அன்பினில் வலியன் அல்லது பெண்பால் .சீதையின் அன்பு சரி. எவ்வண்ணம் சூர்பனகையும் சரியாவாள்? சூர்ப்பனகை உண்மையில் கடல் வயப்பட்டிருந்தால், அண்ணனிடம் சென்று பெரிதாக புலம்பியிருக்க மாட்டாள். காமம் என்றும் கூறமுடியாது ஏனெனில், மாரிசன் போல அவளும் ராமனை வேறு ரூபத்தில் வீழ்த்தவே நினைப்பாள். அரக்கியின் ஸ்வபாவம், அழிப்பதே . ராவணனை அழிக்க வனம் புகுந்தனள்; செய்யவேண்டியவற்றை, ராமனை தூண்டி கோபத்தின் வெளிப்பாட்டை எதிர்கொண்டு, நினைத்ததை முடித்தனள். ராமாயணத்தை நடத்தினாள்.பிறவிப் பெருங்கடல் நீந்தினாள். K RAJARAM IRS 91123
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Thu, 9 Nov 2023 at 06:30 Subject: Fwd: Tamilnaayagam - Kamba Raamayanam - Soorpanaga (37) To: கம்ப இராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் (37) *தமிழ்நாயகம் * அன்பினில் வலியன் சூர்ப்பணகையைத் தனியாக காட்டில் விட்டுவிட்டு வந்து விட்டோம். அவள் என்ன ஆனாள் என்று பார்ப்போம். இராமன், சீதையைக் கூட்டிக் கொண்டு குடிசைக்குள் போய் விட்டான். சூர்ப்பணகை தனித்து நிற்கிறாள். தளர்ந்து போனாள். இராமன் தனக்கு இல்லை என்று உணர்ந்தாள். அதனால், அவளுக்கு, அவள் மேலேயே ஒரு தன்னிரக்கம் பிறக்கிறது. பொதுவாகவே, நாம் எப்போதும் நம் உடலைத்தான், நாம் என்று கூறுவோம். நமக்கு ஒரு தலைவலி வந்தால், என்னுடைய தலைக்கு வலிக்கிறது என்று சொல்ல மாட்டோம். என் தலை வலிக்கிறது என்போம். ஐம்புல இன்பங்களும் இந்த உடலுக்குத்தான். எப்போதாவது நாம், நம் உயிரை, ஆன்மாவை நாம் என்று சொன்னது உண்டா ? நான் என் உடலை தூக்கிக் கொண்டு நடந்து வந்தேன் என்று யாராவது சொல்லிக் கேட்டு இருக்கிறோமா? உடலை யார் தூக்கிக் கொண்டு வந்தார்கள் என்ற கேள்வி வரும் அல்லவா? காதல் தோல்வி, சூர்ப்பணகைக்கு. முதன் முறையாக தான் வேறு , தன் உடல் வேறு என்ற ஞானம் வருகிறது அவளுக்கு. தான் என்பது இந்த உயிர் என்ற ஆத்ம ஞானம் பிறக்கிறது. இந்த உடலை சுமப்பது கடினம் என்று உணர்கிறாள். "இராமன் போன பின், இராமன் போய் விட்டான் என்ற உணர்வு கூட அவளுக்கு இல்லை. அவன் தன் முன் நிற்பதாகவே அவள் நினைக்கிறாள். தன்னுடைய உயிரானது தனது உடலை சுமந்து கொண்டிருக்கும் பொறுமையை கை விட்டு. மூச்சு விடக் கூட மறந்து ஒடுங்கி நின்றாள். தகுதியில்லாதவன். மனதளவில் கூட என்னை தழுவாதவன். கோபம் கொண்டவன். ஆனால், சீதையிடம் , நெருக்கமான அன்பு கொண்டவன் " என்று சூர்ப்பணகை நினைக்கிறாள். பாடல் *புக்க பின், போனது என்னும் உணர்வினள்; பொறையுள் நீங்கிஉக்கது ஆம் உயிரள்; ஒன்றும் உயிர்த்திலள்; ஒடுங்கி நின்றாள்;'தக்கிலன்; மனத்துள் யாதும் தழுவிலன்; சலமும் கொண்டான்;மைக்கருங் குழலினாள்மாட்டு அன்பினில் வலியன்' என்பாள்.* பொருள் சீதையுடன் இராமன் குடிசைக்குள் புகுந்த பின் போய் விட்டான் என்ற உணர்வு உடையவளாய் பொறுமை நீங்கி நைந்து இருக்கும் உயிரைக் கொண்டவள். அவளுடைய உயிர், அவளின் உடலை சுமந்து தளர்ந்து விட்டது, நைந்து விட்டது; உயிர் மூச்சு இல்லை' அனைத்தும் ஒடுங்கி நின்றாள்; வசப்படாதவன் மனதில் கூட என்னை தழுவவில்லை: கோபம் கொண்டவன்; கண் மை போன்ற கரிய கூந்தலைக் கொண்ட அவளின் (சீதையின்) அன்பினில் வலியவன் என்றாள் (பொறை =பொறுமை; உக்கது ஆம் உயிரள் = நைந்து இருக்கும் உயிரைக் கொண்டவள்; தக்கிலன் = வசப்படாதவன்) அரக்கிதான் என்றாலும், அவளுள்ளும் ஒரு அன்புக்கு ஏங்கும் பெண் இருக்கத்தான் செய்கிறாள். *- தமிழ்நாயகம் * ****************************************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop9yk6JJ63D3yz3%3DQdv_YTagSY_Wn7YxprLTfKwj3dydQ%40mail.gmail.com.
