

****கப்பலே கவிழ்ந்தாலும் கன்னகோலில் கை வைக்காதே* * *சரி*

*xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx*

On Fri, 16 Jun 2023 at 13:59, 'venkat giri' via iyer123 <
[email protected]> wrote:

>
> *அன்புடையீர்,*
> **_பழமொழிகள்..._*பொன்மொழிகள்*
>
>
> *1. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த*
> *ராத்திரியில் கொடை புடிப்பான்..*
>
> *அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த*
> *ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....*
> *வள்ளல் ஆனவரை கஞ்சனாக*
> *மாற்றி விட்டோம் ...*
>
> *2.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்“*
>
> *அடி என்பது ஔவையாரின் நாலடியாகும்.*
>
> * அந்த நாலடி நூல் உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்பதே
> இப்பழமொழியின் உண்மை அர்த்தம். *
>
> *நாமோ நாம் கொடுக்கும் அடிக்குத்தான் சரியாக செயல்படுகிறது என்று
> நினைக்கிறோம்.*
>
> *3. ”நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு“*
>
> *சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. *
>
> *அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. *
>
> *ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
> என்பது தவறானது.*
>
> *4. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு *
>
> *இ‌ந்த பழமொ‌ழி‌ உருவானத‌ற்கு ஒரு புராண‌க்கதை உ‌ண்டு.*
>
> * குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை
> அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை
> எதிர்த்து போரிட அழைக்கிறார்.*
>
> * அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர்.*
>
> *அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும்
> சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி
> என்பது எனக்குத் தெரியும்.*
>
> *ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன்.*
>
> * எப்படி செத்தால் என்ன? *
>
> *அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே
> இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான்.*
>
> * கர்ணன் கூறியதுதான் மேற்படி பழமொழிக்கு உண்மையான பொரு‌ள்.*
>
> *5.“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைத் தானே வளரும்.” *
>
> *பெரும்பாலானவர்கள் இதன் விளக்கமாக நினைப்பது என்னவென்றால், ஊரில் உள்ள
> குழந்தைகளைத் தன் குழந்தை போல் வளர்த்தால், தன்னுடையக் குழந்தை தானே வளரும் என
> நினைக்கிறார்கள்.*
>
> *உண்மையான விளக்கம்*
>
> *அதாவது ஊரார் பிள்ளையாகிய தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது, நல்ல
> பணிவிடை செய்து, *
>
> *மனம் நோகாமல் தேனும், பாலும், பழங்களும், உணவும் கொடுத்து ஊட்டி வளர்த்தால்,*
>
> * வயிற்றில் இருக்கும் தன் குழந்தை தானே வளரும் என்பதை உணர்த்தும்
> பழமொழியாகும்.*
>
> *6.சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்*
>
> *இந்தப் பழமொழியின் உண்மையான விளக்கத்தை வாரியார் அவர்கள், *
>
> *குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால்
> கருப்பையில் குழந்தை உருவாகும் என்று கூறுகிறார்.*
>
> *7.பந்திக்கு முந்து படைக்கு பிந்து*
>
> *வீரம் விளைந்த பூமி என்று போற்றப்படும் நமது பூமியில் வீரர்களை படைக்கு
> பிந்து என்று கூறியிருக்க மாட்டார்கள். *
>
> *பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவு
> பரிமாற வேண்டும். *
>
> *விருந்து படைக்கிறவர்கள், விருந்தினர்கள் சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிட
> வேண்டும் என்பதே இதன் உண்மையான அர்த்தம்.*
>
> * இதுவே பேச்சுவழக்கில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது.*
>
> *8. குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம்.*
>
> *நம்முடைய தகுதிக்கும், வசதிக்கும் தகுந்தது தான் கிடைக்கும் என்ற
> அர்த்தத்தில் இந்த பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது. *
>
> *அதென்ன குருவிக்கு தக்கன ராமேஸ்வரம், குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன
> சம்பந்தம்.*
>
> * குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி.*
>
> * ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும்
> என்பதே இதன் அர்த்தம். *
>
> *இதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று
> கூறப்படுகிறது.*
>
> *9.சோழியன் குடுமி சும்மா ஆடாது!*
>
> *சோழியன் என்பது பிராமண குலத்தில் ஒரு பிரிவு.*
>
> * பொதுவாக பிராமணர்கள் தலைக்குப் பின்பக்கம் அடர்த்தியாக குடுமி
> வைத்திருப்பர். *
>
> *ஆனால் சோழியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் மலையாள நம்பூதிரிகளைப் போல
> தலையின் முன்பக்கத்தில் முடியும் வண்ணம் முன் குடுமி வைத்திருப்பார்கள்.*
>
> * சோழியர்களின் குடுமி தலையின் முன்பக்கத்திலேயே அடர்த்தியாக
> முடியப்பட்டாலும் அது சும்மாட்டுக்கு இணையாக ஆக முடியாது. *
>
> *அதாவது சும்மாடு என்பது சுமை தூக்குபவர்கள் தலையில் துணியைச் சுருட்டி
> வசதிக்காக வைத்துக் கொள்வது.*
>
> * முன்குடுமி எவ்வளவு கட்டையாக இருந்தாலும் சும்மாடாகாது.*
>
> * அவர்களும் சுமை தூக்கும் போது சும்மாடு வைக்கத்தான் வேண்டும். *
>
> *சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பது தான் உண்மையான பழமொழி. *
>
> *இதுவே தற்போது சோழியன் குடுமி சும்மா ஆடாது என உச்சரிக்கப்படுகிறது.*
>
> *10.கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்*
>
> *பைரவரின் வாகனமாக நாயைப் பார்க்கும் போது, அதை இறைவனின் அம்சமாக நினைத்து
> வணங்க வேண்டும். *
>
> *நாயின் வடிவத்தில் இருக்கும் கற்சிலையை பார்க்கும் போது அதை நாய் என்று
> நினைத்தால் நாயாகவும்,*
>
> * வெறும் கல் என்று நினைத்தால் கல்லாகவே தெரியும். *
>
> *ஒரு பொருளின் அல்**லது ஒரு விஷயத்தின் அழகும் பெருமையும் காண்பவர்களின்
> பார்வையைப் பொருத்தே உள்ளது என்பதே இதன் உண்மையான அர்த்தம். *
>
> *ஆனால் இப்போது நாயைக் கண்டால் கல்லைக் கொண்டு எறிய வேண்டும் என்பது போல்
> இந்தப் பழமொழி அமைந்து விட்டது.*
>
> *11. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்!*
>
> *தென்னை மரத்தில் தேள் கொட்டினால் தென்னைக்குத் தானே நெறி கட்ட வேண்டும்?*
>
> * பனைமரத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கிறீர்களா. *
>
> *இந்தப் பழமொழியை அப்படியே படித்தால் அர்த்தம் சரியாக இருக்காது. *
>
> *எங்கோ ஒரு செயல் நடந்தால், அதன் விளைவு வேறு எங்கோ தெரியும் என்றுதான்
> நமக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. *
>
> *ஆனால் இதன் உள்ளர்த்தம் வேறு. தென்னை மரத்தில் ஏறுபவர்கள் பூச்சிக்கடிகளால்
> பாதிப்பு வராமலிருக்க ஒருவிதமான எண்ணெய் அல்லது சாந்தை உடலில் பூசிக்கொண்டு
> மரமேறுவார்கள்.*
>
> * அப்படி ஏறும்போது மரத்தில் இருக்கும் தேள் கொட்டினால், அவர்களுக்கு அந்த
> எண்ணெயின் மருத்துவ குணத்தால் வலி தெரியாது!*
>
> * ஆனால் தேளின் விஷம் தோலினுள் ஊடுருவி இருந்தால், சிறிது நேரத்துக்குப்
> பிறகு கொட்டிய இடத்தில் நெறிகட்டிக் கொள்ளும். *
>
> *அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மற்றொரு மரத்தில் ஏறும்போது தான் அதன்
> உண்மையான வலி தெரியும்.*
>
> * அதன் பின் மருத்துவ சிகிச்சை எடுப்பர்.*
>
> * தென்னை மரத்தில் ஏறும் போது தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏறும் போது
> நெறிகட்டும் என்ற உண்மையான பழமொழியே இப்போது தென்னை மரத்தில் தேள் கொட்டினால்
> பனை மரத்தில் நெறிகட்டும் என்று கூறப்படுகிறது.*
>
> *12. கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்.*
>
> *              இந்தப் பழமொழியைப் படிக்கும் போது ஒரு பெண் தன் கணவனை
> கல்லுக்கும், புல்லுக்கும் ஒப்பிடுவது போல் உள்ளது.*
>
> * ஆனால் கள்வன் ஆனாலும் கணவன்; புலையன் (தீயவன்) ஆனாலும் புருஷன் என்பதுதான்
> உண்மையான பழமொழி.*
>
> * தனக்கு வாய்த்த கணவன், தீயபழக்கங்கள் மற்றும் தீயசேர்க்கையினால்
> கள்வனாகவும், தீயவனாகவும் இருந்தாலும் அவனை ஒதுக்கிவிடாமல் தன் அன்பினால்
> அவனைத் திருத்த வேண்டும் என்று அறிவுரை கூறுவதே இந்தப் பழமொழி.*
>
> * பெண்ணுக்கு பெருமை சேர்ப்பது போல் உள்ள இந்தப் பழமொழியே நாளடைவில் இப்படி
> மாறிவிட்டது.*
>
> 13*. மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்*
>
> *ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. *
>
> *ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார்
> பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம். *
>
> *ஆனால் மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு
> உரம் என்பது தான் உண்மையான பழமொழி. *
>
> *விவசாயிகள் வீட்டில் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனை பேரும் தங்கள்
> விளைநிலத்தில் உழைக்கின்றனர்*
>
> *. இதில் ஆணுக்கு இணையாக பெண்கள் ஈடுபடும் போது வெளிமனிதர்களுக்குக்
> கொடுக்கும் கூலி மிச்சமாகிறது.*
>
> * அதோடு ஒற்றுமையின் விளைவாக உழைப்பினவ பலன் பெருகுகிறது.*
>
> * மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால், அது மண்ணுக்கு உரம்.*
>
> * அதாவது அந்த வீட்டுத் தலைவனின் கரங்களைப் பலப்படுத்துவதின் மூலம் அவர்கள்
> சொந்த மண்ணுக்கு உரமாகும்.*
>
> * வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண் பொன்னாகும்.*
>
> * பொன்னுக்கே உரம் என்றார்கள். *
>
> *இவ்வளவு அருமையான கருத்துடைய பழமொழியே நாளடைவில் மாமியார்களைப் பற்றி ஒரு
> தவறான கருத்தைக் கூறுவது போல் அமைந்து விட்டது.*
>
> *14. ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா?*
>
> *பொதுவாக நகரத்தார் சிக்கனவாதிகள் என்று சொல்லப்படுவதுண்டு.*
>
> * பெரும்பாலும் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் தான் தான தர்மத்திலும்
> சிறந்து விளங்குகிறார்கள். *
>
> *இன்றைக்கு இருக்கும் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைகளில் கணிசமானவை
> நகரத்தார்களின் நன்கொடையில் விளைந்தது. *
>
> *அந்தக் காலத்திலிருந்தே பல வகையான தான, தர்மங்கள் செய்து வந்தனர்
> நகரத்தார்கள். *
>
> *தானங்களில் சிறந்தது பசு தானம். *
>
> *எந்த ஒரு மங்கல நிகழ்ச்சி நடந்தாலும், பசுவைத் தானம் கொடுப்பது தலையாய
> தானமாய்க் கருதப்படுகிறது. *
>
> *அதற்குக் காரணம் எந்தவித பலனும் எதிர்பாராமல் தன் பாலை மக்களுக்குக் கொடையாக
> வழங்குவது பசு. அத்தகைய கொடை தரும் பசுவைக் கொடையாகத் தருவது புண்ணியம்தானே!.*
>
> *ஆ-தானம் அதாவது பசு தானம் செய்வது வழக்கம். *
>
> *நகரத்தார்(செட்டியார்) எவரும் ஆ தானம் செய்யாது போனால், தன் வாழ்வில்
> செய்யத் தவறினால், அவன் தன் கடமையை ஆற்றாது போகிறான் என்பதாக வந்தது.*
>
> * ஆ தானம் செய்யாத செட்டி ஆற்றாது போகிறான் என்ற நகரத்தாரின் குணத்தைப்
> போற்றிய உண்மையான பழமொழி நாளடைவில் திரிந்து ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு
> போவானா என்று தவறுதலாக பேச்சுவழக்கில் கூறப்பட்டு வருகிறது.*
>
> *15.பெண் புத்தி பின் புத்தி*
>
> *நெற்றிக்கண் எனும் ஞானக்கண், முதன்முதலில் பார்வதிதேவிக்குத்தான்
> இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.*
>
> * பார்வதிதேவி சிவபெருமானுடன் சேர்ந்தபோது, தன் ஞானம் எனும் மூன்றாம் கண்ணை
> சிவபெருமானுக்குக் கொடுத்துவிட்டார் என்றும்,*
>
> * சிவபெருமான்  **பார்வதிதேவியின் நெற்றிக் கண்ணை நினைவுகூரும் வகையில்
> செந்நிறத் திலகமிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. *
>
> *இதன் விளைவாகவே இன்றும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு நெற்றியில் திலகம்
> இடப்படுகின்றது.*
>
> * அப்படி திலகம் பார்வதிதேவியின் நெற்றியில் இடப்படுவதற்கு முன், சிவபெருமான்
> தன்னை முழுமையாக பார்வதிதேவியின் கையில் கொடுத்துவிட்டார். *
>
> *இதை நினைவுகூறும் வகையில் இன்றும் திருமணங்களில் பெண்ணின் கையில்
> முக்கண்ணுடைய தேங்காய் கொடுக்கப்பட்டு திலகம் இடப்படுகின்றது. ஞானத்தை புத்தி
> என்றும் கூறுவர். *
>
> *ஞானமாகிய புத்தியை சிவபெருமானுக்கு பார்வதிதேவி தன் மூன்றாம் கண்ணாக அன்பின்
> வழியாகக் கொடுத்து,*
>
> * அவரின் பின்னால் சக்தியாகத் தாங்கி நிற்கின்றாள். *
>
> *அக்னி எனும் ஞானத்தை சிவபெருமானுக்குக் கொடுத்து அவரின் பின்னால் இருந்து
> புத்தியாக - சக்தியாக இருந்து செயல்படுகின்றார். *
>
> *இதுவே பெண்புத்தி பின்புத்தி என்று சொல்லப்படுகின்றது,*
>
> * பெண் சகோதரியாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும், சக்தியைக் கொடுத்துப்
> பாதுகாக்கின்றாள். *
>
> *பெண் எனும் சகோதரி, முருகன் கை வேல் போன்று காப்பவள், *
>
> *மனைவி எனும் பெண் ஆனந்தம், கருணை, அன்பு எனும் நித்யானந்த நிலைக்கு நம்மை
> வழி நடத்துபவள்.*
>
> *16. பசி வந்திட பத்தும் பறந்து போகும்: *
>
> *அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை,
> மானம் ஆகிய பத்து குணங்களும்** பசி* என்று வந்து விட்டால் பறந்து போகும்
> என்பது உண்மை.
>
> * இந்தப் பத்தும் இளகியிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது
> மற்றொரு பழமொழி. *
>
> *அதை சித்த வைத்தியர்கள் பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும்
> சாப்பிடலாம் என மிளகின் பெருமைகளை விளக்கும் சொல்லாக மாற்றி விட்டனர்.*
> *------*
> * நன்றி *
>
> *வணக்கம் *
>
> *வெ. ஸ்ரீதரன் *
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/1899647014.700357.1686949131525%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/1899647014.700357.1686949131525%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqhKagJW3cCi4xqu8xhY3%2BtJJoMEQUkfdbpyrYswcdqnA%40mail.gmail.com.

Reply via email to