விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன, வண்ண முலை கொண்டு, இடை வணங்க வரு போழ்தத்து, - எண் அருளி, ஏழைமை துடைத்து, எழு மெய்ஞ்ஞானக் கண் அருள்செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான்.
பொருள் வானில் இருந்து மண் உயிர்களுக்கு அருள ஒரு மென்மையான அமுதம் போல வண்ண மயமான மார்பகங்களை கொண்டு, அதன் பாரத்தால் இடை துவண்டு விழ அவள் வரும் போது மனதில் எண்ணி, அருள் செய்த அறியாமையை துடைத்து எழுகின்ற மெய் ஞான கண்களை அருள் பொழிகின்ற கண்களைக் கொண்ட இராமன் தன்னுடைய இரு கண்களால் எதிரில் வரக் கண்டான். KR ராமனைப் பற்றிய கருத்து இங்கு கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. கம்பன் சொன்னது சரிதான். நல்லவர்கள் நல்லதை மட்டுமே பார்க்கிறார்கள். ஞானம் ஊட்டும் அன்னை வானத்திலிருந்து இறங்கி வருவதை ராமர் பார்க்கிறார். அன்னையின் அருளால், அன்னையின் அமிர்தத்தால் அறியாமை துடைக்கப்படுகிறது. புலனுணர்வு மாறுபாடு ராமனால் நன்கு சித்தரிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டுள்ளது. ராமர் சூர்ப்பனகையை ஊட்டி தாயாக மட்டுமே பார்க்கிறார். சூர்ப்பனகை ராமனை காதலியாக பார்க்கிறாள். லக்ஷ்மணன் சூர்ப்பனகையை தன் தாய்க்கு போட்டியாக பார்க்கிறான். கதாபாத்திரங்கள் பார்க்கும் படி வசனங்களை உருவாக்கினார் கம்பன். The perception of Rama is being questioned here. Kamban said the right thing. Good people see only good things. Rama sees the wisdom feeding mother who is willing to bless descending down from the sky. The ignorance is being wiped out by the blessings, by the amirtham of a mother. Perception variation is well depicted and defined by Rama. Rama sees surpanaka only as a feeder mother. Surpanaka sees Rama as a lover. Lakshmana sees surpanaka as a competitor to his mother. Kamban made out the verses as the characters would see it. KR IRS 22 8 23 On Mon, 21 Aug 2023 at 19:37, Chittanandam V R <[email protected]> wrote: > > > கம்ப இராமாயணம் - சூர்ப்பணகை (14) > > *தமிழ்நாயகம் * > > சூர்ப்பணகை இராமன் வியத்தல் > > > தேவ மங்கை வடிவம் கொண்டு சூர்ப்பணகை வருகிறாள். > > சீதையைத் தவிர வேறு யாரையும் சிந்தையாலும் தொடேன் என்ற உறுதி பூண்டவன் > இராமன். சூர்ப்பணகை வரும் கொலுசு, மேகலை சப்தத்தை கேட்டு முகத்தை வேறு பக்கம் > திருப்பி இருப்பான்...அதுதானே நாம் எதிர்பார்ப்பது? > > நடந்தது என்ன? > > "வானத்தில் இருந்து வந்த அமுதம் போல, அழகிய மார்பகங்களையும், அதன் பாரம் > தாங்காமல் துவளும் இடையையும் தன் இரு கண்களால் கண்டான் " > > என்கிறான் கம்பன். > > > பாடல்: > > விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன, > வண்ண முலை கொண்டு, இடை வணங்க வரு போழ்தத்து, - > எண் அருளி, ஏழைமை துடைத்து, எழு மெய்ஞ்ஞானக் > கண் அருள்செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான். > > பொருள் > > வானில் இருந்து மண் உயிர்களுக்கு அருள ஒரு மென்மையான அமுதம் போல > > வண்ண மயமான மார்பகங்களை கொண்டு, அதன் பாரத்தால் இடை துவண்டு விழ > > அவள் வரும் போது மனதில் எண்ணி, அருள் செய்த அறியாமையை துடைத்து > > எழுகின்ற மெய் ஞான கண்களை அருள் பொழிகின்ற கண்களைக் கொண்ட இராமன் > > தன்னுடைய இரு கண்களால் எதிரில் வரக் கண்டான். > > > இங்கே ஏழைமை என்பது பொருள் செல்வம் இல்லாத ஏழ்மை அல்ல, அறிவுச் செல்வம் > இல்லாத ஏழ்மை. அறிவு இல்லாவிட்டால் என்ன, பொருள் இருந்தால் போதும் என்று > நினைக்கிற உலகம். > > வயிற்றுப் பசி தெரிகிறது. உடல் பசி தெரிகிறது. அறிவுப் பசி தெரிவதில்லை. > பலருக்கு அந்தப் பசி எடுப்பதே இல்லை. > > வயிற்றில் பசி இல்லை என்றால், மருத்துவரிடம் சென்று "டாக்டர் எனக்கு இரண்டு > மூணு நாளா சரியா பசியே இல்லை. ஏதாவது மருந்து கொடுங்கள்" என்று கேட்டு வாங்கி > மருந்து சாப்பிட்டு, அதன் மூலம் பசியைத் தூண்டி, உணவு உண்கிறார்கள். > > யாராவது, எங்காவது போய் "எனக்கு கடந்த 30 அல்லது 40 வருடமாக அறிவுப் பசியே > இல்லை. ஒண்ணுமே படிப்பது இல்லை. படிக்கணும்னு தோணவே மாட்டேங்குது. புத்தகத்தை > கண்டாலே வெறுப்பா இருக்கு. அதுக்கு ஏதாவது மருந்து இருக்கா...நல்லா படிக்க > ஏதாவது மருந்து இருந்தா கொடுங்க " என்று கேட்டது உண்டா ? > > அறிவுச் செல்வம் இல்லாத ஏழ்மையை போக்குபவன் இராமன். நமக்கு அப்படி ஒரு > செல்வம் இருப்பதே தெரியாது. அறிவு இல்லை என்பதே நமக்குத் தெரியாது. அப்புறம் > அல்லவா அதை அடைய முயற்சி செய்வது. அறியாமை என்ற ஏழ்மையில் மூழ்கிக் > கிடக்கிறோம். அதை நீக்கி நமக்கு அறிவு என்ற செல்வத்தை அருளுபவன் அவன். ஞானக் > கண்ணைத் தருபவன். > > "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி > சிந்தை மகிழ சிவ புராணம் தன்னை > முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான் " > > என்கிறார் மணிவாசகப் பெருந்தகை. > > அவன் அருள் இருந்தால்தான் அவன் தாளை வணங்க முடியும். > > நாம் கேட்காமலேயே அவன் நமக்குத் தருகிறான். நாம் கூப்பிடாமலேயே நம் உள்ளத்தை > கவர்ந்து கொள்கிறான். > > "உள்ளம் கவர் கள்வன்" என்பார் திருஞானசம்பந்தர். > > > தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் > காடுடைய சுட லைப் பொடி பூசி என் 'உள்ளங்கவர் கள்வன்' > ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள் செய்த > பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே. > > > அப்படிப்பட்ட இராமன், சீதை குடிசைக்கு உள்ளே இருக்கிறாள்...இங்கே எதிரில் > வரும் பெண்ணை பார்க்கிறான்... > > அவள் கண்ணை மட்டும் பார்த்தான் என்று சொல்லி இருந்தால் பெருமையாக > இருந்திருக்கும். > > அவள் மார்பைப் பார்க்கிறான். > > தேவலோக அமுதம் போல் இருக்கிறதாம். > > அதன் எடையால், அவள் இடை தாங்கவில்லையாம். > > இது ஒரு சரியான பார்வையா என்ற முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன். > > *- தமிழ்நாயகம் * > > ****************************************** > > *சித்தானந்தம் * > > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoro7U6r%2BRBA18h2kq7L-BrX5L80DYkPN%2BfsKqwm_PkE2A%40mail.gmail.com.
