இங்கே கம்பன் பொறுமையின் சிறப்பினைக் கூறுகிறான் என்ற வாதம் , படிக்க சுவை கூட்டினாலும், பிற கூற்றின்படி, சூர்பனகாவின் எதிர்மறை வாதத்தை , மயக்கும் கலையை, காமத்தில் வீழ்த்தி ஜெயிக்க வேண்டும் என்ற அசுரர் குணத்தை அல்லோ காட்டுவதாக தான் உணர்கிறேன். இயலாமையின் இயல்பு, எப்படியும், எப்படியாவது, ஜெயிக்க வேண்டும் என்பது; நற்குணத்தை இழிவுபடுத்துதல் என்பது துர்குணர்களின் இயல்பு; நம்மைச் சுற்றியே பார்க்கலாமே; அம்மாவை , பெண்ணை, அவன் வேலையை மற்றும் என்னவெல்லாம் அவனைப் பற்றி தெரியாத போதும், கன்னா பின்னாவென்று பேசுதல், எழுதுதல், மூத்தோர்க்கு அமையும் பொழுது, அசுரர் வித்துக்கு ஏற்படாதா? பொறுமை வள்ளுவர் கூற்றின்படி சாதாரண இகழ்வைத்தான் குறிப்பிடுகிறார்; கிருஷ்ணர் சிசுபாலனை ஓரளவுதான் பொறுத்தார் ; பார்த்த போருக்கு பொறுமை சில வருடங்கள் தான்; எல்லாவற்றிற்கும் கோபம் இயல்பாற்றது என குறிக்கவே அது; ராமனின் பொறுமை , இலக்குவன் பொறுமையின் பொங்கல் நோக்கி இதனை உணரலாம். அடக்கத்தின் பொறுமை திருக்குறள் கூறுகிறது. மனம் வரின் குரல்களும் வள்ளுவரே எழுதினார். அகழ்வாரைத் தாங்கும் நிலம், நேபாள , ஆப்கானிஸ்தான, இந்தோனேஷியா வெளிப்பாடாக அல்லவோ காண்பிக்கிறாள். சீட்டை பூமியின் மகள்; அவளுக்குப் பொறுமை இல்லை எனக் கூறுவது நகைப்பிற்கு உரியது ராமன் அவளைக் கடந்து போகவே நினைக்கிறான்; பெண்மையை மதிக்கிறான் எனக் கொள்ளலாம். பொறுமையை பற்றி கம்பன் பேசுவதாக கொள்ள முடியாது. Here Kamban argues that patience is a virtue, makes for an enjoyable read, but I feel that All show Surbanaka's negative argument, the art of seduction, the demonic nature of defeating and conquering lust, according to other claims. The nature of disability is to be overcome somehow, in someway; It is the nature of the wicked to denigrate goodness; Look around us; don't we see even aged doing character assassination due to the envy of inability to hit in any manner someone , whom they don't like?; when you don't know his mother, his wife, his job and everything about him, such demons abusing in so many words of illiteracy?; and in doing those character assasination, writing so wilfully, as an elder, doesn't he become a monster? Patience Valluvar says refers to ordinary contempt; Krishna cared for Sisupala to some extent; Patience was only for few years before the MaHABHARATHA war ; It means that anger is unnatural for everything; Rama's Patience, WAS A LIMITED OPTION TILL lAKSHMANA WAS INSTRUCTED TO DO SOMETHING HORRIBLE TO THAT WOMAN. Patience of modesty speaks volumes. Valluva himself wrote the voices of where prestige is challenged. The earth has the tolerance no doubt but the limitation ends where she would burst as in Nepal, Afghanistan and indonesia. Sita was A daughter of the earth; It is ridiculous to say that she has no patience and Raman wants to pass surpanakha by; It can be assumed that he respects women. Kamban cannot be said to be talking about patience. K Rajaram IRS 5 11 23
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Sun, 5 Nov 2023 at 06:11 Subject: Fwd: Tamilnayagam - Kamba Ramaayanam - Soorppanaga (35) To: கம்ப இராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் (35) *தமிழ்நாயகம் * என்னை நீ இகழ்வது என்னே தன்னை மணந்து கொள்ளும்படி சூர்ப்பணகை, இராமனை வேண்டுகிறாள். அவளோடு சிறிது நேரம் பேச்சுக் கொடுத்துவிட்டு, முடிவில் மணக்க முடியாது என்று இராமன் கூறி விடுகிறான். அப்போது அங்கே சீதை வருகிறாள். சீதையின் அழகை உள்ளுக்குள் வியந்தாலும், வெளிக்கு அவள் மேல் கோபம் கொள்ளுகிறாள். அது மட்டும் அல்ல, தன்னைத்தானே சூர்ப்பணகை புகழ்ந்து கொள்கிறாள். "மூவரும் தேவரும் என்னை அடைய தவம் கிடக்கிறார்கள். நீ என்னடா என்றால் என்னை இகழ்வது மட்டும் அல்ல, இந்த பொறுமை இல்லாத கள்வியான சீதையை விரும்புகிறாய்" என்று இராமனிடம் கூறுகிறாள். பாடல் *பொற்புடை அரக்கி, 'பூவில், புனலினில், பொருப்பில், வாழும்அற்புடை உள்ளத்தாரும், அனங்கனும், அமரர் மற்றும்,எற் பெறத் தவம் செய்கின்றார்; என்னை நீ இகழ்வது என்னே,நல் பொறை நெஞ்சில் இல்லாக் கள்வியை நச்சி?' என்றாள்.* பொருள்: அழகிய வடிவம் கொண்ட அரக்கி (சூர்ப்பணகை) "தாமரை மலரில் (வாழும் பிரம்மாவும்) நீரில், அதாவது பாற்கடலில் வாழும் திருமாலும் மலையில், அதாவது கைலை மலையில் வாழும் சிவனும், அன்பு உடைய உள்ளம் உடையவர்களும், மன்மதனும் மற்றும் உள்ள தேவர்கள் யாவரும் என்னைப் பெறத் தவம் செய்கிறார்கள். என்னை நீ ஏன் பழிக்கிறாய், நல்ல பொறுமை மனதில் இல்லாத கள்ளத்தனம் கொண்ட இந்த சீதையை விரும்பி? என்றாள். (பொருப்பு = மலை; அற்புடை = அன்புடைய; அனங்கன் = மன்மதன்; எற் பெற = என்னை அடைய; பொறை = பொறுமை) இங்கே முக்கியமாக இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். முதலாவது, சீதை மிக மோசமானவள் என்று சொல்ல வேண்டும். எப்படி சொல்லுவது? சீதை பொறுமை இல்லாதவள் என்கிறாள் சூர்ப்பணகை. ஆகப் பெரிய தீய குணம் பொறுமை இல்லாமை என்பது கம்பனின் வாக்கு. பொறுமை பற்றி திருவள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார். அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. தன்னை கடப்பாரை, மண்வெட்டி முதலியவற்றால் தோண்டுபவர்களையும் பொறுமையுடன் தாங்கும் நிலமகளைப் போல தம்மை இகழ்பவர்களை பொறுத்துக் கொள்வது ஆகச் சிறந்தது என்கிறார். சாப்பிடாமல் விரதம் இருந்து செய்யும் தவத்தை விட, பிறர் சொன்ன கடும் சொற்களை பொறுத்துக் கொள்வது பெரியது என்கிறார். யோசித்துப் பாருங்கள், நம்மை ஒருவர் ஏதாவது தவறாக சொல்லி விட்டால், நமக்கு எவ்வளவு கோபம் வருகிறது. தவறு என்ன தவறு, உண்மையையே சொன்னாலும், அது நமக்கு பிடிக்கவில்லை என்றால், கோபம் வருகிறது அல்லவா? அது மனைவியாக இருக்கட்டும், கணவனாக இருக்கட்டும், பிள்ளைகளாக இருக்கட்டும், உடன் பிறப்பு, நட்பு, சுற்றம், வேலை பார்க்கும் இடத்தில் யாராவது நமக்கு பிடிக்காத ஒன்றைச் சொன்னால் பொறுமையாக கேட்க முடியுமா நம்மால்? கேட்க வேண்டும். உண்மையோ பொய்யோ. சரியோ தவறோ. பொறுமையைக் கைவிடாமல் கேட்க வேண்டும். அவர்கள் சொன்னது தவறாகவே இருந்தாலும், அவர்களை பொறுக்கும் (சகிக்கும்) குணம் வேண்டும். அது ஒரு மிகச் சிறந்த குணம் என்கிறார் வள்ளுவர். அதையே கம்பனும் தன் காவியத்தில் கொண்டு வந்து சேர்க்கிறான். சூர்ப்பணகை வாயில் இருந்து பெரிய அறத்தை சொல்கிறான் கம்பன். அடுத்தது, தற்புகழ்ச்சி. தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறாள் சூர்ப்பணகை. மூவரும் தேவரும், மன்மதனும் என்னை வேண்டி தவம் கிடக்கிறார்கள் என்கிறாள். அளவுக்கு மீறி தன்னை நினைத்துக் கொள்வதும் ஒரு அரக்க குணமே. பணிவு வேண்டும். அடக்கம் வேண்டும். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பார் வள்ளுவப் பெருந்தகை. அடக்கம் என்பது ஒரு சொத்து மாதிரி என்கிறார். நிலம், வீடு, பணம், நகை, வண்டி, வாகனம் போல அடக்கமும் ஒரு சொத்து என்கிறார். எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வற்கே செல்வம் தகைத்து. என்பார் வள்ளுவப் பேராசான். சிந்தித்துப் பாருங்கள். உங்களிடம் எவ்வளவு பொறுமை இருக்கிறது. எப்போது பொறுமை தவறுகிறது. ஏன் தவறுகிறது. எப்படி பொறுமையாக இருப்பது என்றும்... உங்களை நீங்கள் பெரிய ஆளாக நினைத்துக் கொண்டிருந்தால் , அது பற்றியும் சிந்தியுங்கள். இராமாயணம் படிப்பது கதை படிப்பது போல அல்ல. அதில் பொதிந்து கிடக்கும் நல்ல விஷயங்களை நம் வாழ்வில் கடை பிடிக்க வேண்டும். வாழ்வு சிறக்க அதுவும் ஒரு வழி. *- தமிழ்நாயகம் * *********************************************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoop-Rj8BENUA1RE0y6RZkxVM4u%2B8Czq-G37a52%3D9nxFrg%40mail.gmail.com.
