தன்னிரக்கம் மற்றும் சுயபச்சாதாபம்

தன்னிரக்கம், இது சாதாரணமாக எல்லா மனிதர்களிடமும் இருக்கும் ஒரு விஷயம் தான்.

எப்போதாவது ஒரு சமயம், ரொம்ப எதிர்பார்த்து, நடக்காமல் போவதால் மனம்
சோர்வடையும் பொழுது ஏற்படும் எண்ணமே தன்னிரக்கம்.

ஆனால் இதுவே கொஞ்சம் கொஞ்சமாய் விஸ்வரூபம் எடுத்து, இடத்தைக் கொடுத்தால்
மடத்தைப் பிடுங்கும் ஒட்டகம் போல்,

தெளிவு

விவேகம்

யோசிக்கும் திறமை

என்று ஒட்டுமொத்தமாக அனைத்தையும் களீபரம் செய்யும் பொழுது பிரச்சனை ஆகிறது.

உட்சபட்ச தன்னிரக்கமே, சுயபச்சாதாபம்.

சுயபச்சாதாபம் அப்படி என்றால்?

தனக்கு மட்டுமே எல்லா பிரச்சினைகளும் வருகிறது

தன்னை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை

தன் தகுதிக்கு ஏற்ற வாழ்க்கை அமையவில்லை

தன் புத்திசாலித்தனத்திற்கு உகந்த பாராட்டு கிடைக்கவில்லை

என்கிற ஏக்கம் ஒருவரை முழுசாக ஆக்கிரமிக்கும் பொழுது ஏற்படுவது.

இவையெல்லாம் அளவுக்குமீறி போகும்பொழுது நம்முடைய இயல்பான குண நலனுடன் ஒன்றாக
அது மாறிவிடுகிறது. அதுவே சுயபச்சாதாபம்.

எப்படி கண்டுபிடிப்பது?

உங்களுக்குள் சுயபச்சாதாப மனநிலை இருக்கிறா என்பதை முதலில் ஆராய்வது அவசியம்.

அதற்கு சில கேள்விகளை நீங்களே உங்களை கேட்டால் போதும்.

ரொம்ப புலம்பறேனோ?

எதையும் இயல்பா எடுத்துக்க முடியலையா?

என் தோல்விக்கெல்லாம் காரணம் கற்பிக்க முயல்கிறேனா?

சே! நம்மால் இதெல்லாம் முடியலையே, என அடிக்கடி மனதில் சிந்தனைகள் எழுகிறதா?

அடுத்தவர்களை குறை சொல்லும் போது உள்ளுக்குள் உற்சாகமாய் இருக்கிறதா?

அடுத்தவர்கள் நம்மீது இரக்கப்பட வேண்டும் எனும் சிந்தனை உருவாகிறதா?

இப்படி சில கேள்விகளுக்கு, ஆம் எனும் விடை வந்தால், கொஞ்சம் உஷாராகிவிடுங்கள்.

மேற்சொன்ன அனைத்தும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒன்று அல்லது ஒன்றுக்கும்
மேற்பட்ட காரணங்கள் இருந்தாலும் போதும்.

உங்களுக்குள் சுய பச்சாதாபம் வேர் விடுகிறது என்று அர்த்தம்.

இடம் கொடுத்து, தெரிந்தோ தெரியாமலோ அதற்கு பூரண அடிமையான பிறகு
பாதிக்கப்பட்டவரின் சூழ்நிலையில் மெதுவாக மாற்றங்கள் வெளிப்படையாக தெரியவரும்.

சிடுமூஞ்சி, அழுமூஞ்சி போன்ற பட்டப் பெயர்களையும் பெற்றுத்தரும்.

உறவுகளை ஆரோக்கியமற்றதாக மாற்றும்.

கூடவே எந்த முடிவும் எடுக்க தெரியாத குழப்பத்தில் முடங்கிப் போவதும் உண்டு.

இந்த உணர்வை துளி அனுமதித்தாலும் பரபரவென்று ஓசைப்படாமல் பரவி நல்ல எண்ணம்
எதையும் வளரவிடாமல் அமுக்கி விடும்.

சுயபச்சாதாபம் பற்றிக் கொண்டவர்கள் தினமும் ஒரு மூலையில் உட்கார்ந்து,

நான் ஏன் இப்படி இருக்கிறேன்?

என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே…

என்று மருகும் இவர்கள் வளர்ச்சி என்பதை எந்த விதத்திலும் காண முடியாது.

மொத்தத்தில் கேன்சரை விட தீவிரமாக அரிக்கும் வியாதி இந்த சுயபச்சாதாபம்.

மனோ வியாதி என்பதை ராஜா தந்திரமாகவும்

 கொள்ளலாம். பஞ்ச தந்திரங்களில் ,அடங்குவது போல் பதுங்கிப் பாயும் தந்திரமும்
உண்டு; அது சூர்ப்பனகை செய்ய முடிவெடுக்கிறாள்.  கெஞ்சினால் மிஞ்சுவது ;
மிஞ்சினால்
கெஞ்சுவது என தந்திரங்கள் மாற்றி யோசிக்கப்படலாம் அல்லவா? எதிரியை வீரத்தால்
வீழ்த்த முடியாத நரிகள் சிங்கத்தை கிணத்திற்கு   அழைத்துச் செல்வதில்லயா? ராமனை
வீழ்த்த சூர்ப்பனகை செய்யும் ஆரம்ப வினைசெயல்; பிறகு சீதையை கவர ராவணனைத்
தூண்டுதல் என பெரிய செயல்களை உருவாக்கி ராமனை தனக்கு வேண்டியனாகவும், தனக்கு
காவலனாகவும், தனது பரந்த சாம்ராஜ்யத்தை உருவாக்குவபளாகவும்   தான் கம்பன்
சித்தரிக்கிறார்.  அழகாய் இல்லாதவள் உருமாறி அழகானவளாய் காண்பித்தால், மயக்கும்
பாவையாக இராமாயணத்தை உருவாக்கும் ஒரு காரியவாதியாகத்தான்
சித்தரிக்கப்படுகிறாள். க்ளியோபாட்ராவிற்கு முன் இருந்தவள். மஹாபாரதத்தில்
சகுனி எனில், இங்கு சூர்ப்பனகை. இந்தப் பாடலில், சுய பச்சாதாபமே
காணப்படுகிறது. சீதையைப் பழித்தவள் தந்தானே குறை கூற மனோவியாதியால்
பீடிக்கப்பட்டாளா? இல்லை. ஏதேனும் செய்து ராமனை வீழ்த்தவிடும் என்பதே
குறிக்கோள். சுய பச்சாதாபமும் ஒரு ராஜா தந்திரமே. பதுங்குவது பாயத்தானே?
மூக்கறுபட்ட
நிலையிலும், அடுத்த ஆயுதத்தைத்தானே செலுத்தினாள் ? ராமனின் அயனத்தை சூர்பனகையே
நிகழ்த்தினாள்.  k rajaram irs  71123

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Tue, 7 Nov 2023 at 07:06
Subject: Fwd: Tamilnaygam - Kamba Ramayanam - Soorppanaga (36)
To:




கம்ப இராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் (36)

*தமிழ்நாயகம் *

பாவியேனையும் பார்க்கும் கொலோ?


தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டிய சூர்ப்பணகையின் வேண்டுகோளை
நிராகரித்து விட்டு, இராமன் பர்ணசாலைக்குள் சீதையோடு போய் விட்டான்.

வெளியே நின்ற சூர்ப்பணகை புலம்புகிறாள்.

"நீலமலரோ, மீனோ என்று சொல்லும்படி இருக்கும் சீதை , இலக்குமி போல இருக்கிறாள்.
அவளைப் பார்த்த இராமனின் கண்கள் என்னையும் பார்க்குமா" என்று ஏங்குகிறாள்.
காதலில், காமத்தில், அவளின் உயிர் ஓய்கிறது, ஆனாலும் ஆசை ஓயவில்லை என்கிறான்
கம்பன்.


பாடல்




*‘காவியோ, கயலோ, எனும் கண் இணைத்தேவியோ திருமங்கையின் செவ்வியாள்;பாவியேனையும்
பார்க்கும் கொலோ? ‘எனும்ஆவி ஓயினும், ஆசையின் ஓய்வு இலாள்.*

பொருள்

நீல மலரோ, மீனோ என்று என்னும்படி இருக்கும் இரண்டு கண்கள் கொண்ட
இராமனின் தேவியான சீதையோ திருமகளைவிட சிறந்தவளாக இருக்கிறாள்.
பாவியாகிய என்னையும் பார்ப்பானா என்று உயிர் ஓய்ந்தாலும்
ஆசை ஓய்வு இல்லாதவளான சூர்ப்பணகை

பாட்டு என்னவோ, மேலோட்டமாக பார்த்தால், சாதாரணமாகத்தான் தெரியும்.
தான் பெரிய ஆள், மன்மதனும், மும்மூர்த்திகளும், தேவர்களும் என்னை அடைய  தவம்
கிடக்கிறார்கள் என்று தற்பெருமை பேசிய சூர்ப்பணகை, தான் பெரிய ஆள் இல்லை
என்று உணர்கிறாள்.  காதல் என்று வந்து விட்டால், இந்த ஆணவம் போய் விடுகிறது.
யாரைக் காதலிக்கிறோமோ, அவர்களே உலகம் என்று ஆகிப்போகிறது.  நீ இல்லாமல்
என் வாழ்வு பூரணமாகாது என்ற நிலைக்கு காதலர்கள் வந்து விடுகிறார்கள்.   நீ
இல்லாமல் எனக்கு சந்தோஷம் இல்லை  என்பது எதைக் காட்டுகிறது என்றால், நான்
ஒன்றும் பெரிய
ஆள் இல்லை. நீ இருந்தால்தான் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்  என்று
காதலிப்பவருக்கு  அனைத்து முக்கியத்துவமும் போகிறது. தன்னைத்தானே  தாழ்த்தி,
காதலிப்பவரை வானளாவ உயர்த்திப் பிடிப்பது காதல்.

தற்பெருமை பேசிய சூர்ப்பணகை "பாவியேனையும் பார்க்கும் கொலோ?" என்று  தன்னை
ஒன்றும் இல்லாதவளாக உணரத் தலைப்படுகிறாள்.


எவ்வளவு பெரிய ஆணவக்காரனையும், காதல் நாய் குட்டிப் போல
மென்மைபடுத்திவிடுகிறது.

தெரியாமலா சொன்னான் பாரதி "ஆதலினால் காதல் செய்வீர்" என்று.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

அது என்ன "ஆவி ஓயினும் "? ஆவி எப்படி ஓயும்? ஆவி என்ன ஓடி ஆடி வேலை செய்கிறதா,
களைப்பு அடைய? உடல் ஓயும். நமக்குத் தெரியும். உள்ளம் ஓயும். அதுவும் நமக்குத்
தெரியும்.
உயிர் ஓயுமா?

ஓயும். அது நமக்குத் தெரிவதில்லை.

"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் " என்பார் மணிவாசகர். இளைத்தது யார்?
உடலா? உள்ளமா ? இல்லை, இந்த உயிர் ஒவ்வொரு பிறவியாக எடுத்து களைத்து, சலித்து,
இளைத்துப் போய்விடுகிறது.







*புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப்
பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த்
தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் ⁠எல்லாப் பிறப்பும் பிறந்து
இளைத்தேன்*

உயிரும் இளைக்கும்.



*பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் யானும்; உன்றன்பொன் துணைத்தாள்
தந்து புகல் அருள்வாய் பூரணமே!*
பிறந்து அலுத்தேன் நான் என்பார் பட்டினத்தார்.  உயிரும்  அலுக்கும்.

உடலையும், உள்ளத்தையும் தாண்டி உயிரைப் பற்றும் காதல்.


புலம்புவது சூர்ப்பணகை.


பக்திப் பாடல்களைப் பார்த்தால் தெரியும், பாடுபவர்கள், "நான் ஒரு பாவி, நான்
ஒரு அறிவிலி,  நான் ஒரு முட்டாள், ஆண்டவா என்னை காப்பாற்று" என்று தன்னைத்
தாழ்த்தி இறைவனை போற்றுவார்கள்.


*"நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயவான தத்துவனே "*

என்பது திருவாசகம்.

*"நம்மையும் ஒரு பெருளாக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்து" *

என்பதும் மணிவாசகம்.

சூர்ப்பணகை சொல்லுகிறாள், "இந்த பாவியை அவன் பார்ப்பானா"  என்று.

சிந்திக்கலாம்தானே?

*- தமிழ்நாயகம்*

**********************************************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor_vOH10rMA3zFDqVbm%3DCzf76OGaOGkY%3D5p3%3DzYs-nfiQ%40mail.gmail.com.

Reply via email to