On Thu, Sep 7, 2023 at 8:54 PM N Sekar <[email protected]> wrote:

>
> We live amongst that Kowdhari - read below the story.
>
> N Sekar
>
> FWD:
>
> sharing
> சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான். அவர் பெரிய
> வலையால் மூடப்பட்ட கூடையில் நிறைய கௌதாரி பறவைகள் வைத்திருந்தார்! பக்கத்தில்
> ஒரு சிறிய கூடையில் ஒரே ஒரு கௌதாரி இருந்தது!
>
> ஒரு வாடிக்கையாளர் கேட்டார் கௌதாரி எவ்வளவு?
>
> "400 ரூபாய்..!"
>
> வாடிக்கையாளர் சிறிய கூடைய பார்த்து ஏன் இந்த கௌதாரி தனி கூடையில் உள்ளது
> மற்றும் இதன் விலை என்ன என கேட்டார்.
> வியாபாரி, "நான் அதை விற்க விரும்பவில்லை..." என்றார்.
>
> ஆனால் வாடிக்கையாளர் வலியுறுத்த, இதற்கு ரூ.5000 என சொல்லுகிறார் வியாபாரி
> ..!
>
> வாடிக்கையாளர் ஆச்சரியத்துடன் கேட்டார்,
> "ஏன் இவ்வளவு விலை அதிகமாக இருக்கு, இதற்கு என்ன விசேஷ தன்மை உள்ளது..?"
>
> "உண்மையில் இது என் செல்லப்பிராணி மற்றும் இது மற்ற கௌதாரிகளை சிக்க வைக்கும்
> வேலை செய்கிறது ..!"
> "ஆம் இது கத்தும்போது, மற்ற பிற கௌதாரிகள் இது இருக்கும் இடத்தில் கொஞ்சமும்
> யோசிக்காமல் கூடி வருகின்றன, பின்னர் நான் அனைத்தையும் எளிதில் வலையில் சிக்க,
> நான் அனைத்தையும் பிடித்து கூண்டில் அடைத்து விடுகிறேன்..!" என்றான் வியாபாரி.
>
> அப்புறம் அது விரும்பும் உணவை இந்த கௌதாரிக்கு "டோஸாக" தருகிறேன், அது
> மகிழ்ச்சி அடைகிறது..!
> அதனால்தான் அதிக விலை..!" என்றான்.
>
> அந்த புத்திசாலி வாடிக்கையாளர் 5000 ரூபாயை கொடுத்து, சந்தை என்றும் பாராமல்
> கௌதாரியின் கழுத்தை முறுக்கினான்..!
>
> ஒருவர் கேட்டார்,
> ஏன் இப்படி செய்தாய் ..?
> அதற்கு அந்த வாடிக்கையாளர்....
>
> "தனது சொந்த சமுதாயத்தை, தனது சுய லாபத்திற்காக, தனது மக்களை ஏமாற்றி
> காட்டிக் கொடுக்கும் ஒரு துரோகிக்கு உலகத்தில் வாழ உரிமை இல்லை ..!" என்று
> கூறினார்.
>
> நம்மைச் சுற்றி ரூ .5000 விலையுள்ள பல கௌதாரிகள் உள்ளன..! அவர்களிடம்
> ஜாக்கிரதையாக நாம் தான் இருக்க வேண்டும்.
>
> இது கௌதாரிக்கான கதை இல்லை நமக்கனது.....
>
>
>
>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zd-nSZPG6GBBXpX4KCOKZhGrDeWL3W-6v5d_6TzRFJqTQ%40mail.gmail.com.

Reply via email to