Brilliant and absolute roudram KR IRS 291223

On Thu, 28 Dec 2023 at 22:08, Venkatachalam Subramanian <
[email protected]> wrote:

> ஓம
> அமெரிக்காவின் பூஜே சௌண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் சுகுவாமிஷ்
> பழங்குடியினர். அவர்களின் தலைவராக விளங்கியவர் சியாட்டல். அவர் அப்பகுதி
> யிலுள்ள இயற்கை வளங்கள் சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதை
> வலியுறுத்தி அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் ஒன்று எழுதினார்.
> அக்கடிதம் வருமாறு
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> மேதகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு,
>  வணக்கம். இந்த பூமிக்கு இணக்கமாக உள்ள வானத்தை எப்படி விற்கவோ வாங்கவோ
> முடியும்? இவ்வாறு செய்யவேண்டும் என்ற எண்ணமே வேடிக்கையாகத் தோன்றுகிறது.
> காற்றின் தூய்மையையும் நீரின் உயர்வும் யாருக்கும் சொந்தமானவையல்ல.
> அப்படியிருக்கையில் நீங்கள் எவ்வாறு அவற்றை விலை கொடுத்து வாங்க முடியும்?
>       இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்கு  புனிதமான தாகும்.
>  கூடவே மின்னும் ஒவ்வொரு ஊசி யிலையும் எல்லாக் கடற்கரைகளும் கரு மரங்களில்
> தவழும் பனித்துனிகளும் இன்னிசை எழுப்பித் திரியும் பூச்சி வகைகளும் எம்
> மக்களின் நினைவிலும்  வாழ்விலும் மிகவும் புனிதமானவை. பாலூறும்
> மரத்திலிருந்து ஒழுகும் திரவம் கூட, செவ்விந்தியர்களின்  நினைவுகளைச் சுமந்து
> நிற்கின்றது.
>    எமது மக்கள், இந்தபூமியை எப்பொழுதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இதுவே
> எமக்குத் தாயாகும். நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்; இந்த மண்ணும்
> எமக்கு உரியதாகும். இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள்.
> மான்கள்,குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள். மலை முகடுகள்,
> பசும் புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல் சூட்டின் இதமான
> கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள்  எல்லாமும் ஒரே குடும்பம்..
> வாஷிங்டன் பெருந்தலைவர் எங்கள் நிலங்களை வாங்க விரும்பம் தெரிவித்த போது,
> நாங்கள் மன நிறைவுடன் வாழ எங்களுக்கென்று ஒரு தனியிடம் ஒதுக்கித் தருவதாகவும்
> கூறியிருக்கிறார். எனவே, அவர் எங்களுக்குத் தந்தையாகவும் நாங்கள் அவருடைய
> பிள்ளைகளாகவும் ஆகிறோம். எனினும், இந்த நிலமானது எங்களுக்கு மிகவும்
> புனிதமானது என்பதால் இதற்குச் சம்மதிப்பது என்பது மிகவும் இயலாத ஒன்றாகும்.
> இந்நிலையில் எங்களுடைய நிலத்தை வாங்கும் உங்கள் திட்டத்தைப்
> பற்றிச்  சிந்திப்போம்.
>      ஏரிகளில்  பிரதிபலிக்கும்  நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல்
> நிகழ்வுகளை நினைவு கூர்பவை. இந்த நீரின் முணுமுனுப்புகள் எம்
> பாட்டன்மார்களின் குரல்களே ஆகும். இந்த ஆறுகள் யாவும் என் உடன் பிறந்தவர்கள்.
> இவர்கள் தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள். எம்மக்களின் தோணியையும் இவர்களே
> சுமந்து செல்கின்றனர். இங்குள்ள ஓடைகளிலும், ஆறுகளிலும் ஓடும் வனப்பு மிகும்
> நீர் ஆனது வெறும் தண்ணீரன்று. எமது மூதாதையரின் குருதியாகும். இந்நிலம்
> புனிதமானது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். உங்கள்
> குழந்தைகளுக்கும் இதனைக் கற்றுக் கொடுங்கள்.
>     எமது வாழ்க்கை முறையின் சிறப்புகள் உங்களுக்குத் தெரியாது என்பது
> எங்களுக்குத் தெரியும். ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியும் அதற்கடுத்துள்ள நிலப்
> பகுதியும் உங்களுக்கு ஒன்று தான். நீங்கள் அயலவர்கள். இந்நிலத்திலிருந்து
> தேவையானவற்றை எடுத்துச் செல்லவே நீங்கள் இங்கு வருகின்றீர்கள்.
>     இந்த பூமியானது உங்களின் உடன் பிறந்தார் அன்று; பகைவரே,இதனை வென்று
> கையகப்படுத்திய பின் நீங்கள் வேறு இடத்திற்கு நகர்ந்து விடுவீர்கள். நீங்கள்
> உங்கள் தந்தையரின் இடுகாடுகளைக் கூட மறந்துவிட்டு வெகுதூரம்
> சென்றுவிடுவீர்கள்.  பிறப்புரிமைக்குரிய சொந்த மண்ணையும் கூட நீங்கள் மறந்து
> விடுவீர்கள். நிலத்தை வாங்குவதும் விற்பதும்  உங்களுக்கு ஆடுகள் அல்லதுமணிகள்
> விற்பது போன்றவை. உங்களுடைய கோரப்பசியானது  இப்பூமியைக் கொன்றழித்துப்
> பாழாக்கி அதனைப் பாலைவனம் ஆக்கிவிடும். ஆனால் நாங்கள்  பூமியைத் தாயாகவும்
> வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள்.
>     எங்களுடைய  வாழ்வு முறை உங்களுடைய வாழ்வுமுறையிலிருந்து எந்த அளவு
> மாறுபட்டது என்று எங்களுக்குத் தெரியாது. உங்களுடைய நகரங்களின்
> காட்சிகளெல்லாம் எமது செவ்விந்தியர்களின் கண்களை உறுத்துகின்றன.
>       உங்கள் நகரங்களில் அமைதியான இடம்  எதுவுமில்லை. நீங்கள் வாழும் எந்த
> ஓர் இடத்திலும்  அசைந்தாடும் இலைகளின் ஓசைகளையோ, பூச்சி இனங்களின்
> ரீங்காரங்களையோ கேட்க முடிவதில்லை. மாறாக, சடசட வொலிகள் காதைப் பிளக்கின்றன.
> மகிழ்ச்சியூட்டும் இராக்கூவற் பறவைகளின் ஒலிகளையோ, குளத்தைச் சுற்றிக்
> கேட்கும் தவளைகளின் கூச்சல்களையோ கேட்காத வாழ்வென்ன வாழ்வு? நான் ஒரு
> செவ்விந்தியன் என்பதால் இதனை எவ்வாறு புரிந்துகொள்வதெனத் தெரியவில்லை.
>     எம்மக்கள் யாவரும் அமைதியான குளத்தின் முகத்தை முகந்து வரும் தென்றலின்
> இன்னோசையையும்,நடுப்பகலில் பெய்யு மழையால் எழும் மண்வாசனையையும் தேவதாரு
> மரத்திலிருந்து பறக்கும் இலைகளின் மணத்தையும் நுகர்வதை விரும்புபவர்கள்.
>     நாங்கள் காற்றை மிகவும் மதித்துப் போற்றுபவர்கள். விலங்குகள், மரங்கள்,
> மனிதர்கள் உள்ளிட்ட யாவற்றுக்கும் சுவாசித்தல் பொதுவானது. பொதுவான ஒருகாற்றையே
> இவையாவும் சுவாசிக்கின்றன. நீங்கள் சுவாசிக்கும் காற்றைப் பற்றி
> சிந்தித்ததில்லை. இந்தக் காற்றானது அனைத்து உயிர்களையும் காக்கிறது.
> இவ்வுணர்வுகளைச் சுமந்து நிற்கும் காற்றின் இன்றியமையாமையை, நாங்கள் நிலத்தை
> விற்றுவிட நேர்ந்தபின்னரும் நீங்கள் மறக்கவே கூடாது.
>    எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள்
> எரித்த சாம்பலால் ஆனதாகும். இந்நிலமே எங்கள் தாயாகும். எமது உறவுமுறையாரின்
> வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச்
> சொல்லிக்கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும்  நீங்கள் சொல்லிக் கொடுங்கள்.
> அப்போதுதான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.
>     இப்பூமியின் மீது எது வந்து வீழ்ந்தாலும் அவையெல்லாம் பூமித் தாயின்
> மீதுவந்து விழுவனவேயாகும். மேலும் இப்பூமித்தாயின் மீது மக்கள் துப்பக்
> கூடுமானால் அஃது அவர்கள் தம் தாய்மீது துப்புவதற்கு ஒப்பானதாகும்.
>         இந்நிலமானது கடவுளும் மதிக்கக் கூடிய ஒன்றாகும். ஆகவே, இதற்குக்
> கெடுதல் செய்வதென்பது அதனைப் படைத்த கடவுளை அவமதிக்கும் செயலாகிவிடும்.
> நீங்கள் படுத்துறங்கிய இடத்தை நீங்களே அசுத்தப்படுத்தினால் ஒருநாள் இரவு
> நீங்கள் உங்கள் குப்பைகளுக்குள்ளேயே மூச்சுமுட்டி இறந்துபோகக்கூடும்.
>       இப்பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவதையும் எங்குப் பார்த்தாலும்
> மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதையும் தொன்மையான மலைகளை மறைத்து தொலைபேசிக்
> கம்பிகள் பெருகிவருவதையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.    இங்கிருந்த
> புதர்க்காடுகள் எங்கே சென்றன? மலக் கழுகுகள் எங்கே சென்றன?  விரைவாக ஓடக்கூடிய
> மட்டக் குதிரைகளையும் வேட்டையாடி அழித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
> இப்படித்தான் வாழவேண்டும் என்ற வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.
>       நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக இருந்தால் எங்கள் நிலத்தை
> நாங்கள் நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள். நாங்கள் எப்படிக் காப்பாற்றி
> வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள். முழுமையான   விருப்பத்தோடு உங்கள்
> குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள். நிலத்தை நேசியுங்கள்;
> இயற்கை நம் எல்லோரையும் நேசிப்பதைப்போல.
>
> தங்கள் உண்மையுள்ள
>
>             சியாட்டல்.
> -=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-===-=
>     இக்கட்டுரை பக்தவத்சல பாரதி எழுதிய தமிழகப் பழங்குடிகள்
> எனும் நூலிலிருந்து எடுத்துத்தரப்பட்டது.
> ve.Subramanian Aum
> -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-==
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvRkiGkd7JvONvETdunrZ4xXftZc89uytF1GGsowYum9Q%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvRkiGkd7JvONvETdunrZ4xXftZc89uytF1GGsowYum9Q%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorBmNeeqacgN_eLyTNrNN%2BLAKMJd0Mh3PwMgG1UoSPxKg%40mail.gmail.com.

Reply via email to