I felt after reading daily Tamilnayagam-kamba Ramayana verses commentary, as if seeing the Kamal Haasan film NAYAGAN. Kambanin nayam, is expressed through his expressions of the nature of that character. Imaginery and unqualified actions of Surpanaka, in trying to grab someone's husband, as our famous stars do, is written by Kamban with words of wisdom. Pannum agaval=repetitive stotram; so she lamented not because of her wounds, as she is capable of fighting hidden in the air and wounded many Rishis doing the meditation; but because, she failed to achieve her target of Rama; she is the sister of Ravana; she holds the dandakaranya; but she cannot pull over what she desired; the depictions of people drive all to madness; are we not seeing in our society; in our group; who cannot carry out what they desired mocking at others; or lamenting as baked etc? Surpanaka and Rama achieved their Individual plans for which they were there. END No more criticism cajoling as NAYAGAN. KR IRS 201123
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Mon, 20 Nov 2023 at 05:53 Subject: Fwd: Tamilnayagam - Kamba Ramayanam - Soorppanaga (46) To: கம்ப இராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் (46) *தமிழ்நாயகம் * குருதிச் சேற்று வெள்ளத்துள் திரிபவள் இலக்குவனால் மூக்கும், காதும், முலைகளும் துண்டிக்கப்பட்ட சூர்ப்பணகையின் துன்பத்தை மேலும் கம்பன் விவரிக்கிறான். அவளால் ஒரு இடத்தில் நிற்கவோ உட்காரவோ முடியவில்லை. அங்கும் இங்கும் நடக்கிறாள். குதிக்கிறாள், வலி தாங்க முடியாமல். உடம்பில் இருந்து இரத்தம் ஊற்று போல் குபுக் குபுக் என்று வந்து கொண்டே இருக்கிறது. அப்படி வந்ததால் அந்த இடம் எல்லாம் சேறாகிப் போனது. அந்த இரத்தச் சேற்றில் அவள் நடக்கிறாள். வலி தாங்காமல் அரற்றுகிறாள். அவளின் அவல ஓலம், தேவர்களை நடுங்க வைத்தது. யமனும் அஞ்சினான் அவள் அலறல் கேட்டு. தன் குலத்தில் உள்ளவர்கள் பெயரை எல்லாம் ஒவ்வொன்றாக கூப்பிட்டு அலறுகிறாள்..... பாடல் *ஊற்றும் மிக்க நீர் அருவியின் ஒழுகிய குருதிச் சேற்று வெள்ளத்துள் திரிபவள், தேவரும் இரிய, கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி, ஆற்றுகிற்கிலள்; பற்பல பன்னி நின்று, அழைத்தாள்.* பொருள் கொட்டும் மிகுந்த நீர் அருவி போல ஒழுகிய இரத்த சேற்று வெள்ளத்தில் நோக்கம் எதுவும் இன்றி அங்கும் இங்கும் அலைகிறாள்; தேவர்களும் பயந்து ஓட யமனும் பயந்து தலை குனிந்து நிற்க தன்னுடைய குலத்தில் உள்ளோர் பெயர்களை எல்லாம் கூறி கூப்பிடுகிறாள்; மீண்டும் மீண்டும் பல செயல்களை செய்து நின்று அழைத்தாள். (இரிய =பயந்து ஓட; கூற்று = யமன்; உட்கும் = பயந்து தலை குனிந்து நிற்க; ஆற்றுகிற்கிலள் = கூப்பிடுகிறாள்.) "பற்பல பன்னி நின்று, அழைத்தாள்" என்ற வரியில் வரும் "பன்னி " என்ற சொல், பன்னுதல் என்பதில் இருந்து வந்தது. பன்னுதல் என்றால் மீண்டும் மீண்டும் சொல்லுதல், (செய்தல்) என்று பொருள். இராம, இலக்குவ, பரத , சத்துருகனர்கள் பிறந்த போது அனைவருக்கும் வசிட்டன் பெயரிட்டான். பரதனுக்கு மட்டும் "பரதன்" என்ற பெயரை பன்னினான் என்கிறான் கம்பன். மீண்டும் மீண்டும் சொன்னானாம் வசிட்டன். "பரதன் எனப் பெயர் பன்னினன் அன்றே." என்பான் கம்பன். பரதன் மேல் அவ்வளவு வாஞ்சை வசிட்டனுக்கு. கரம் தலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப விரத மறைப் பொருள் மெய்ந் நெறி கண்ட வரதன், உதித்திடும் மற்றைய ஒளியை, ‘பரதன் ‘எனப் பெயர் பன்னினன் அன்றே. (வரதன் = வசிட்டன்) அது ஒரு புறம் இருக்கட்டும். சில சமயம், காப்பியம் என்ன சொல்கிறது என்பதைவிட காப்பியம் என்ன சொல்லாமல் விட்டது என்பதில் மிகுந்த சுவாரசியம் இருக்கும். இராமனும், சீதையும் இருந்த குடிசைக்கு பக்கத்தில் இருந்த சோலைக்கு சீதை சென்றாள். அவளைப் பின் தொடர்ந்து சூர்ப்பணகை சென்றாள். சூர்ப்பணகையை இலக்குவன் அங்கு வைத்துத்தான் மூக்கையும், காதையும், முலையையும் வெட்டினான். அங்குதான் சூர்ப்பணகை அலறினாள். அவள் அலறிய அலறல் தேவலோகம் வரை கேட்டது என்கிறான் கம்பன். உடனே நீங்கள் என்ன நினைப்பீர்கள் ? அருகில்தானே இராமன் இருந்தான். சந்தியா வந்தனத்தை முடித்து விட்டு ஓடி வந்திருப்பான். என்னவோ பெரிய அலறல் கேட்கிறதே என்று வந்திருப்பான். என்ன நடந்தது என்று விசாரித்திருப்பான்.ஏதாவது சொல்லி இருப்பான். எங்கேயோ அடிபட்ட மாரீசனின் குரல் குடிசையில் இருக்கும் இலக்குவனுக்கும், சீதைக்கும் கேட்டது என்றால், அருகில் இருந்த சோலையில் இருந்து வந்த சூர்ப்பணகையின் அலறல் இராமனுக்குக் கேட்டிருக்காதா என்ன? கேட்டிருக்கும்தானே? இராமன் என்ன செய்திருப்பான் என்று நினைக்கிறீர்கள்? என்ன சொல்லி இருக்க வேண்டும்? *- தமிழ்நாயகம்* ************************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop68GunWcTfRmTqvgNqh1agLktezi%2Bg39Kh9t3in5znkQ%40mail.gmail.com.
