That man from Salem for enforcing plantain leaves is great. *வையத்துள்
வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்* *தெய்வத்துள் வைக்கப் படும்.* *(௫௰ - 50)*

   - உலகத்துள் வாழும் நெறிப்படியே வாழ்பவன், வானகத்தே வாழும் தெய்வத்துள்
   ஒருவனாகக் கருதி நன்கு மதிக்கப்படுவான் (௫௰)
   - உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள
   தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான். One who leads a dharmic life here
   is GOD in the next world. KR IRS 4923


On Mon, 4 Sept 2023 at 15:24, 'venkat giri' via iyer123 <
[email protected]> wrote:

> சமீபத்த்தில் சேலத்தில் சாலையோர கடையொன்றில் சாப்பிட சென்றிருந்தேன்.
> சாப்பாடு தயாராக இருந்தது, மதியநேரம் என்பதால் சாம்பார் சாதம், தயிர்சாதம்,
> தக்காளி சாதம், பிரிஞ்சி, சாப்பாடு என எல்லாம் மனக்க மனக்க இருந்தது.
> கடைக்காரரிடம் சாம்பார்சாதம் கொடுக்கும்படி கேட்டேன், அவரோ சிறிதுநேரம்
> காத்திருக்கும்படி சொன்னார், என்ன விஷயம் என கேட்டதற்கு, வாழையிலை
> காலியாகிவிட்டது கடையில் வேலைசெய்பவர் வாழையிலை வாங்கிவர சென்றுள்ளதாகவும்,
> அவர் வந்தவுடன் கொடுக்கிறேன் என்றார். சாப்பிட வந்தவர்களில் ஒருவர் கேட்டார்
> "இப்பொழுதுதான் பிளாஸ்டிக் கவர்கள் வந்துருக்கே அதிலே பரிமாறலாமே என
> கேட்டார்".
> கடைக்காரர் சிரித்துக்கொண்டே சொன்னார் "இன்னைக்கு நல்ல சாப்பாடு சாப்பிட்டாலே
> பல வியாதி வருது இதுல பிளாஸ்டிக் கவர்ல சாப்பாட்டை சூடா வச்சு சாப்பிட்ட என்ன
> வியாதி வரும் தெரியுங்களா கேன்சர் கூட வரலான்னு சொன்னார், நான் படிக்காதவன்
> சார் என்ன வியாதி வரும் வராதுன்னு தெரியாது, பிளாஸ்டிக்ல சாப்பாடை சூடா வச்சி
> சாப்புட்றது உடம்புக்கு கெடுதின்னு தெரியும் , வாழையிலையில் சாப்பிட்டா
> நல்லதுன்னு தெரியும், என் கடையில பெரிய பணக்காரன் சாப்பிடபோறதுமில்லை
> வியாதிவந்தா நல்ல ட்ரீட்மெண்ட் எடுத்த்துக்கறதுக்கு, சாதாரண ஆளுங்கதான்
> சாப்பிடவருவாங்க அவங்களுக்கு பெரியவியாதிவந்தா சமாளிக்க முடியாதுங்க, ஒரு
> ஆளுக்கு வாழையிலை 1 ரூபா செலவாகும், வாழையிலைக்கு பதிலா பிளாஸ்டிக் சீட் யூஸ்
> பன்னா மாசம் 200 லிருந்து 300 ரூபா மிச்சமாகும் இந்த பணத்தை வச்சு கோடிஸ்வரன்
> ஆகா முடியாது,
> சமையல்கூட முடிஞ்சளவுக்கு நல்ல பொருளை வச்சுத்தான் செய்யுறேன், வாழையிலை யூஸ்
> பன்றதாலே நான் போடுற குப்பைக்கூட மத்த ஜீவராசிக்கு சாப்பாடுதாங்க, மாடு வந்து
> வாழையிலையை சாப்ட்ரும் இடமும் க்ளீனாயிடும், இதுக்கும் மேல என் கடைல
> பெரும்பாலும் பேச்சுலர் பசங்க சாப்டுவாங்க, இவங்க பெரும்பாலும் சாப்பாடு
> வெளியிலதான் சாப்புடுவாங்க நம்ம கடைல சாப்பிடும்போதாவது நல்ல சாப்பாடு
> சாப்பிடட்டுன்னு பிளாஸ்டிக் யூஸ் பன்றதில்லை. என்ன்னால சாப்பாட்ல
> வேஷத்தை(பிளாஸ்டிக்) கலக்க மனசுவரலாங்கன்னு சொல்லிட்டு கடைசியில் வாழையிலையில்
> வச்சுதான் சாப்படு கொடுத்தார்.அவர் கடைல பார்சல் சாப்பாடு கூட வாழ எலைலதான்
> குடுக்குறாரு. இன்னைக்கு உணவு தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் கூட சாப்பாடு
> கெடாம இருப்பதற்கு என்ன வழின்னு யோசிக்கிறாங்களே தவிர, சாப்புட்றவங்க நலனை
> கண்டுக்கிறதில்ல. ஆனா சாதாரணமா படிக்காத ஒருத்தர் இவ்வளவு யோசிப்பாருன்னு
> நெனச்சுக்கூட பாக்கல . காசு சம்பாதிக்க என்னவேணுன்னாலும் செய்யலான்னு மனசாட்சி
> இல்லாம சாப்பாட்டு பொருள்ல கலப்படம் செய்யுற இந்த காலத்துல, இப்படியும்
> ஒருத்தர்னு ஆச்சர்யமா இருந்தது.
>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/1509678795.2795603.1693821213371%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/1509678795.2795603.1693821213371%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZookX1RSROoEEM5Xx3mjXrDprRBdxfOkjPu6UK%2BG%2BMSaNw%40mail.gmail.com.

Reply via email to