I think Sujatha and Kamalakhassan had a kind of bent of mind that it is man made and God could have been there etc; so too here that sujatha mention "AAGI" appears as "AAKKI" IS A MISCHIEF. Akkalum azhithalum, "Tamulavakkalum" etc are seen in Tamil which render only a direct meaning as created by the Brahmam. I do not think Sujatha does not know it; so I think he wrote a mischief. KR IRS 14 9 23
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Wed, 13 Sept 2023 at 19:41 Subject: Fwd: Nammaalvar's Thiruviruththam by Sujatha To: *"நம்மாழ்வார் திருமாலின் திருவடியின் அம்சம் என்று நம்புவதும் உண்டு. அதனால் பெருமாள் சந்நிதிகளில் வணங்கும்போது வைக்கும் 'சடாரி'யைச் சடகோபம் என்று சொல்கிறார்கள்."* *நம்மாழ்வாரின் திருவிருத்தம் * *கட்டளைக் கலித்துறை என்னும் கடினமான யாப்பில் இந்தப் பாடல்கள் சங்க காலத்தின் அகத்துறைக் கருத்துகளை கடவுளுக்குப் பயன்படுத்திய முதல் முயற்சிகளுள் ஒன்று. **மற்றது திருமங்கை ஆழ்வார். * *ஆழ்வார்களின் காலத்தில் பக்தி பெருக்கெடுத்தோடினாலும் அகத்துறைக் கருத்துகளின் அழகுணர்ச்சியைக் கைவிடாமலிருப்பதற்கு அவர்கள் செய்த சாமர்த்தியமான மாற்றம் இது என்று சொல்லலாம். தலைவனைத் தெய்வமாக்கிவிட்டால் **அகத்துறைக் கருத்துகளில் உள்ள விரசங்கள் தெய்வீகம் பெற்று மன்னிக்கப்படுகின்றன. அவைகளுக்கு மரியாதை கிடைத்துவிடுகிறது. * *முதல் பாட்டில் ஒரு விண்ணப்பம் செய்கிறார். * *"பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா அழுக்கும் **அழுக்குடம்பும் * *இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை அளிப்பான் * *எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்! இமையோர் தலைவா!* *மெய்ந்நின்று கேட்டருளாய் அடியோன் செய்யும் விண்ணப்பமே." (நா.தி.பி. 2478)* *"பொய்யான அறிவும் தவறான ஒழுக்கங்களும் அழுக்கான உடம்பும் போன்ற குணங்கள் இனி எமக்கு வேண்டாமல் உயிர் தருவாய். எப்போதும் நின்று பிறக்காமல் பிறந்த வானவர் தலைவனே, நான் செய்யும் இந்த விண்ணப்பத்தைக் கேள்!" * *அகத்துறைப் பாடல்கள் உள்ள திருவிருத்தத்தில் அவ்வப்போது ஆழ்வாரின் பிரம்மாண்டமான தெய்வத் கருத்துகள் ஒளிரும்.* *"வணங்கும் துறைகள் பலபலவாக்கி, மதிவிகற்பால் * *பிணங்கும் சமயம் பலபலவாக்கி, அவைஅவைதோறும்* *அணங்கும் பலபலவாக்கி நின்மூர்த்தி பரப்பி வைத்தாய் * *இணங்கும் நின்னோரையில்லாய்! நின்கண் வேட்கை எழுவிப்பனே!" (நா.தி.பி. 2573)* *வணங்கும் துறைகள் பலவற்றையும், எதிர்க் கருத்துகளால் வேறுபடும் (பிணங்கும்) சமயங்கள் பலவற்றையும் அவைகள் உண்டாக்கும் தெய்வங்கள் பலவற்றையும் நீயே ஆக்கி உன் உருவத்தையே பரவ வைத்திருக்கிறாய். உனக்கு இணை (இணங்கு) யாரும் இல்லை. உன்மேல் எனக்கு வேட்கை எழுகிறது.* *இந்தப் பாடலில் 'ஆகி' என்பதற்குப் பதில் 'ஆக்கி' என்று சொல்லியிருப்பது சிந்திக்கவைக்கிறது.* *எல்லாத் தெய்வங்களிலும் செய்தவன், விரவியவன் திருமாலே என்னும்போது யாரைத் தொழுதாலும் திருமாலையே போய்ச் சேர்ந்துவிடுகிறது. * *- சுஜாதா * ******************************************* *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooK3QX%3DpDgep_LOOjU%2BCOBL_uaN3WFQ9ZTaPGYKFi3SJg%40mail.gmail.com.
