---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Thu, 19 Oct 2023 at 18:18 Subject: Fwd: Sujatha Birthday To:
As an aquaintance and known him for some yeARS as co-human I respect him; but as a reader what attracted so many (or less I do not know as i dont have any stat) make me only a better writer but not a writer in depth. Somerset Maugm wrote when reading only the character must speak and never the wrirter, because, where the writer is reminded and marked, the charactyer and the story ends its vaalue; one who is conducting the experiments is only a scientist. Crossing the nose reminds MGR; hands jesture and cigarette throw and catch only Rajnikant and so writers. After reading the story if you search for the name of the writer then it attracted you; if you know from the style who wrote that you wait for the results of the experiment. No hard facts KR IRS 19 10 23 > *இன்று சுஜாதா அவர்களின் பிறந்த தினம்.* > > *அவர் பற்றி 'எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது' > என்கிற நூலிலிருந்து கீழே: * > > *"சொல்லும் கதையில்/எழுத்தில் இருக்கும் ஆச்சரியங்கள், இரகசியங்கள், > வெளிச்சங்கள் என்கையில் சுஜாதா ஞாபகத்தில் வருகிறார். தமிழின் நவீன முகத்தை > மேலும் மேன்மைப்படுத்திய மகானுபாவர்களில் ஒருவர். ஒரு ஜெயகாந்தனோடும், > அசோகமித்திரனோடும் சம காலத்தில் ஒளிர்ந்தவர். பத்திரிகை எழுத்துலகின் சூப்பர் > ஸ்டார். அவரளவு தாக்கத்தை ஏற்படுத்திய முன்னோடிகள் (pioneer) யாருமில்லை. > எனக்கு (ம், என் மனைவிக்கும் மிகவும்) பிடித்த எழுத்தாளர். > புதுமைப்பித்தனுக்குப் பின் மனதின் பல பிராந்தியங்களை எழுதிப் பார்த்தவர். > அவரைப் பற்றி அசோகமித்திரன் ஒரு முறை 'இத்தனை திறமைகள் இருந்தும் அவருக்கு ஒரு > அலட்சியம்.... சமூகத்தின் மீது, வாழ்க்கையின் மீது, எழுத்தின் மீது..... ஏன் > தன் மீதே' என்று எழுதி அவரை 'ஹெமிங்வே'யுடன் ஒப்பிட்டிருந்தார்.* > > *கணையாழியின் கடைசிப் பக்கங்களிலிருந்து, நைலான் கயிறில் ஆரம்பித்து எவ்வளவு > கதைகள், கட்டுரைகள், எவ்வளவு நகைச்சுவை, சோகம் ... அடியில் ஒரு அலட்சியம் > கலந்த கோணல் சிரிப்பு!* > > *எவ்வளவு நூல்களைப் படித்தவர்? எவ்வளவு ரசிகர்கள்? அவரை குருவாய் வரித்த > எவ்வளவு எழுத்தாளர்கள், வாசகர்கள்? எழுத்தின் காரணமாகவும், பிராபல்யத்தின் > காரணமாகவும், வெற்றியின் காரணமாகவும், தமிழ் நாட்டிற்கே உரிய பிரத்யேகக் > காரணமாகவும் எத்தனை வசைகள்?* > > *அவர் இறந்த அன்று மாலைதான், அவர் உடல் நலம் இன்றி இருப்பதுகூட அறியாமல் > நானும் சுகாவும் பேசினோம்." சுஜாதாவிற்கு பொருத்தமில்லாத ஒரு * > *பாபுலாரிட்டி இருக்கிறது. ஆனால் பொருத்தமான பாப்புலாரிட்டி > மறுக்கப்படுகிறது. ஜெயமோகன் ஒருவர்தான் அவர் பற்றி சீரியஸ் தளங்களில் > எழுதுகிறார்." குரலெழும்பாத ஒரு நோஞ்சான் மனிதன் எழுத்துக்களால் வண்ணமயமாக > வாழ்ந்து மறைந்துவிட்டான்.* > > *அவர் மரணத்திற்கு அடுத்த வாரம் மரணத்தைப் பற்றி ஒரு ஆழமான, புன்னகையைத் > தருவிக்கிற, விஞ்ஞான, செட்டான சொற்களால் ஆன கட்டுரையோ, கதையோ ஆ.வியிலோ, > குமுதத்திலோ வந்தாலும் வரலாம் என்று எதிர்பார்த்தேன்.* > > *அவர் ஓரிடத்தில் கூறியிருந்தார்: "எனக்கு மறு பிறவியில் நம்பிக்கையில்லை. > அப்படி ஒன்று இருந்தால் இதே தமிழ் நாட்டில் இதே முதுகு வலியுடன் பிறக்க > வேண்டும். இதே போல் தமிழில் எழுத வேண்டும். அப்படியின்றி வேறு நாட்டில், வேறு > பாஷை பேசுமிடத்தில் பிறந்தால் அது வேறுபிறவி; மறு பிறவி அல்ல. நான் ஸ்விஸ் > நாட்டில் பிறந்தேன் என்றால் பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்."* > > *எழுத்தில் பல பரிசோதனைகளைச் செய்த ஸ்ரீரங்கத்து தேவதை !"* > > > *வ.ஸ்ரீநிவாசன் * > > ********************************************************** > > *சித்தானந்தம் * > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopnJOmUXXHGGQaXA-Pw2PMBdRFJ9F3xkydnwbDsoYd-Ag%40mail.gmail.com.
