வேலுண்டு ...வினையில்லை...
.தம் முன் நின்ற அந்த இளைஞனை ஏறிட்டுப் பார்த்தார் தமது பங்களாவின் முன்
தோட்டத்தில் அமர்ந்து இருந்த அந்த பெருஞ் செல்வந்தர்.. நின்றவனுக்கு வயது
குறைவாக இருந்தாலும ஆள் பார்ப்பதற்கு ஒன்றும் திட காத்திர மானவனாகவோ அல்லது
சுறுசுறுப்பான ஆளாகவோத் தெரியவில்லை.
அவன் பவ்யமாக ஒரு கடிதம் எடுத்து அவரிடம் கொடுத்தான்.அதை வாங்கிப் பார்த்தவர்
முகம் உடனே பிரகாசமானது.அவருக்கு மிகவும் வேண்டியவர் அதாவது யாரால் அவர் இந்த
உயர்ந்த நிலைக்கு வந்தாரோ அவர் எழுதிய கடிதம். அந்த இளைஞனுக்கு ஒரு நல்ல வேலை
கொடுத்து நல்வழிப் படுத்த சொல்லி இருந்தது அந்தக் கடிதத்தில்.
"தம்பி..உன் பேரு...?"
"வெள்ளையன்ங்க.."
" என்ன வேலை செய்வ...?"
"எனக்கு எந்த வேலையும் தெரியாது அய்யா..."
"கார் ஒட்டுவியா..?"
" சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது அய்யா.."
"சரி எதுவும் கணக்கு வழக்கு பார்ப்பியா...?"
"அய்யா ... அந்த கணக்குக்கு பயந்துதான் எட்டாங் கிளாசுக்கு மேல நான்
படிக்கல..."
" சரி சங்கீதம்...அல்லது ஓவியம் வரையறது... சிலம்பு ஆட்டம்..அப்படி ஏதாவது கலை
பயிற்சி இருக்கா...?"
"அய்யய்ய.. அதைப்போய் யார் கத்துக்குவா...?"
"சரி தம்பி...போய்ட்டு போவுது...ஏதும் கெட்ட ப்பழக்கம் இருக்கா..?"
அவன் பேசாமல் தலையை மட்டும் மெதுவாக ஆட்டினான்.உண்டா அல்லது இல்லையா என்று
தெளிவடைய முடியாத சைகை மொழி அது.
அந்தப் பெரியவர் அவனைப் பார்த்தார்.அந்த கடிதத்தை ப்பார்த்தார். "நாளையில்
இருந்து வேலைக்கு வா...தோட்டம் தாண்டி இருக்கிற கோயில சுத்தம் பண்ற வேலை
பாரு...உள்ளே போய் கணக்கப் பிள்ளை கிட்ட நான் சொன்னதா சொல்லி ஆயிரம் ரூபா பணம்
வங்கிட்டுப்போ..."என்றார்.ஒரு கும்பிடு போட்டுவிட்டு ப்போனான் அந்த இளைஞன்.
நம்ப முடியவில்லை , இல்லையா...ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள ..நாம்
அனைவருமே அந்த இளைஞனைப் போன்றவர்தாம்...நம்முடைய அறிவு , திறமை , ஒழுக்கம் ,
வீரம் ,கலை அத்தனையும் நாம் நாமே வரையரைத்துக் கொண்டு இருக்கும் ஒரு எல்லையை
வைத்துக் கொண்டு நம்மை நாமே எடை போட்டுக் கொள்கிறோம்.
இந்த பிரபஞ்சத்தில் ஒரு புள்ளி போல இருக்கும் இந்த பூமிப்பந்தின் ஒரு
ஜீவராசியான நாம் ஒவ்வொருவராய் தனியேப் போய் அந்தப் பரம்பொருள் முன் நின்று அது
கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்லி விட முடியுமா... அருணகிரிநாதர்
பழனிமலை த் திருப்புகழ் பாடலை சிந்திப்போம்.
திடம்இலி , சற்குணம் இலி ,
நல் திறம் இலி,
அற்புதம் ஆனசெயல் இலி ,
மெய்த் தவம் இலி , நல் செபம் இலி சொர்க்கமும் ஈதே
இடம் இலி , கைக் கொடை இலி , சொற்கு இயல்பு இலி, நல் தமிழ்பாட,
இருபதம் உற்று இருவினை அற்று, இயல்கதியைப் பெறவேணும்.
கெடு மதி உற்றிடும் அசுரக் கிளை மடியப் பொரும்வேலா!
கிரண குறைப் பிறை,அறுகு, அக்கு, இதழ் மலர் கொக்கு இறகோடே,
படர்சடையில் புனை, நடனப் பரமர் தமக்கு ஒருபாலா!
பலவயலில் தரள நிறைப்
பழநிமலைப் பெருமாளே.
அருணகிரிநாதர் பழனிமலை முருகனின் முன் நின்று விண்ணப்பிக்கிறார். அதற்கு
முருகன் வரிசையாக கேள்விகள் கேட்க , இவரோ ...
1.திடம்இலி ,
2.சற்குணம் இலி ,
3.நல் திறம் இலி,
4.அற்புதம் ஆனசெயல் இலி ,
5.மெய்த் தவம் இலி ,
6.நல் செபம் இலி
7.சொர்க்கமும் ஈதே இடம் இலி ,
8.கைக் கொடை இலி ,
9.நல் தமிழ்பாட சொற்கு இயல்பு இலி,
இலி என்றால் இல்லை எனப் பொருள்..கிட்டத்தட்ட அந்த இளைஞன் மாதிரி ஒன்பது
கேள்விகளுக்கும் இல்லை...பலம் இல்லை , குணம் இல்லை , திறமை இல்லை , அற்புதம்
இல்லை , தவம் தெரியாது.., ஜெபமும் தெரியாது , வாரி வழங்கும் ஈகையும் கிடையாது
, நன்றாகத் தமிழில
பாடவும் தெரியாது..
இத்தனையும் தெரியாது ..இல்லை என்று சொல்லி விட்டு என்ன கேட்கிறார் பாருங்கள்..
"தேவரீருடைய இரண்டு சரணார விந்தங்களை அடைந்து, நல்வினை தீவினை என்கின்ற
இரண்டையும் நீங்கி மீண்டும் பிறவா வரமான , முத்தி வீட்டைத் தந்தருளல்
வேண்டும்."
பிறவா வரம் கேட்க தேவைப்படும் ஒன்பதும் இல்லையாம்..ஆனால் ஒரே ஒரு
கோரிக்கை..வீடுபேறு.கேட்டது யாரிடம் முருகனிடம்...அவரிடம் ஒரு
சிபாரிசுக்கடிதம் வேறு கொடுக்கிறார்.
அறுகம்புல்லையும் , உருத்திராக்க மணியினையும், ஒளி பொருந்திய,
இளம் பிறைச் சந்திரனையும், இதழ்களையுடைய மலர்களையும், பறவையின்
இறகுகளுடன்,விரிந்த சடைமுடியில் தரித்துக் கொண்டிருப்பவரும் பஞ்சகிருத்ய
ஆனந்தத் தாண்டவம் புரிபவரும் ஆகிய,
சிவபெருமானின் அன்புப் புதல்வரே என முதலில் கூப்பிடுவிட்டு அதாவது சிவத்தின்
புகழ் கூறி அதை தம் முதல் சிபாரிசாக வைக்கிறார். பின்,
தீயவை செய்தற்கே தூண்டுகின்ற புத்தியை உடையவர்களாகிய, அரக்கர் வம்சமே
அழியுமாறு,போர் புரிந்த வேற்படையை உடையவரே! இது இரண்டாவது சிபாரிசு , இறுதியாக
,
ஒப்பற்ற புலவரே! குறைபாடின்றி பலனைத் தரும் வயல்களில்,
முத்துக்கள் நிறைந்துள்ள,பழநிமலையின் மீது எழுந்தருளியுள்ள பெருமையின்
மிக்கவரே!
என தங்கத்தமிழில் சிவத்தையும் திரு முருகனையும் புகழ்ந்து தமக்கு வீடு பேறு
கேட்கிறார் , அருணகிரிநாதர்.
அவருக்கா கேட்கிறார்....?நமக்குத்தான்...நாம் அனைவருமே நம்மைத் தகுதிப்
படுத்திக் கொள்ள முடியும்...நமது வினைகள் ஒழிய அவனை விட்டால் நமக்கு வேறு வழி
ஏது..?
'....பாழான என்மனங் குவிய ஒரு தந்திரம்
பண்ணுவது உனக்கு அருமையோ
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரி பூரண ஆனந்தமே.'
எனத் தாயுமானவர் பாடுவார். சிவம் நினைத்து விட்டால் நமது பாழான மனம்
சிவத்தின்பால் சேர்ந்து விடச் செய்வதற்கு எத்தனை நொடிப் பொழுது ஆகும்..?
நம்மிடையே நிறைய குறைபாடுகள் இருக்கிறது... உண்மைதான்...ஆனால் நம்மிடம்
சிவத்தின் சிபாரிசு கடிதம் எனும் அருளாளர்கள் அருளிய திருமுறைகள்
இருக்கிறது.அப்புறம் முருகன் எப்படி நமக்குத் தர மாட்டேன் என்று சொல்லி
விடுவார்...?
_ கி.காமராஜ். I don't know who is he but .......KR IRS 21 6 23
(forgive me for the bad translation by machine)
Needed...no verb...
.The rich man who was sitting in the garden in front of his bungalow
looked up at the young man standing in front of him.. Although the man was
young, he did not look like a solid or active person.
He solemnly took a letter and gave it to him. The person's face immediately
brightened when he saw it. It was a letter written by the person he wanted
the most, the person by whom he had reached this high position. The letter
said to give the young man a good job and guide him in the right direction.
"Brother..what is your name...?"
"White people.."
"What to do...?"
"I don't know any work sir..."
"Is the car stuck..?"
"I don't even know how to ride a bicycle sir.."
"Okay, nothing, Accounts Payable...?"
"Sir...I didn't study above class eight because I was afraid of that
account..."
"Well, singing...or painting...playing the cymbal...is there any art
training like that...?"
"Ayyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy?
"Alright brother...let's go...do you have any bad habits..?"
He just shook his head slowly without speaking. It was a sign language that
was not clear whether it was or not.
The elder looked at him and looked at the letter. "Come to work from
tomorrow...look at the cleaning work in the temple across the garden...go
inside and tell the accountant that I told you to and deposit a thousand
rupees..." he said. The young man bowed and left.
Can't believe it, can't you...but think about it..we are all like that
young man...our knowledge, skills, morals, valor, art are all weighed
against ourselves by keeping a boundary that we define ourselves.
As a living sign of this planet which is like a dot in this universe, can
we go alone and stand in front of that object and answer the questions it
asks... Let us think of the song of Arunagirinath Palanimalai Thirupukal.
Firmness, goodness,
Good talent,
Wonderful work,
Meith tawam ili, nal sepam ili sorkum ethe
Place, hand gift, speech, good Tamil language,
You have to take care of the situation and get the nature.
Do you want to kill the evil branch of the monster!
Kirana krebu prai, aruku, aku, petal flower crane feather,
Patarsadai is a legend in dance and dance!
Ground masses in many fields
Palanimalai Perumal.
Arunagirinath Palanimalai stands in front of Murugan and applies. To that
Murugan asked questions one after another, who ...
1. Solidity,
2. Sarkunam Ili,
3. Good talent,
4. The wonderful work of the mouse,
5. Meith Tavam Ili,
6. Nal Sepam Ili
7. Heaven is the place of Eden,
8. The gift of hand,
9. The nature of good Tamil speech,
Ili means no..almost like that young man has no nine questions...no
strength, no character, no skill, no miracle, no knowledge of penance.., no
knowledge of prayer, no gift of wisdom, well done in tamil
Can't even sing..
I don't know that much..Look what he asks after saying no..
"Achieving the two refuges of God, eliminating the two evils of
goodness and giving birth to the pearl house again."
There are no nine required to ask for a boon..but only one
request..Vidupuru.Murugan from whom he asked...He gives a letter of
recommendation to him.
The saw blade and the bell, the light matched,
Wearing the young crescent moon, flowers with petals, bird's feathers in
loose plaited hair and enjoying Panchakritya Ananda Thandavam,
He first calls out as Lord Shiva's beloved son, i.e. praises Shiva and puts
it as his first recommendation. then,
He who has the intelligence that prompts him to do evil, the one who
fought for the destruction of the demon dynasty! This is the second
recommendation, and finally,
Incomparable poet! In fields yielding unblemished fruit,
On the pearly mountain, the glorious One who has arisen!
As Arunagirinath praises Shiva and Lord Murugan in Thangathamil and asks
for a house for him.
Avaruka asks….?It is for us…we all can qualify ourselves…if we leave him
except our actions then what other option do we have..?
'
What you love to do
The parking lot is filled with a single delete
Perfect bliss.'
My mother sings. If we think of Shiva, how many seconds will it take for
our depraved mind to be joined by Shiva..?
There are many defects among us...it is true...but we have the virtues
blessed by the benefactors called Shiva's letter of recommendation.Then how
can Murugan say that he will not give us...?
_ K. Kamaraj.
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor4YNtgphsmFxg8Z8Q-BQN3sc8MF4UVSxn%2BjgV%2BFHP6_g%40mail.gmail.com.