The individual has all the rights to have his personal opinion; but if he
is averse to something, he shall not write as Zakir Naik thinking he is
doing yeoman service. 1.  is the ezhunthu vaa perumale a nere story? 2 Do
bigwigs carry out greater things like adi seshan? Both are fallacy KR IRS 4
11 23

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Sat, 4 Nov 2023 at 07:39
Subject: Fwd: Poigaiyaalvar by Sujatha - Ungal Aadhiseshan
To:



உங்கள் ஆதிசேஷன் யார்?

மல்ட்டிபர்ப்பஸ் என்ற வார்த்தைக்கு 'பல்பயன்' அல்லது 'பல்திறன்' என்று தமிழில்
சொல்லலாம். மகாவிஷ்ணுவுக்கு அனந்தாழ்வான் என்று சொல்லப்படும் ஆதிசேஷன்
ஒரு மல்ட்டிபர்ப்பஸ் தொண்டர். இராமாயணத்தில் லக்ஷ்மணன் 'ராமனுக்கு நான்
எல்லாம் செய்வேன்' என்று சொன்னது மட்டுமன்றி புது மனைவியைப் பிரிந்து, கூடவே
காட்டுக்கு வந்து, காவல் காத்து, சீதையிடம் திட்டு வாங்கி, காடெல்லாம் அலைந்து
தேடி, சண்டை போட்டு, அசுரனின் அம்பில் ஏறக்குறைய இறந்து... லக்ஷ்மணனின்
சேவையை நாம்
எளிதில் மறக்க முடியாது.

லக்ஷ்மணனை ஆதிசேஷனின் அம்சம் என்றுகூட சொல்லுவார்கள். இந்த சிநேகிதப்
பாம்பு திருமாலுக்கு
என்னவெல்லாம் செய்கிறது. அவர் நடந்து செல்லும்போது குடையாகிறது. உட்காரும்போது
சிம்மாசனமாகிறது. சும்மா நின்றால் கால் செருப்பாகிறது. அவர் பாற்கடலில்
துயில்கொள்ளும்போது சொகுசாக மிதக்கும் தெப்பமாகிறது. இரவில் அதன் கண்கள்
ரத்தினம் போல் ஒளிர்ந்து வெளிச்சம் காட்டுகின்றன. அதனைப் பட்டாடை போல
போர்த்திக்கொள்ளவும் அனுமதிக்கிறது. தலையணையாகவும் கட்டிக்கொள்ளலாம்.

சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம், நீள்கடலுள் - என்றும்
புணையாம், மணி விளக்காம், பூம்பட்டால் புல்கும்,
அணையாம் திருமாற்கு அரவு.

(புணை - தெப்பம், புல்கும் - அணைத்துக்கொள்ளும்)

பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதியில் உள்ளது இந்த வெண்பா. இதைத்
தொடர்ந்து பிற்காலத்தில்
'கணிகண்ணன் போகின்றான்' என்று துவங்கும் இரண்டு தனிப் பாடல்கள். ஆழ்வார்
ஆணைப்படி பெருமாள் படுத்திருந்தவர் எழுந்து வந்துவிட்டார் என்றெல்லாம் சுவாரஸ்யமான
கதைகள் உள்ளன.

உலகின் பெரிய மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இம்மாதிரி ஓசைப்படாமல் எல்லா
கைங்கர்யங்களும் செய்பவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பெரும்பாலும் மறந்து
விடுகிறோம். பொதுவாக ஆதிசேஷன் என்று அவர்களை அழைக்கலாமா?

- சுஜாதா

அன்புடன்,

சித்தானந்தம்

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqBEkjayQ%3DeLBDqE4Th7kUR7Tb4NHqOMKoRd8FtsVBt-g%40mail.gmail.com.

Reply via email to