Wonderful.
Thanks
N Sekar

On Mon, Jun 19, 2023, 9:41 AM Venkatachalam Subramanian <
[email protected]> wrote:

> நடவாவிக் கிணறு,,,,,,,,,,,,,,
> அய்யங்கார் குளம் என்றழைக்கப்படும் தாத்தாச்சாரியார் வெட்டிய குளமும்,
> சஞ்சீவிராயர் கோவில் எனும் வடக்கு நோக்கிய அனுமன் கோவிலும் அமைந்துள்ள
> இடத்தின் வட பகுதியில் சற்று தொலைவில் அமைந்துள்ள நீர் நிலை !
>
> சாதாரணமாக நீர் நிலை என்றால்,,,,,?
> சுற்றிலும் கரைகள் இருக்கும் !
> கரையினைச் சுற்ரி தண்ணீர் தேங்கி நிற்கும்,,,
>
> இது அதன் அளவினைப் பொறுத்து
> குளம்
> ஏரி
> ஊருணி
> பொய்கை
> மடு
> கேணி
> மோட்டை
> அள்ளல்
> கிணறு
> துரவு
> தடாகம்
> வாவி
> ஓடை
> அளக்கர்
> அசம்பு
> அள்ளல்
> அகழி
> அயம்
> ஆழிக்கிணறு
> இலஞ்சி
> கயம்
> கழி
> சுனை
> மடு
> குட்டை
> கூவல்
> தருவை ,,,,,, என நீளும்,,,
>
> இது மட்டும் தானா ?
> தமிழ்* நிகண்டு* காட்டும் சொற்கள் இன்னொரு பக்கம் அணி வகுக்கிறது,,,,
> *இலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை,
> பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம்,
> மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை,
> கயம், பல்வலம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம்.*
>
> இத்தனையும்,,, தாண்டி நடவாவிக்கிணறு என்றால்,,,,?
> என்னவென்று விளக்கம் சொல்ல,,,,?
>
> ‘’செறுவும் வாவியும், மயங்கி, நீர் அற்று,’’ என்று கரிகால மன்னனைப் பாடிய
> உருத்திரங்கண்ணனார் தன் *பட்டினப்பாலையில்*,,,, வாவி  என்றொரு சொல்லினைச்
> சொல்கிறார்,,,
>
> இதையெல்லாம்,,,விடுத்து,,,
> நடவாவிக் கிணறு என்றால்,,,,,?
>
> நீரற்று வறண்ட காலத்திலும்,,,
> நடை பயணம் செய்கின்ற மக்களுக்காக,,,,,
> தன் குடிநீர் தேவையினைத் தீர்க்க,,,
> தாகசாந்தி செய்ய,,,
> தண்ணீர் பந்தலைப் போல,,,,,
> அன்று இப்பகுதியினை அரசாண்ட மன்னனின், நிலப்பிரபுவின் தாராள குணம்,,, இந்த
> நடவாவிக் கிணறாக உருப்பெற்றது என்றே நினைக்கிறேன்.
>
> சாதாரணமாக,,,,
> கிணறு என்றால்,,, சட்டென்று கண்னில் படும்,,, !
> ஆனால்,,,
> இதுவோ,,,?
>
> சுற்றிலும்,,,
> ஆள் அரவமற்றுக் கிடக்கிற பகுதியில்,,,,
>
> இந்த நீர் நிலையின் தொடக்கத்தில்,,
> இருபுறமும்,,,யாழிகள் அணிவகுக்க,,,
> யாழித்தூண்களின் மேல் இருபுறமும், யானைகள் நீர்ச் சொரிய நடுவே திருமகள் !
>
> வெற்றியின் அடையாளமாக,,,
> மங்கலத்தின் அடையாளமாக,,,
> கஜலட்சுமி வீற்றிருக்க,,,
> அவளை வியந்தபடியே,,,,
> வணங்கியபடியே அந்த தோரண வாயிலைக் கடந்தால்,,, ஒரு பத்தடி நீளத்தில்
> சமதளப்பரப்பு,,,
>
> சட்டென்று மண் நோக்கிய,,,
> பாதாளம் நோக்கியபடிச் செல்லும் படிக்கட்டுகள்,,,,
>
> அந்தப் படிக்கட்டுகளின் இருபுறம் கனத்த கற்சுவர்கள்,,,
> கற்சுவர்களைப் பிடித்தபடியே படிக்கட்டுகளில் இறங்க,,,,
>
> சட்டென்று  சுற்றிலும்  எட்டடி அகல நடைபாதையுடன் பன்னிரு கால் மண்டபம்,,, !
>
> பன்னிருகால் மண்டபத்தின் தூண்களில் வைணவச் சிற்பங்கள் !
> அதன் நடுவே தெள்ளிய தண்ணீர்,,, !
>
> ஒரு தண்ணீர் கிணற்றுக்கா ? இத்தனைப் பாதுகாப்பு,,,, ?
> என்ற எண்ணம் எழமாலில்லை,,,
> ஆனால்,,,
> நான் சென்றிருந்த நேரம் கோடைக்காலம்,,, என்பதால்,, இப்படித்தான்
> காட்சியளித்தது !
>
> இதுவே மழைக்காலம் என்றால்,,,,?
> தரைப்பரப்பு வரை தண்ணீர் அலையடித்துக் கொண்டிருக்கும்....
>
> திருக்கச்சி எனும்
> நகரங்களில் சிறந்த காஞ்சி மாநகரில்,,
> இத்தகைய நடவாவிக் கிணறு  நான்கு உண்டு என்கிறது,,
> நூலொன்றும்,சான்றோர்களும்....
>
> இக்கிணற்றினைப் பெருமைப்படுத்தும் விதமாக,,,
> சித்திரை முழு நிலா நாளன்று காஞ்சி தேவராசப் பெருமாள் இந்த நடவாவிக்
> கிணற்றுக்கு எழுந்தருளுகிறார்...
>
> அவர் வரும் வேளையில்,,,
> நடவாவிக் கிணற்றின் உள்ளிருக்கும் பன்னிருகால் மண்டபத்தில் அமர்ந்து
> திருமஞ்சனம் சார்த்திக் கொள்கிறார்..
>
> அந்நேரத்தில்,,,
> அந்த உற்சவத்திற்காக,,,,
> நீர் நிரம்பி இருக்கும்  அந்த கிணற்றிலுள்ள நீர் இறைக்கப்பட்டு பன்னிருகால்
> மண்டபம் சுத்தம் செய்விக்கப்படுகிறது,,,
>
>
> இன்று மின்மோட்டார் மூலமாக தண்ணீர் இறைக்கப்பட்டாலும்,,,
> அன்று நீர் இறைப்பதற்கான கமலைத் தூண்கள்,,
> அதிலும்,,கல்லினால் அமைக்கபட்ட கமலைத் தூண்கள் இப்பொழுதும்,,, ஒரு நீண்ட
> நெடிய பண்பாட்டிற்கு சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது,,, !
>
>
> வாய்ப்பிருப்போர்,,,
> ஒருமுறை இந்த நடவாவிக் கிணற்றினையும் கண்டு வாருங்கள்.
> பார்த்தும்! கேட்டும்!.....
>
> முனைவர் ஸ்ரீமதி ஸ்ரீவித்யா.சு
> M.A;B.Ed;M.Phil;P.h.D;
> இந்து மேல்நிலைப்பள்ளி ,இந்திரா நகர் ,அடையாறு ,சென்னை 20.
> தமிழ்த்துறை.
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtcXBrv56n2Wz39dwncgs1wr_f-T9XJJQ%2BKqH2N8Enj2A%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtcXBrv56n2Wz39dwncgs1wr_f-T9XJJQ%2BKqH2N8Enj2A%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZdJRzCuDeEioOjdjFpzXii8vV4%2BMHDRxgzw2XjhamytSw%40mail.gmail.com.
  • [no subject] Venkatachalam Subramanian
    • Re: Narayanaswamy Sekar

Reply via email to