கம்ப ராமாயண சம்பாஷனைக் கூற்று சுவையாக உள்ளது . எனினும் இது வால்மீகி
உரையல்ல; கம்பனின் அனுமானம்; வால்மீகி இலக்குவனைப் பார்த்துக்கொள்ள
சொல்லிவிட்டு சென்று விடுகிறான்; சூர்ப்பனகை இலக்குவனை அடையவாவது
முற்படுகையில் மூக்கறுப்பட்டாள். எனவே கமபனின் கூற்றுப்படி இராமன் இவ்வாறு
கூறியதை காலம் கடத்துதல், மனம் நோகாதவாறு மறுத்தல் எனக் கொள்ளலாமே தவிர, ஏன்
இவ்வாறு கூறுகிறார் எனத் தனக்கு வேண்டியவாறு  வளைக்க ஒன்றுமில்லை. இது எனது
கருத்து K Rajaram  IRS 23 9 23

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Sat, 23 Sept 2023 at 03:45
Subject: Fwd: Tamilnayagam - Kambaramayanam - Soorppanaga (26)
To:



கம்ப இராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் (26)
தமிழ்நாயகம்
என் உயிர் காண்பென்
தன்னை மணந்து கொள்ளும்படி இராமனிடம் சூர்ப்பணகை கூறுகிறாள். "என்னால் உன்னை
மணந்து கொள்ள முடியாது" என்று கூறாமல், "நான் எப்படி உன்னை மணந்து கொள்ள
முடியும். நானோ அரச வம்சத்தில் வந்தவன், நீயோ வேதியர் குலத்தில் வந்தவள்.
நமக்குள் எப்படி தொடர்பு ஏற்பட முடியும் " என்று கேட்கிறான்.

அதற்கு என்ன அர்த்தம் ?

ஒரு வேளை அவளும் அரச குலமாக இருந்தால், பிரச்சனை இல்லை என்பதுதானே முடிவாக
இருக்க முடியும்?

அதை அறிந்து கொண்டு, சூர்ப்பணகை சொல்லுகிறாள்

"ஓ..இப்ப அதுதான் பிரச்சனையா? என் தந்தை வேதியர் குலத்தில் பிறந்தவர். என்
தாய் சாலகங்கடர் என்ற அரச வம்சத்தை சேர்ந்தவள். எனவே, நான் அரச குலத்தில்
வந்தவள்தான். என்னை ஏற்றுக் கொள். இல்லை என்றால் உயிரை விட்டு விடுவேன்"
என்கிறாள்.


பாடல்




*'ஆரண மறையோன் எந்தை; அருந்ததிக் கற்பின் எம் மோய், தாரணி புரந்த
சாலகடங்கட மன்னன் தையல்; போர் அணி பொலம் கொள் வேலாய்!  பொருந்தலை இகழ்தற்கு
ஒத்த காரணம் இதுவே ஆயின், என் உயிர் காண்பென்' என்றாள்.*

பொருள்


"என் தந்தை மறை ஓதும் குலத்தில் தோன்றிய அந்தணர்;
என் தாய் அருந்ததி போல் கற்பில் உயர்ந்தவள்;
உலகத்தை ஆண்ட சாலகடங்கட என்ற வம்சத்தில் வந்த
மன்னனின் மகள் அவள்;
போர் செய்வதையே ஒரு அணிகலன் போல
கொண்ட வேலை உடையவனே!
நமக்குள் பொருத்தம் இல்லை என்று
இழந்ததற்கு சரியான காரணம் இதுதான் என்றால்,
என் உயிரை விட்டு விடுவேன்" என்றாள்.

இராமனுக்கு குல வேறுபாடு உண்டா ?

குகனோடு ஐவரானோம் என்று குகனை தம்பியாக ஏற்றுக் கொண்டான்.

குன்று சூழ்வான் மகனோடு அறுவரானோம் என்று சுக்ரீவனை தம்பியாக ஏற்றுக் கொண்டான்.

காதல் ஐய உன்னோடும் எழுவரானோம் என்று அரக்கர் குலத்தில் பிறந்த  வீடணனை
தம்பியாக ஏற்றுக் கொண்டான்.




*குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனேம்;
எம்முழை அன்பின் வந்த அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்; புகல்
அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை.*

குகனை தம்பி என்று சொன்னால், ஏதோ ஒப்புக்கு சொன்னான், ஒரு உபசார வார்த்தை
 என்றுகூட எடுத்துக் கொள்ளலாம். இராமன் ஒரு படி மேலே போகிறான்.

"*இந் நன்னுதல் அவள் நின் கேள்*" என்று சொல்கிறான். இந்த சீதை இருக்கிறாளே
உனக்கு கொழுந்தியாள் என்று அதை மேலும்  உறுதிப்படுத்துகிறான்.

தயரதனுக்கு இராமன் நேரடியாக இறுதிக் கடன் செய்யவில்லை. ஜடாயு என்ற பறவைக்கு, மகன்
இடத்தில் இருந்து இறுதிக் கடன் செய்தான்.

அப்படிப்பட்ட இராமனுக்கு குல வேறுபாடு இருக்குமா? சரி, அப்படியே இருந்தாலும்,
சூர்ப்பணகை அதற்கும் பதில் சொல்லி விட்டாள் . என் தாய் அரச குலத்தில்
பிறந்தவள். எனவே நானும் அரச குலம்தான் என்று.

இராமன் கூறிய ஒரே எதிர்ப்பும் இப்போது சரி செய்யப்பட்டு விட்டது.

திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே?

செய்தானா?

- தமிழ்நாயகம்

********************************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorj2MgnWk-GivuJ442w2i_JaMzdO%2BQYLJL_YRrxYpKZFA%40mail.gmail.com.

Reply via email to