அன்னார் தருவரேல் என்பது கம்பன் வார்த்தைகள்; வால்மீகி ராமாயணத்திற்கும், கம்பராமாயணத்திற்கும் உள்ள வேறுபாடு யாதெனின், வால்மீகி ராமனை மனிதனாகத்தான் எழுதினார்; கம்பன் தெய்வமாக பார்த்ததில், மனிதனும் தெய்வமும் இட மாருத் தோற்றப்பிழையை எய்தினார்கள். எனக்குப் பிடிக்கவில்லை என்று திருத்தமாக கூறி வெளியேற்றுவது ஒரு வகை எனில், மனம் நோகாதவாறு ,பிறகு நோக்கி கொள்ளலாம் என்ற முறையில், சமாதானமாக பேசி செல்ல வைப்பது மற்றொரு வகை. சாதாரண ராஜா தந்திரம். அது நடந்தால், இது நடக்கும் என கூறுதல் சந்தேகத்திற்கு உரியது. இங்கு கம்பன் ராமனை தெய்வமாக்கி விட்டான்; அது ராமனின் தோற்றத்தை மாற்றி காண்பிப்பது போல் தோற்ற பிழை அளிக்கிறது. K Rajaram IRS 21 10 23
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Fri, 20 Oct 2023 at 18:29 Subject: Fwd: Tamilnayagam - Kambaramayananm - Soorppanaga (29) To: கம்ப இராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் (29) *தமிழ்நாயகம் * அன்னார் தருவரேல் கொள்வேன் தன்னை மணந்து கொள்ளும்படி சூர்ப்பணகை இராமனிடம் வேண்டுகிறாள். இராமன் ஏதேதோ சொல்லி தட்டிக் கழிக்கப் பார்க்கிறான். அவன் மறுத்துச் சொல்லும் ஒவ்வொன்றிற்கும் சூர்ப்பணகை சரியான பதில் தருகிறாள். இறுதியில் இராமன் சொல்கிறான் "உனக்கு இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். ஒருவனோ உலகாளும் இராவணன். இன்னொருவனோ செல்வத்திற்கு அதிபதி குபேரன். இந்த இரண்டு பேரில் ஒருவர் வந்து உன்னை எனக்குத் தந்தால் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன். இல்லை என்றால் வேறு இடம் பார்" என்கிறான். இது இராம பக்தர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். இராமன் எப்படி இப்படிச் சொல்லலாம்? ஒருவேளை இராவணன் வந்து , "இந்தா என் தங்கையை ஏற்றுக் கொள்" என்று சொன்னால், இராமன் ஏற்றுக் கொள்வானா? அவன் சொன்ன சொல் தவறாதவனாயிற்றே ? இராவணனோ, குபேரனோ ஏன் சூர்ப்பணகையை இராமனுக்கு கட்டி வைக்க மாட்டார்கள்? சக்கரவர்த்தி திருமகன். நல்லவன். பாடல் *ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன், ஊங்கில் ஒருவனோ குபேரன், நின்னோடு உடன்பிறந்தவர்கள்; அன்னார் தருவரேல், கொள்வென்; அன்றேல், தமியை வேறு இடத்துச் சார; வெருவுவென்; நங்கை!' என்றான்;மீட்டு அவள் இனைய சொன்னாள்:* பொருள் "உன் அண்ணன்களில் ஒருவனோ மூன்று உலகிற்கும் சிறந்த ஒரு தலைவன்; உன்னிப்பாக கவனித்தால் மற்றொருவனோ குபேரன்; உன்னோடு உடன் பிறந்தவர்கள் அவர்கள் உன்னை எனக்குத் தந்தால் ஏற்றுக் கொள்வேன். இல்லை என்றால் (தமியை) பெண்ணே! வேறு இடத்தில் சேர நான் அஞ்சுவேன் நல்ல பெண்ணே!" என்றான். மீண்டும் சூர்ப்பணகை இதைச் சொன்னாள்: "நீயாக தனியா வந்து என்னை கல்யாணம் பண்ணிக் கொள் என்றால் என்னால் அது முடியாது. உன் அண்ணன்கள் வந்து உன்னை தாரை வார்த்துக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் " என்று வெளிப்படையாக சொல்கிறான். அப்படி சொன்னது சரியா? இராமனுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்ததா ? இருந்தால் தவறு ஒன்றும் இல்லை. முறைப்படி பெண் கொடுத்தால் ஏற்றுக் கொள்கிறேன் என்கிறான், அவள், அரக்கி என்று தெரிந்த பின்னும். "இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்" கொஞ்சம் பழுதுபடும். இருந்தாலும், தவறு ஒன்றும் இல்லை. இராமனின் தந்தை தயரதன் அறுபதினாயிரம் மனைவிகளை கொண்டவன். இராமன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்தால் பெரிய தவறு ஒன்றும் இல்லை. அப்படி ஒரு எண்ணம் இல்லை என்றால், இராமன் அப்படி சொல்லி இருக்கலாமா? கேள்வியை இராம பக்தர்களிடம் விட்டு விடுகிறேன். *- தமிழ்நாயகம் * ************************************************ *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop1kEZkKwEPOxog_bmXQhmoM6949uhj%2BF36J6EPawOt%3DQ%40mail.gmail.com.
