கடைசி வார்த்தைகள், உண்மையுரைத்தன; ராமன் ஒரு அரசன்; நம் வீட்டிற்கு யாரோ
ஒருவர் வருகை தந்து, இவற்றையெல்லாம் பெற்றுக் கொண்டு என்னை வாழ்த்துங்கள்
எனில், ௯௦% பொருளை வாங்கி
, துன்பதையும் வாங்குவர்;  விஸ்வாமித்திரர் மயங்கினதால், வேறொரு வாழ்க்கைப்
 பயணம் உதித்தது. ராமன் அவர் சீடன் அல்லவா? திருப்பி அனுப்பினால் மற்றொருவர்
வரலாம்; என்ன விஷயம் என்பது கூடத் தெரியாமல் போகலாம்; முக நக நட்பு நட்பன்று
எனில், அக நக, வரும் இன்னல் உரைப்பது கம்பனின் ராமன் கடமை அல்லவா? எனவே தான்,
மனம் நோக்காத வண்ணம், ராமன், சூர்ப்பனகையின் திருமணத்தால் வரும் இன்னல்களை
தான், இவ்வாறு மிகைப்பட ஹாஸ்யமாக கூறினார். இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்  கவர்ந்தற்று அன்றோ? கம்பன் வடிவமைத்தது நன்று. K RAJARAM
IRS 231023

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Mon, 23 Oct 2023 at 05:21
Subject: Fwd: Tamilnayagam - Kambaramayanam - Soorppanaga (30)
To:



கம்ப இராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் (30)

*தமிழ்நாயகம் *

வாள் எயிறு இலங்க நக்கான்

உன்னுடைய சகோதரர்கள் வந்து உன்னை எனக்குத் தந்தால் நான் உன்னை ஏற்றுக்
கொள்வேன் என்று இராமன் சூர்ப்பணகையிடம் சொன்னான் என்று பார்த்தோம்.

அதற்கு சூர்ப்பணகை சொல்கிறாள் "நாம் காந்தர்வ முறைப்படி திருமணம் செய்து
கொள்ளலாம். திருமணம் முடிந்த பின் என் சகோதரர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
அது மட்டும் அல்ல, நீ சொன்னபடி கேட்டு நடப்பார்கள் " என்று மேலும் பலவும்
கூறுகிறாள்.

அதைக் கேட்டு இராமன் ஒரு ஏளன சிரிப்பு சிரிக்கிறான்

"அரக்கர் அருளையும் பெற்றேன். உன்னால் பெரும் செல்வத்தையும் பெற்றேன். உன்னை
அடைந்ததால் வரும் இன்பங்களையும் பெற்றேன். இதனால் நான் பெற்ற இன்பங்கள் ஒன்றா
இரண்டா? அயோத்தி விட்டு வந்த பின், நான் செய்த தவத்தால் இவை எல்லாம் எனக்குக்
கிடைத்தன " என்று சொல்லி விட்டு, பற்கள் தெரியும் படி சிரித்தான்.

பாடல்





*''நிருதர்தம் அருளும் பெற்றேன்; நின் நலம் பெற்றேன்; நின்னோடு ஒருவ அருஞ்
செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன்; ஒன்றோ, திரு நகர் தீர்ந்த பின்னர்,
செய் தவம் பயந்தது?' என்னா, வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான்.*

பொருள்

அரக்கர்களின் அருளைப் பெற்றேன்; உன் நலம் பெற்றேன்உன்னோடு
நீங்காத அரிய செல்வத்தை எப்போதும் என்னுடன் இருக்கவும் பெற்றேன்
இது மட்டுமா, அயோத்தி விட்டு வந்த பின் நான் செய்த தவங்கள் என்ன?
வில்லை பிடித்த வடிவான தோள்களை உடைய இராமன்
ஒளி பொருந்திய பற்கள் வெளியே தெரியும்படி சிரித்தான்


கிண்டலின் உச்சம்.

சூர்ப்பணகையைப் பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சொல்லி இருக்கலாம்.
அவளை பார்த்து கிண்டல் செய்வது சரியா?

அந்த நேரத்தில் பர்ண சாலையில் இருந்து சீதை வெளியே வருகிறாள்.

என்ன நடந்திருக்கும்?

*- தமிழ்நாயகம் *

*************************************************


*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorVX8s16eSrUFMnHPFh-PB62yXc-2FTuAvZib-3i0gAFg%40mail.gmail.com.

Reply via email to