அன்று திருவாரூரில் தான் வழங்கிய தவறான தீர்ப்பால், செங்கோல் வளைந்தபோது ,
மனுநீதி சோழன் தான் முற்பிறவியில் என்ன பாவம் செய்தேனோ என்று அழுது புலம்பி
தவிக்கிறான். அவர் காலத்து சேக்கிழார் பெருமான் தனது திருத்தொண்டர் புராணம்
என்று அழைக்கப்படும் பெரிய புராணத்தில் இந்த வரலாறு விளக்குகிறார்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி காலத்தில்(19 ஆம் நூற்றாண்டு) , அவர்களால்
ஏவப்பட்ட ஜமின்தார்களின் கொடுங்கோல் ஆட்சி தமிழகத்தில் நிலவியது . அந்த சமூகச்
சூழலில் பெரிய புராணத்தை தழுவி இராமலிங்க அடிகளார் 'மனுமுறை கண்ட வாசகம்' என்ற
நூலை 1854 ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளியிட்டார். அந்த நூலில் மனுநீதிச் சோழன்
முற்பிறவியில், தான் செய்த பாவங்களாக சிலவற்றைப் பட்டியலிடுகிறான். அது
நீதியையும், வள்ளலார் காலத்து நெறிமுறைகளையும் அழகாக எளிய செய்யுளில் அமைந்து
நம்மை நெறிப்படுத்துகிறது.    இராமலிங்க அடிகளார் ஒரு ஜோதி வழிப்பட்டுச்
சித்தர். சனாதன தர்மம் வழி சென்றவர். அன்று தந்தை கருணாநிதி ராமாநுஜஜரை கையில்
ஏந்தி சம குலா தர்மம் என பிதற்றி தேர்தலில் தோல்வியுற்றார். இன்று மகன்
ஸ்டாலின் இராமலிங்க வழிபாட்டை ஆண்டாள் பிரியதர்ஷினி மூலம் பிஜேபிக்கு எதிரான
பிரச்சார ஹிந்து உணர்வாக அக்கா முயல்கிறார் . நினைத்தால் வேடம் ராமாயணம்
முதலியன; இல்லையெனில் தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை எனும் வாதம் . வீட்டில்
கோயில் குளம் கற்பூரம்; வெளியில் வேறு ஒரு வேஷம். மனுவின் வாதம் அன்று செப்பிய
அடிகளார், இன்றும் அஃதே என உணர்த்துகிறாரோ ?    K Rajaram  IRS  22 11 23

---------- Forwarded message ---------
From: Venkatachalam Subramanian <[email protected]>
Date: Tue, 21 Nov 2023 at 20:47
Subject: மனுமுறை கண்ட வாசகம்
To: mintamil <[email protected]>


ஓம்.திருவருட் பிரகாசப் பெருமான்
திருவாய் மலர்ந்தருளிய
மனு முறை கண்ட வாசகம்
உரைநடைச் செய்யுள்.   ஓம்.
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தோனோ !
வலிய வழக்கிட்டு மானம் கெடுத்தேனோ!
தானம் கொடுப்போரை தடுத்து நின்றேனோ!
கலந்த சிநேகிதரை கலகம் செய்தேனோ!
மனமொத்த  நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ!
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
உயிர் கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசை காட்டி மோசஞ்செய்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர்  முகத்தைப் பாராதிருந்தேனோ!
கோள் சொல்லி குடும்பங் குலைத்தேனோ
கற்பழித்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கற்றவர் தம்மை கடுகடுத்தேனோ!
குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்தோனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ!
வரவு போக்கொழிய வழியடைத்தேனோ!
தருமம் பாராது தண்டம் செய்தேனோ!
களவு செய்வோருக்கு உளவு சொன்னேனோ
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்த்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
ஊன் சுவையுண்டு உடலை வளர்த்தேனோ!
பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ!
அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ!
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழித்தேனோ!
பகை கொண்டு அயலோர் பயிரை அழித்தேனோ!
கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
கன்றுக்குப் பாலூட்டாது கட்டிவைத்தேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
பெரியார் பாட்டில் பிழை சொன்னேனோ!
தவஞ்செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
மாதா பிதாவை வைது நின்றேனோ
தெய்வத்தை இகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ!
ஓம்

-- 
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddvtt-6dyJ8Ke5VC9XBu%3DKhDd%2BiSmYQOAq_yi%3DW11ZGVsw%40mail.gmail.com
<https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddvtt-6dyJ8Ke5VC9XBu%3DKhDd%2BiSmYQOAq_yi%3DW11ZGVsw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopQks7EJ0HkptNNh2rbB7wAWh%2BfLBy4Cu%2BWBE7K-oODvw%40mail.gmail.com.

Reply via email to