சுஜாதா பற்றி இப்பொழுது அதிகம் பேசப்படுகிறது. தவறில்லை. எழுத்துக்கள்
கவரலாம். எழுதினவன் ஒன்றே மேலானவன் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
சுஜாதா (எனக்குத் தெரிந்தவர் என்ற போதிலும் ) எழுதியது"பொருள் புதிதல்ல;
நவீனம் என்பதற்கு சாட்சி சொந்தமாகத் தோன்றியதல்ல; வியாபாரம் நன்கு நடந்தகால்
பெரிய மனிதர் எனக் கூறுவது எவ்வளவு சரியோ, அவ்வளவே, விற்பனை  பொருட்களும்.
ரங்கநாயகி ஒரு காலத்தில் நவீன எழுத்தாளர் தான் ;வடுவூர் துரைசாமியை விட,
சுஜாதா திடுக்கிடும் கதைகள் செய்யவில்லை; கல்கியின் நவீனத்தை, சுஜாதாவால் தொட
முடியவில்லை. சாண்டில்யனின் ரசவாதங்கள் சுஜாதா செய்ய முடியவில்லை. அவர்
காலத்திய சிறந்த எழுத்தாளர்கள் அநுத்தமா முதலியோர் வாழ்வில் தாக்கத்தை
ஏற்படுத்தியவர்கள் தி ஜ   ரா , ல ச ரா போன்றோர் எழுத்துக்கள், கணையாழியின்
தாக்கம் இவைகளை படிக்காத ஒரு கூட்டம், எழுதிவிட, ஒன்றுமே அவரை பற்றி அறியாத,
ஒருவர் ஸ்லாகிதத்தை மற்றொருவர் உண்மை என நம்பும், கூட்டம் அவர் ஒருவர்தான், என
மிகைப் படுத்துதல் சால சிறந்தது அல்ல.
       இதை விட பகவத் கீதையை வரிவடிவாக்கி, மரணத்தின் த(ன்)ண்மை  கூறிய
கண்ணதாசன்   தேவலை. மரணத்தைப் பற்றி முன்னோர்கள் கூறியதை    நான்
வழிமொழிகிறேன் எனாக் கூறாதது, பொருட்குற்றம்
      கண்ணதாசன் கவிதை கர்ணன் படத்தில் நான் ஏற்கனவே எழுதியுள்ளேன்.
வாழ்க்கையின் நிறம் எல்லோருக்கும் ஒன்று போலவே தோன்றி முடிவதில்லை. என்
தாத்தா மரணத்தின் முதல் நாள், ரசித்து ருசித்து, 84 வயதில், சாப்பிட்டார் .
வயது ஒரு காரணி; இள  வயதிலும் முனகுவோம்; முதிவர்களாகவும் தான்;     வேதம்
 கூறியதை படிக்காதவர்கள், சுஜாதா தன் இறுதி தத்துவமாக கூறியதாக உயர்வு நவிற்சி
அணியில் சொல்வது  பேதைமை. கி ராஜாராம்  27 6 23

On Tue, 27 Jun 2023 at 04:48, Chittanandam V R <[email protected]>
wrote:

>
> *மரணம் பற்றி சுஜாதா*
>
> *மனித உயிர் என்பது ஓர் வற்றாத அதிசயம். அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால்
> ஏறக்குறைய கடவுளுக்கு *
> *அருகில் கொண்டு சென்றுவிடும். உயிரின் ரகசியத்தை அறிய விஞ்ஞானிகளும்
> வேதாந்திகளும் செய்யும் *
> *முயற்சிகள்...........   **இறப்பு என்பது முற்றுபுள்ளியா?*
>
> *செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? நான் செத்த பின்
> நானாக இருந்தால்தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை, என் புத்தகங்கள், என் லேசான
> முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக **இருக்க முடியும்.
> செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு
> படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை.*
>
> *நான் நானாகவே தொடர வேண்டும் . அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும்.
> உறவினர்கள், என் வாசகர்கள் *
> *வேண்டும் . கட்டுரை அனுப்பினால் அதை பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ்
> வேண்டும் . அதெல்லாம் *
> *இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன, முடிந்தால் என்ன? எனவே சாவு
> என்பது கொஞ்சம் யோசித்து *
> *பார்த்தால் நம் நினைவுகளின் அழிவுதான்.*
>
> *அப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப்
> பள்ளி. வி ஸீஸ் டு எக்ஸிஸ்ட் **(we cease to exist). எபிக்யுரஸ் (Epicurus)
> சொன்னதை மறுபடி படி”*
> *“Death is nothing to us since so long as we exist death is not with us
> but when death comes, we do not exist”.*
>
> *“மனைவி, மக்கள், பழைய பள்ளி, தெரிந்த பாட்டுகள், திறமைகள், கவிதைகள்,
> கடிதங்கள், காதல்கள் எல்லாம் *
> *மறந்துபோய் சாப்பிடுவது மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்காக
> மட்டும் ஞாபகம் இருந்து, *
> *நாளடைவில் சாப்பிடுவதற்கு வாயசைப்பதையும் மறந்துவிடுவோமாம். உயிருடன்
> இருப்பது என்பது இதுதான். *
> *உயிர் என்பது மூச்சுக் காற்றல்ல; ஞாபகம்தான்” —*
>
> *யாருமே சாவதில்லை’. இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது. ‘அவள் இறந்ததாக
> நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் ? அவள் குரல் என் பேத்தியிடம் இருக்கிறது.
> அவள் சாயல் உன்னிடம் இருக்கிறது. குணம், பிடிவாதங்கள், அழகு, டயபடிஸ்
> எல்லாவற்றையும் அங்கங்கே பாகம் பிரித்துக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறாள்.
> அவள் நினைவுகள் நம் எல்லோரிடமும் உள்ளது’ என்று சொல்வார்.*
>
> *சிதம்பரத்தில் காலமாகிவிட்ட தன் அண்ணன் டாக்டர் கிருஷ்ணமாச்சாரியின் உடலை
> எரிக்கும்போது…. (நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள் புத்தகத்திலிருந்து)*
>
> *“இவன் பிறப்பதுமில்லை. எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து
> பின்னர் இல்லாது *
> *போவதுமில்லை. இவன் பிறப்பற்றான். அனவரதன். பழையோன், உடம்பு கொல்லப்படுகையில்
> இவன் *
> *கொல்லப்படான்” என்று பாரதி மொழி பெயர்த்த கீதை வாக்கியம்தான் எனக்கு ஆறுதல்.*
>
> *மரணம் தொடர்பாக சுஜாதா ஆயத்தமாகவே இருந்தார் எனச்சொல்ல வேண்டும்।
> “இப்போதெல்லாம் ஹிந்துவில் **முதலில் obituary தான் பார்க்கிறேன்.  இறந்தவர்
> என்னைவிட இளையவர் என்றால் பரவாயில்லை நாம் இன்னும் இருக்கிறோம் என்று
> சந்தோஷப்பட்டுகொள்கிறேன். என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று 
> **யோசனை
> வருகிறது” – இதை அவரின் ‘கற்றதும் பெற்றதும்’ என்ற நூலில்
> குறிப்பிட்டிருந்தார்.*
>
> *அவர் ஒரு விஞ்ஞான எழுத்தாளரென்பதால் அவரிடம் திரும்ப திரும்ப மரணத்தை
> வெல்வது பற்றி பல்வேறு கேள்வி பதில்களில் பல்வேறு விதங்களில்
> கேட்கப்பட்டதுண்டு. அதற்கு அவரின் பதில்:*
>
> *“மரணிக்காமல் வாழ்ந்துகொண்டே இருந்தால் வாழ்க்கையின் சுவாரஸ்யம் போய்விடும்”*
>
> *அவரது எழுத்துக்கு என்றும் மரணமில்லை.*
>
> *. ... பத்ரிநாராயணன் *
>
> ***************************************************************
>
> *சித்தானந்தம் *
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor_QEZN5X8cTP3bNC2QP0ak0SNcD9tMNWGfOFP27TrjYA%40mail.gmail.com.

Reply via email to