Yesterday I sent 4 parts on sandhya where I said ladies had the rights to perform sandhya rights. Sita did sandya worship as men do as eeb in sundara kandam chap 14 verse 49:
संध्या काल मनाः श्यामा ध्रुवम् एष्यति जानकी | नदीम् च इमाम् शिव जलाम् संध्या अर्थे वर वर्णिनी || ५-१४-४९ sandhya kala mana: shyama druvam eshyathi janaki/ nadeem cha imam shiva jalaam sandhya arthe vara varninee// 49. shyaamaa = the ever youthful; varavarNinii = one with the best complexion; jaanakii = Seetha; samdhyaa kaala manaaH = interested in the rites of Sandhya time; dhruvam eSyati = will definitely come; imaam nadiim = to this river; shubha jalaam = with the auspicious water; sandhyaarthe = for Sandhya rite. "The ever youthful one with the best complexion, Seetha interested in the rites of Sandhya time will definitely come to this river with the auspicious water for Sandhya rite." KR IRS 26 7 23 On Tue, 25 Jul 2023 at 23:16, Rama <[email protected]> wrote: > ஶ்ரீராமபிரான் வனவாசம் இருந்த காலத்தில் ஒரு நாள் ஸ்ரார்த்தினம் வந்தது. > வழக்கம் போல் லக்ஷ்மணன் பிட்சை எடுக்க அருகிலுள்ள கிராமத்திற்கு > சென்றிருந்தார். நேரமானபடியால், இராமர் இளவலைத்தேடி கிளம்பினார். ஸ்ரார்த்த > காலம் வந்தது, சீதை தவித்தாள். > > ஸரார்த்த காலம் தாண்டி விட்டால், பிதுர்க்கள் சபிப்பார்களே என்று > வருந்தினாள். தாபசம், இங்குதி ஆகிய பழங்களை பறித்து அக்னியில் வேகவைத்தாள். > அதை பிசைந்து பிண்டம் தயாரித்தாள். அப்போது அவள் முன் தேஜோ மயமாக பிதுர்கள் > தோன்றினர். "சீதே, பிண்டத்தை எங்களுக்கு சமர்ப்பிக்கலாம், மகிழ்ச்சி யோடு > ஏற்றுக்கொள்கிறோம்" என்றார் மாமனார் தசரதர். > > "உங்கள் பிள்ளைகள் சமர்ப்பிக்க வேண்டியதை நான் செய்யலாமா?" என்று சீதை > தயங்கினாள். *ஸ்ரார்த்த காலம் தவறி அசுர காலம் வந்துவிடும், சாட்சி வைத்துகொடு > தப்பில்லை* என்றார் தசரதர். > > சரி என்று சீதையும் *பல்குனி நதி, பசு, ஒரு ப்ராஹ்மணன், துளசி ச்செடி மற்றும் > அஷயவட ஆலமரம்* ஆகியவற்றை சாட்சி வைத்துக்கொண்டு, அவையெல்லாம் > ஒப்புக்கொண்டதும், *உங்களை சாட்சிவைத்து பிதுர்க்களுக்கு பிண்டம் தருகிறேன். > என் கணவரிடம் இந்த நிகழ்வை சொல்ல வேண்டும்* என்று கேட்டுக் கொண்டு பிண்டம் > கொடுத்தாள். பிதுர்க்கள் பிண்டத்தை மகிழ்ச்சி யோடு ஏற்று மறைந்தனர். > > சற்று நேரத்தில் ராம_லக்ஷ்மணர்கள் தானியங்களோடு வந்தனர். சீதை நடந்தைக் > கூறினாள். ராமர் திகைப்புடன் சாஸ்த்ரோக்தமாக ஸ்ரார்த்தம் நடத்தும் எங்கள் > முன் வராத பிதுர்கள், உன் முன்தோன்றி நேரில் பிண்டம் வாங்கினர் என்பது கற்பனை > என்றார். > > நாதா! நான் உண்மையைத் தான் சொல்கிறேன் - பல்குனி நதி, பசு, பிராஹ்மணன், > துளசிச்செடி மற்றும் அஷயவட ஆலமரம் ஆகிய வை சாட்சிகள், விசாரித்து கொள்ளும் > என்றாள். > > உடனே ராமர், சீதை சொல்வது உண்மையா என்று அவைகளை கேட்க, அஷயவட ஆலமரம் தவிர > மற்றவர்கள் 'நாங்கள் அறியோம்' என்றன. *கடவுளான ராமர் வருவதற்குள் சீதை பிதுர் > கார்யம் முடித்ததற்கு தாங்கள் உடந்தையாக இருந்தோம் என்று ராமர் கோபிப்பாரோ > எனபயந்தன* > > ராமரும் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, சமையலை முடி, நாங்கள் நீராடி வருகிறோம் > என்று கூறிச் சென்றனர். சீதை தன்னை கணவர் நம்பாததை எண்ணி துக்கத்தோடு சமையல் > செய்தாள். > > ராமர் நீராடி வந்து சங்கல்பம் செய்யும் சமயம் வானில் இருந்து அசரீரி > ஒலித்தது.. > > *ராமா! ஏன் இரண்டாம் முறையாக திதி கொடுக்க எங்களை அழைக்கிறாய்? சீதை கையால் > பிண்டம் வாங்கி நாங்கள் திருப்தியுள்ளோம்* என்றது அசரீரி. அதன்பின் ராமரும் > சமாதானமானார். > > ஆனால் கோபமே வராத சீதா, அந்த சமயம் கோபப்பட்டு... > *பல்குனி நதியே! உன்னிடம் எந்தக் காலத்தும் வெள்ளம் தோன்றாது, தண்ணீர் > வற்றியே காணப்படும்* என்றும் > > *பசுவே! உன் முகத்தில் வாசம் செய்த நான், இனி உன் பின்பக்கத்துக்கு > போய்விடுவேன்* என்றும் > > *இந்த கயாவில் எங்கும் துளசி வளராது போகட்டும்* என்றும் > > *கயா பிராம்ஹணர்கள் தங்கள் வித்தையை விற்று வயறு வளர்க்கும் அவலம் > உண்டாகட்டும். மேலும் அவர்கள் எவ்வளவு இருந்தாலும் திருப்தி இல்லாமலே > இருப்பர்* என்றும் > > பொய்சாட்சி கூறிய நால்வருக்கும் சீதை சாபமிட்டாள்! > > ஆலமரம் தனக்கு சாட்சியாக நின்றதற்கு மகிழ்ந்து, *யுக யுகாந்திரங்கள் நீடூழி > வாழ வாழ்த்தி, யுக முடிவில் பிரளயத்தின்போது, அஷயவட இலையிலேயே பரமாத்மா > குழந்தை வடிவில் தோன்றுவார்! அவரது திருவடிகளில் உலகங்கள் அனைத்தும் > லயமாகும்!* என்று அருளினாள். மேலும், *கயாவில் ஸ்ரார்த்தம் செய்பவர்கள் > அஷயவடத்திலும் பிண்டங்களை அர்ப்பணம் செய்வார்கள், அப்போது தான் கயாவில் > ஸ்ரார்த்தம் செய்வதன் பலன் கிட்டும்* என்றும் ஆசிர்வதித்தாள்! > > இந்த சாபத்தினால் தான் கயாவில் துளசி வளர்வதே கிடையாது. மேலும் பல்குனி > நதியும் எப்போதும் வற்றியே இருக்கும். > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/iyer123/CAKaWjRkUmhqfWatUdvhZbd1hgdCMKNXUZx4WAr9SLbTKRbrFEw%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/iyer123/CAKaWjRkUmhqfWatUdvhZbd1hgdCMKNXUZx4WAr9SLbTKRbrFEw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZormiq7-TKHVf9ueT1wLqHA_LgWjwgXPKNWV2pi0nXQv5Q%40mail.gmail.com.
