Ceylon Tamil is from west Bengal and Oriya accent from where the Sri Lanka
migrated after Ramayana as envisaged by a few like Patnaik. So the bengali
music pronounced tamil words are that of Sri Lanka. However Bible Tamil is
totally different, which is adopted by all till date without modifications
, from the style it was translated then. The original translation of the
New Testament into the Tamil language was done in 1715. It was done by
Danish Christian Missionary Bartholomaeus Ziegenbalg at Tarangambadi of
Tamil Nadu { it is close to Mayuram aka Mayavaram which has a beautiful
beach, where i used to spend evenings near the dilapidated church in 70s.
}. The earliest printing press in Tamil was built by Ziegenbalg, one of the
first Protestant missionaries who visited India. This tamil we can hear
even today in many churches.  K Rajaram   IRS 241123

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Fri, 24 Nov 2023 at 06:03
Subject: Fwd: sujatha -Soap in Bible
To:



*ரேடியோ சிலோனில் ஒலிபரப்பாகும் கிறித்தவ நிகழ்ச்சிகளை சில சமயம் அவைகளின்
விநோதமான தமிழுக்காகக் கேட்கிறேன். ரட்சிக்கப்பட்டும், விசுவாசிக்கப்பட்டும்,
நேசிக்கப்பட்டும், வேறு வேறு விதமான செயப்படு பொருள்களிலேயே உலவும் இந்தச்
சுவிசேஷம் திடீரென்று ஜொலிக்கிறது. "என் ராஜாவே எம் எல்லோரையும் உம்
இரத்தத்தால் மூடும் சுவாமி."*

*                               @@@@@@@@*


*என்னதான் ஆனார்கள் இந்த பீட்டில்ஸ் இளைஞர்கள்? பிரிந்துபோன பின் அவர்களைப்
பற்றிப் பேச்சே இல்லை. ஒரு காலத்தில் அவர்கள் வருமானம் பிரிட்டனின்  டிஃபென்ஸ்
பட்ஜெட்டைவிட அதிகமாக இருந்தது. இப்போது எல்லாம் ஓய்ந்த பிறகு அவர்களின் ஒரே
ஒரு 'லாங் ப்ளே' இசைத்தட்டு, நிச்சயம் இந்த நூற்றாண்டின் இறுதி வரைகூட
நிலைத்து நிற்கும் என நினைக்கிறேன். அதை 'பாப்' யுகத்தின் தேசிய கீதம் என்று
சொல்லலாம். "ஸார்ஜெண்ட் பெப்பர்ஸ் லோன்லி ஹார்ட்ஸ் கிளப்" (Sgt.Pepper’s
Lonely Hearts Club) என்ற சிக்கலான பெயர் கொண்ட அந்த இசைத்தட்டில் பதிந்த
பாடல்களின் இசை இந்திய சித்தாரிலிருந்து ஆப்ரிக்க நாட்டுப்பாடல்கள்,
ஸ்காண்டிநேவிய கீதங்கள், பரீட்சார்த்தமான ஆர்கன் எலக்ட்ரானிக்கல், ட்ராஃபிக்
சப்தங்கள் எல்லாவற்றையும் இணைத்து ஒருவிதமான ஓவியம். A day in the life என்கிற
ஒரு பாட்டில்  I am turning myself என்பதுடன் புறப்படும் வயலின் பின்னல்கள்
ஒரு எல்.எஸ்.டி. அனுபவம். அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.*

*                                   @@@@@@*



*கணையாழி ஆசிரியர் இந்தப் பகுதியில் இலக்கிய சம்பந்தமான விஷயங்கள் அதிகம்
இருப்பதாகச் சொன்னார். அதை அவர் விரும்பினாலும் கொஞ்சம் அதிகமே என்றார். அவர்
சொல்வதில் உண்மை இருக்கிறது. என் ஆரம்ப காலப் பக்கங்களை நீங்கள்
பார்த்திருந்தால் அவைகளில் நிறைய வெளி விஷயங்கள் இருந்ததை கவனித்திருக்கலாம்.
எனவே இனி அப்பாற்பட்ட விஷயங்கள் ஏதாவது ஒன்றாவது ஒவ்வொரு  மாதமும்  தர
 உத்தேசித்திருக்கிறேன்.  ஆரம்பிக்கலாமா?  இதோ.பைபிளில்  சோப்பு
உபயோகிப்பதைப்  பற்றிச்  சொல்லி   இருக்கிறது   தெரியுமா!*

*ஜெரெமையா 2:22 - "நீங்கள் எவ்வளவுதான் சோப்பை உபயோகித்து அலம்பிக் கொண்டாலும்
உங்கள் பாவம் எனக்குப் புலப்பட்டுவிடுகிறது."*

*-சுஜாதா (1975)*

**************************************

*Chittanandam*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopo1%3D78hBr3P4DBAPYxbMtfjKRPDJ3xGDV-%3DK22ooN%3DBQ%40mail.gmail.com.

Reply via email to