சூர்ப்பனகை மார்பக அறுப்பு என்பது கமபனின் இராமாயணத்தில் மட்டுமே உள்ளது; வால்மீகி இராமாயணத்தில் இல்லை. வெகு காலத்திற்கு முன்பு ம பொ சி யோ அன்னது அது சம்பந்தப்பட்டதாக படித்த ஞாபகம். தமிழ் காப்பியங்களில், புறமுதுகிட்டு ஓடி வந்தவனைப் பார்த்து தாய் இவருக்கு பால் கொடுத்த முலையை அறுத்து எறிவேன் என வீரத்தாய் கூறிய பாடல்கள் உண்டு; எனவே மறநெறி பிறழண்டால் வேண்டாத உறுப்பு அறநெறி பிறழ்ந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியதே கம்பனின் கற்பனைகளில் ஒன்று வால்மீகி கூறவில்லை Surpanagai breast-cutting occurs only in Kamaban's Ramayana; Valmiki did not write in his Ramayana. I remember reading about it a long time ago by Ma Po Ci or connected write up in Tamil kappiyams, there are tamil verses where Brave-mother said that seeing the son running with his back, he would cut off the breast from which the mother gave him milk and throw it away; Therefore Valmiki does not say that; but it is one of Kamban's ideas is that ,the undesirable element should be punished for moral depravity. KR IRS 16 11 23
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Thu, 16 Nov 2023 at 05:35 Subject: Fwd: Tamilnayagam - Kamba Ramayanam - Soorppanaga (43) To: கம்ப இராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் (43) *தமிழ்நாயகம் * உருகியது உலகம் சீதையைக் கவர வந்த சூர்ப்பணகையின் முடியைப் பிடித்து இழுத்து, தரையில் தள்ளி, காலால் அவளை உதைத்து, அவளின் மூக்கு, காது மற்றும் முலைக் கண்களை வாளால் வெட்டினான் இலக்குவன். பெண்ணின் மார்பு என்பது அவளின் குழந்தைகளுக்குப் பால் தர அமைந்த ஒரு அவயவம். காலப் போக்கில் அது ஒரு கவர்ச்சிக்கு இடமான ஒன்றாக ஆகிப் போனது காலத்தின் கோலம். ஒரு தாய் பிள்ளைக்குப் பால் தரும்போது, இயற்கை அவளின் மார்புகளை பெரிதாக்குகிறது. குழந்தை நிறையப் பால் அருந்த வேண்டும் என்று. அபிராமிக்கு எத்தனை குழந்தைகள். பட்டர் சொல்கிறார், மலை போல பெருத்த தனங்கள் , அழும் பிள்ளைக்குத் தர வேண்டி பருத்த தனங்கள். கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின் பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர் திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும், முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே. "அம்மா, நீ என் முன்னால் வர வேண்டும்" என்று அழுகிறார் பட்டர். சரி, இலக்குவன் அப்படி செய்து விட்டான். சூர்ப்பணகைக்கு வலித்திருக்குமா, வலித்திருக்காதா? அவள் அழுதிருப்பாளா? மாட்டாளா? அறுபட்ட வலி ஒரு புறம். ஒரு பெண்ணின் மார்பை அறுத்தால், அவள் மன நிலை எப்படி இருக்கும்? மார்பக புற்று நோய் வந்தால், பெண்களின் மார்பகங்களை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று மருத்துவர் கூறுவார். அதை அந்த பெண்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? தவித்துப் போவார்கள். செத்தாலும் பரவாயில்லை, இந்த சிகிச்சை வேண்டாம் என்றுதான் நினைப்பார்கள்...என்று நான் நினைக்கிறேன். வலியால் துடிக்கிறாள். வாய் விட்டு அலறுகிறாள்... பாடல் *அக் கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை,திக்கு அனைத்தினும் சென்றது; தேவர்தம் செவியும்புக்கது; உற்றது புகல்வது என்? மூக்கு எனும் புழையூடுஉக்க சோரியின் ஈரம் உற்று, உருகியது உலகம்.* பொருள் அந்த நேரத்தில் சூர்ப்பணகை வாய் திறந்து அழுத அழுகை (அமலை என்றால், இருந்து அழுவது அல்ல. வலி பொறுக்க முடியாமல் அங்கும் இங்கும் ஓடி அழுவது.) எல்லாத் திசைகளிலும் சென்றது; வானுலகில் உள்ள தேவர்களின் காதிலும் சென்று அடைந்தது. அங்கு நடந்ததை சொல்ல என்ன இருக்கிறது? அவளுடை மூக்கு என்ற துவாரத்தின் வழியாக வழிந்த இரத்தத்தின் ஈரத்தால் உருகியது உலகம். (புழை = துளை; சோரி = குருதி) நனைந்தது உலகம் என்று கம்பன் சொல்லவில்லை. உருகியது உலகம் என்கிறான். ஒரு பெண் எதையும் சகிப்பாள், ஆனால் தன் அழகிற்கு ஒரு பங்கம் என்றால் அவளால் அதைத் தாங்க முடியாது. சூர்ப்பணகையின் துன்பத்தை, அவலத்தைக் கம்பன் படம் பிடிக்கிறான். கல்லும் கரையும். அதைப் படித்த பின், கண்ணின் ஓரம் நீர் துளிர்க்கவில்லை என்றால்....தமிழும் கம்பனும் தோற்று விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். *- தமிழ்நாயகம்* ************************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopWrUG3M09xWGYRf2Jop22JAZpW5BB%2Ba9e9WLFP5o1u-w%40mail.gmail.com.
